Skip to main content

Posts

Showing posts from September, 2020

System (ICT tamil notes) (G.C.E advanced level) part 01

தகவல் முறைமை முறைமை என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்​கோளை அடைய ஒரு திட்டத்தின் படி ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று சார்ந்த கூறுகளின் ஒரு ஒழுங்கமைப்பாகும். முறைமையின் வகைப்படுத்தல் வகை 01 திறந்த முறைமை மீடிய முறைமை வகை 02 மனிதனால் உருவாக்கப்பட்டது இயற்கையான முறைமை தகவல் முறைமைகள் 1. அலுவலகத் தன்னியக்க முறைமைகள் (OAS) இது ஒரு வணிகத்தினை நடத்தத் தேவையான, அன்றாட வழக்கமான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கும் மற்றும் பதிவு என்பனவற்றை மேற்கொள்ளவும் உதவுவதோடு ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு மட்ட பயனர்களுக்குச் சேவை செய்யும் ஒரு தகவல் முறைமையாகும். 2. பரிமாற்ற முறைவழியாக்கல் முறைமைகள் (TPS) இது சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் போன்ற ஒரு கணினி முறைமையாகும், மின்அஞ்சல் மற்றும் பணி திட்டமிடல் அமைப்புகள் ஆகியலை அலுவலகத்தில் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வடிவமகை்கப்பட்டுள்ளன. 3. முகாமைத்துவ தகவல் முறைமைகள் (MIS) இது ஒரு வணிகத்தினை நடத்தத் தேவையான, அன்றாட வழக்கமான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கும் மற்றும் பதிவு என்பனவற்றை மேற்கொள்ளவும் உதவுவதோடு ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு மட்ட பயனர்களுக்குச் சேவை செய...

Networking (Tamil Notes For ICT) (G.C.E Advanced level) Part 03

கணினி வலையமைப்பு 03 பல வலையமைப்புப் பிரயோகங்கள்ஒரு சாதனத்தில் இயங்கும் என்பதால், ஆரம்ப இடத்திலிருந்து இலக்கு நோக்கி செல்லும் தரவுப் பொட்டலங்களின் வாயிலாகச் செல்லும் பிரயோக மென்பொருட்கள் சரியாகச் செல்கின்றனவா என்பதனை உறுதிசெய்யக் கணினிகளுக்கு ஏதாவதொன்று தேவைப்படும். இயங்கும் பிரயோக தொடர்பாடலில் காணப்படளும் ஒவ்வொரு செயல்முறையும் ஒதுக்கப்பட்ட வலையமைப்பு இடைமுகத்தினூடாகத் தொடர்பாடலினை மேற்கொள்கின்றது. இது குதை என அழைக்கப்படுகின்றது. வலையமைப்பில் காணப்படும் ஒவ்வொரு குதைக்குமென த் தனிச்சிறப்பான எண் உண்டு. இதனைக் குதை எண் என்பர் மற்றும் இது சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்ட IP முகவரிகளுடன் இணைந்து ஒவ்வொரு முறைவழிக்குமாகத் தனிச்சிறப்பாகக் காணப்படும். இது குறித்த விருந்தோம்பலில் நடைபெறுகின்றது. வெவ்வேறு கணினிகளில் இயங்கும் செயல்முறைகள் ஒரே இலக்கிற்குத் தரவினை அனுப்பும் போது, வெவ்வேறு முறைவழியாக்கதில் காணப்படும் குகை எண்ணும் IP முகவரியும் குறித்த முறைவழியாக்கத்தினைத் தனிச்சிறப்பாக அடையாளப்படுத்தப் பயன்படும். குதை முகவரியினதும் IP முகவரியினதும் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்படும் முறைவழியாக்கமும் மற்றும்...

Networking (Tamil Notes For ICT) (G.C.E Advanced level) Part 02

 கணினி வலையமைப்பு 02 பொது ஆளியிடப்பட் தொலைபேசி வலையமைப்பு PSTN - Dial Up Connection - மோடெம் மற்றும் தொலைபேசி இணைப்பு என்பலை சேவை வழங்குபவரிடம் இணைப்பினை ஏற்படுத்த அவசியமானதாகும். பண்பேற்றம், பண்பிறக்கம் மற்றும் மோடம் மொடம் ஆனது இலக்கமுறை சமிக்ஞையினை ஒப்புமை சமிக்ஞையாக மாற்றி (பண்பேற்றம்), பண்பேற்றப்பட்ட சமிக்ஞையினை தொலைபேசி இணைப்பினூடாகச் செலுத்தும் பின் பெறும் இடத்தில் ஒப்பிமை சமிக்ஞையினை இலக்க முறை சமிக்ஞையாக மாற்றம் செய்யும் (பண்பிறக்கம்) ஆகவே பெறும் சாதனம் ஆனது தவினை சரியாகப் பெற்றுக் கொள்ளும். தரவுகளைப் பண்பேற்றம் செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. துடிப்பு குறியீடு பண்பேற்றம் என்பது ஒரு ஒப்புமை சமிக்ஞையின் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். பின்னர் இந்த மாதிரிகள் மூலம் மூல சமிக்ஞையினைப் பெற முடியும். கணினி வலையமைப்பின் இடத்தியல் முறைகள் பாட்டை இடத்தியல் பாட்டை இடத்தியலின் பிரதான வடத்தின் இரண்டு முடிவிடங்களிலும் முடிப்பிகள் காணப்படும். அனைத்து முனையங்களும் (கோப்பு சேவையகம் பணிநிலையங்கள், சாதனங்கள்) பிரதான வடத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும், பகிரப...

House water supply and Garbage disposal

வீட்டு நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவம் நீர் வட்டம் யா தாயினும் இடத்தில் அல்லது யாதாயினும் ஓர் அவத்தையில் உள்ள நீர் வேறொறு இடத்திற்கு அல்லது வேறொறு அவத்தைக்கு வெவ்வேறு காலப்பகுதிகளை கடந்து மீண்டும் பழைய நிலையை அடைதல் நீர் வட்டம் எனப்படும். ஆவியாதல் நிலமேற்பறப்புமீதுள்ள நீர் நிலைகளில் உள்ள நீர் திரவ நிலையிலிருந்து/ அவத்தையிலிருந்து வாயு நிலைக்கு நீராவியாய் மாறி வளிமன்டலத்திற்கு சேருதல் ஆவியாதல் எனப்படும். (திரவ அவத்தையிலிருந்து வாயு அவத்தைக்கான மாற்றம்) சூரிய வெப்பத்தின் காரணமாகவே இது பெறுமளவில் நிகழும். ஆவியுயிர்ப்பு தாவரங்களில் இருந்து நீர் ஆவியாகி வளிமன்டலத்திற்கு இலக்கப்படல் ஆவியீர்ப்பு எனப்படும்.  தாவரங்கலால் நில நீர் உறிஞ்சப்படுகின்றது. ஒடுங்குதல் நீராவிநிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் செயற்பாடு ஒடுங்குதல் எனப்படும். நீஶாவி மேலெலும் போது வெப்பநிலைகுறைவினால் குளிர்வடைகிறது இதனால் நீராவி சிறிய நீர் துளிகளாக ஒடுங்கும் இந்நீர் துளிகள் மூலம் முகில்கள் உருவாகின்றன. படிவு வீழ்ச்சி நீரானது தின்ம நிலையிலோ அல்லது திரவநிலையிலோ முகில்களில் இருந்து புவி மீது விழுதல் படிவு வீழ்...

Networking (Tamil Notes For ICT) (G.C.E Advanced level) Part 01

  கணினி வலையமைப்பு தரவுத் தொடர்பாடல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தொடர்பாடல் சாதனங்களுக்கிடையில், தரவு ஊடுகடத்தும் ஊடகத்தின் ஊடாகத் தரவுகளை அனுப்பும் செயற்பாடு தரவுத்தொடர்பாடல் எனப்படும். கணினிகளுக்கிடையிளான இத்தகைய தொடர்பு கணினி வலையமைப்பு எனப்படும்.  தரவுத் தொடர்பாடல் ஒன்றில் காணப்படும் பிரதான அம்சங்கள் மூலம்/ அனுப்புனர் ஊடுகடத்தும் முறை/ ஊடுகடத்தும் மூலம் இலக்கு/ பெறுனர் கணினி வலையமைப்பு தரவிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் நோக்குடன் இணைக்கப்பட்ட இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கணினிகளைக் கொண்ட தொகுதி கணினி வலையமைப்பு எனப்படும். சமிக்ஞைகள் 1. ஒப்புமைச் சமிக்ஞைகள் ஒப்புமை சமிக்ஞைகள் தொடர்ச்சியாக அலை வடிவில் தரவுகளை கொண்டு செல்கின்றது. இது இலத்திரனியல் அலை ஊடாகப் பிரதியிடப்படுகின்றது. உதாரணம் - சத்தம், ஔி, ​வெப்பநிலை 2. இலக்க முறைச் சமிக்ஞைகள் இலக்க முறைச் சமிக்ஞைகளானது ஒரு இலத்திரனியல் அழுத்தமாக அல்லது மின்சாரமாகக் காணப்படும். இது நேரத்துடன் மாற்றமடைந்து கொண்டு செல்லும். இது ஒரு முனையிலிருந்து மறு முனைக்குத் தரவுகளைப் பரிமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இலக்க முறை என்பத...

BST Unit 05 (bio system technology tamil notes) 01

தாவர இனப்பெருக்க நுட்பமுறைகள் தாவர இனப்பெருக்கம் எனப்படுவது தாவரமொன்று தன்னை ஒத்த வளமான எச்சம் அல்லது மகட்தாவரத்தை உருவாக்கும் செயற்பாடு ஆகும். இது பிரதானமாக இரு முறைகளில் நடைபெறும் இலிங்கமில் முறை/ பதிய முறை இலிங்க முறை  இலிங்கமில்/ பதிய முறை இனப்பெருக்கம் தாவரம் ஒன்றின் பதியப் பகுதிகளினால் நடைபெறும் இனப்பெருக்கம் பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும். இது இரு வகைப்படும் இயற்கை பதிமுறை  செயற்கை பதியமுறை இயற்கை பதியமுறை இனப்பெருக்கத்தின் நன்மைகள் எவ்வித செலவும் இல்லாமல் மிக இலகுவாக இனப்பெருக்கிக் கொள்ளலாம். தாய்த்தாவரத்தை ஒத்த மகட் தாவரத்தைப் பெறலாம். வித்துக்களை உருவாக்காத அன்னாசி, வாழை போன்ற தாவரங்களையும் இனப்பெருக்கலாம். இவ்வினப்பெருக்கம் இயற்கையான முறையில் நடைபெறுவதனால் தொழிநுட்ப அறிவு தேவையில்லை. குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெறலாம். செயற்கை பதிய முறை இனப்பெருக்கம் ஒரு தாவரத்தின் தண்டு, வேர், இலை போன்ற பதியப் பகுதிகளை செயற்கை நிபந்தனைகளின் கீழ் வேர் கொள்ளச் செய்து புதிய மகட் தாவர சந்ததியை பெறுதல் செய்ற்கை பதியமுறை எனப்படும். செயற்கை பதியமுறை இனப்பெருக்கமானது 02 முறைகளில் மேற்...

Tamil notes for Bio system technology Unit 06

உணவின் சுகாதாரத் தன்மை உணவு உட்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள் மனிதன் தனது போசணைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உணவை உட்கொள்ளும் போது மேற்படித் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உணவொன்று நுகர்வோனை திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வுணவில் சில இயல்புகள் காணப்பட வேண்டும் இவை உணவின் புலணுனர்வு இயல்பு எனப்படும். புலணுனர்வு இயல்புகள் உணவின் நிறம் மணம் சுவை இழையமைப்பு சகல போசாக்கும் தேவையான அளவு உள்ளடக்கப்பட்ட உணவு நிறையுணவு எனப்படும். ஆரோக்கியமான உணவொன்றை உட்கொண்ட பின்னர் வேறு நோய்களோ, உபாதைகளோ ஏற்படக்கூடாது. இந்நிலமை தரமான உணவினால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும். உணவின் தரம் குறிப்பிட்ட உணவொன்றிலுள்ள தனித்துவமான இயல்புகள் நுகர்வோரினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் காணப்படுவதே உணவின் தரம் ஆகும். உணவின் நிறம், சுவை, மணம், இழையமைப்பு, போசணை பதார்த்தங்கள் ஆகிய தனித்துவமான இயல்புகள் உணவின் தரத்தை தீர்மானிக்கின்றன. அதே வேளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், பீடை நாசினிகள், கழிவுப் பதார்த்தங்கள் அடங்கியிருத்தலானது உணவின் தரத்தை குறைக்கின்றது. உணவின் தரத்தை குறைக்கும் பௌதீக இயல்புகள் ...