வீட்டு நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவம்
நீர் வட்டம்
யாதாயினும் இடத்தில் அல்லது யாதாயினும் ஓர் அவத்தையில் உள்ள நீர் வேறொறு இடத்திற்கு அல்லது வேறொறு அவத்தைக்கு வெவ்வேறு காலப்பகுதிகளை கடந்து மீண்டும் பழைய நிலையை அடைதல் நீர் வட்டம் எனப்படும்.

ஆவியாதல்
- நிலமேற்பறப்புமீதுள்ள நீர் நிலைகளில் உள்ள நீர் திரவ நிலையிலிருந்து/ அவத்தையிலிருந்து வாயு நிலைக்கு நீராவியாய் மாறி வளிமன்டலத்திற்கு சேருதல் ஆவியாதல் எனப்படும். (திரவ அவத்தையிலிருந்து வாயு அவத்தைக்கான மாற்றம்)
- சூரிய வெப்பத்தின் காரணமாகவே இது பெறுமளவில் நிகழும்.
ஆவியுயிர்ப்பு
- தாவரங்களில் இருந்து நீர் ஆவியாகி வளிமன்டலத்திற்கு இலக்கப்படல் ஆவியீர்ப்பு எனப்படும்.
- தாவரங்கலால் நில நீர் உறிஞ்சப்படுகின்றது.
ஒடுங்குதல்
- நீராவிநிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் செயற்பாடு ஒடுங்குதல் எனப்படும்.
- நீஶாவி மேலெலும் போது வெப்பநிலைகுறைவினால் குளிர்வடைகிறது இதனால் நீராவி சிறிய நீர் துளிகளாக ஒடுங்கும் இந்நீர் துளிகள் மூலம் முகில்கள் உருவாகின்றன.
படிவு வீழ்ச்சி
- நீரானது தின்ம நிலையிலோ அல்லது திரவநிலையிலோ முகில்களில் இருந்து புவி மீது விழுதல் படிவு வீழ்ச்சி எனப்படும்.
- முகில்களில் காணப்படும் நீர் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய துளிகலாக மாறும் பின், நிரை அதிகரிப்பு காரணமாக தொடர்ந்தும் முகில்கள் வளிமண்டலத்தில் மிதந்து செல்ல முடியாத நிலை உருவாகும் அப்போது அந்த நீர் மழை, பனி, உறைபனி, மூடுபனி மற்றும் பனிகலந்த மழை ஆகிய முறைகள் மூலம் கீழ் நோக்கி வரும்.
இடை முறிப்பு
- புவிக்கு கிடைக்கும் படிவு வீழ்ச்சி தரை மேற்பறப்பை அடையாது தாவரங்கள் மீது படிதல் இடைமுறிப்பு எனப்படும்.
- இதனால் ஊடுவடிதல், கீழ் வடிதல், ஓடிவடிதல் போன்றன நடைபெறாது.
ஓடிவடிதல்
- மண் நீரினால் நிரம்பி தரையினுல் மேலும் நீர் ஊடுபுக முடியாது தரையின் மேற்பரப்பு வழியே ஓடுதல் ஓடிவடிதல் எனப்படும்.
- இதன் போது நீர் நிலத்தினுள் ஊடு வடிதல், ஆவியாதல் நடைபெறாது
- நீர் நில மேற்பரப்பு வழியே நீர் முதல்களை சென்றடையும்.
ஊடுவடிதல்
- நீர் மண்ணுக்குள் உரிஞ்சப்பட்டு பயனித்தல் ஊடுவடிதல் எனப்படும்.
கீழ் வடிதல்
- கீழ் பன்படை மீது நீர்பயனித்தல் கீழ் வடிதல் எனப்படும்.
ஆழ்கீழ் வடிதல்
- ஆழ் கீழ் மண்படையின் ஊடாக நீர் பயனித்து நீர் நிலைகளை சென்றடைதல் ஆழ்கீழ் வடிதல் எனப்படும்.
அமில மழை
வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு வாயு, நீருடன் தாக்கம் புரிந்து காபனிக் அமிலம் உருவாவதனால் மழை நீர் அமிலத் தன்மையாக காணப்படும்.
pH பெறுமானம் 3 ஐ விட குறையும் போது நீர் ஆனது அமிலத் தன்மையை அடையும் இது அமில மழை எனப்படும்.
மனித செயற்பாடுகள் காரணமாக வளிமன்டலத்தில் சேறும் SO2, NO2 மழை நீருடன் தாக்கம் புரிந்து (H2SO4, HNO3) உருவாகும் அமிலம் காரணமாகவும் மழை நீர் அதிக அலவில் அமிலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
நீர் சுத்திகரிப்பு
மனித செயற்பாடுகள் காரணமாக நீர் மாசடைகின்றது. மாசடைந்த நீரை பயன்படுத்துவது உயிரினங்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தானது எனவே சுத்திகரிப்பு செயற்பாடுகள் மூலம் நீரை சுத்திகரித்து பயன்படுத்த முடியுமாக காணப்படுகிறது.
நீரில் கலந்துள்ள தீங்கு பயக்கும் இரசாயன பொருள்கள் உயிரியல் தொடர்பு கொண்ட மாசாக்கிகள் மற்றும் ஏனைய திண்மப் பதார்த்தங்களாகக் காணப்படும் மாசாக்கிகள், நீரில் கரைந்துள்ள தீங்கு தரும்/ பாதகமான வாயுக்கள் போன்றவற்றை அகற்றிக் கொள்ளும் செயற்பாடு நீர் சுத்தீகரிப்பு எனப்படும்.
- இலங்கையில் பெறும்பாலும் 85% விவாசாய வேலைகளுக்கு நீர் பயன்படுத்தப்படுகின்றது.
- மழை நீர் குடி நீர் அற்ற வேறுதேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.
- கூரையின் மேல் விழும் மழை நீரை சேகரித்து வீட்டு வேலைகளுக்கும், நிலம் மீது விழுந்து ஓடும் மழை நீரை சேகரித்து விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.
கழிவு நீர் சுத்தீகரிப்பு/ பரிகரிப்பு இன் படிமுறைகள்
- பரும்படி வடிகட்டல்/ ஆரம்ப வடிகட்டல்
- காற்றூட்டல்
- திரளச் செய்தல்
- படியச்செய்தல்
- வடிகட்டுதல்
- கிருமியழித்தல்
- சேமித்தல்
பரும்படி வடிகட்டல்
- கழிவு நீர் பரிகரிப்பின் முதலாவது படிமுறை இதுவாகும்.
- நீர் முதல்களில் இருந்து பரிகரிப்பு தொகுதியினுல் செழுத்தப்பட முன் மேற்கொள்ளப்படும் இதன் மூலம் நீரில் மிதக்கும் தின்மப் பதார்த்தங்கள் தாவர பாகங்கள் தடிதண்டுகள் சிறிய உயிரினங்கள் போன்றன அகற்றப்படும்.
காற்றூட்டல்
- இதன் போது நீருடன் நன்கு காற்று கலப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
- நீருடன் நன்கு கலந்து கொள்ளும் ஒற்சிசனினால் நீரில் விரும்பத்தக்க மாற்றங்கள் உருவாகும் இதன் மூலம் நீரில் கரைந்துள்ள ஆவிப்பறப்பு இயல்பு கொண்ட வாயுக்கள் அகற்றப்படும்.
- கற்றூட்டல் வினைத்திரனாக நடைபெற நீரின் பெருமலவுமேற்பரப்பு காற்றுடன் வௌிக்காட்டப்பட வேண்டும்.
- ஈர்ப்பு/ படிவரிசைக் காற்றூட்டல்
- சிவிறி காற்றூட்டி
- உட்புகுத்தல் காற்றூட்டி
- பொறிமுறை காற்றூட்டி
திரளச் செய்தல்
- நீரிலுள்ள அடர்த்தி குறைந்த தொங்கள் பொருற்களை படியச் செய்தல் திரளச் செய்யும் பதார்த்தங்கள் சேர்த்து கலக்கப்படும் இதற்காக அலம் எனும் பதார்த்தம் பயன்படுத்தப்படும்.
படியச் செய்தல்
- நீர்த் தொட்டிகலுக்குள் நீர் சலனம் இன்றி கானப்பட அனுமதிக்கப்படும் பொழுது தொங்கல்களாக காணப்படும் பதார்த்தங்கள் ஈர்ப்பின் மூலம் படியச் செய்யப்படும்.
வடிகட்டுதல்
- திரலல் தொட்டியில் உள்ள நீர் வடிகட்டியின் ஊடாக செலுத்தப்பட்டு வடிகட்டப்படும்.
- வடிகட்டிகலாக மணல் படைகள் பயன்படுத்தப்படும்.
கிருமியளித்தல்
- வடிகட்டிய நீரில் காணப்படும் நுன் அங்கிகளை அகற்றிக் கொள்ள நீரிற்கு கிருி கொள்ளிகள் சேர்க்கப்படும் இதற்காக குளோரின் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இயற்கையான நீர் சுத்திகரிப்பு
- நீர் தடைகளின் மேற்பாய்ந்து ஓடுகையில் இயற்கையாக காற்றூட்டல் நடைபெறும்.
- மெல்லிய நீர் படலத்தில் சூரிய ஔிபடும் போது கிருமிகள் அளிகின்றது.
- நீர் தேக்கத்தில் நீர் தேங்கி இருக்கும் போது அடையல் மன்டியாக படிகின்றது.
நீர் விநியோகம்
- சுத்திகரிக்கப்பட்ட நீர் பம்புதல் மூலம் சேவைதாங்கியில் சேமிக்கப்படும்.
- சேமிக்கப்பட்ட நீர் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தூரத்தில் உயரமான இடங்களில் அமைந்துள்ள வேவை வினியோக தாங்கியிற்கு பெரிய குளாய்கள் மூலம் பம்பப்பட்டு அனுப்பப்படும்.
- பின் வினியோக குளாய் தொகுதி மூலம் புவியீர்ப்பின் கீழ் நுகர்வோருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
வீட்டு நிர் வளங்கள்
- சாதாரனமாக வீடுகளுக்கு உயரமான இடத்தில் சேமித்துவைக்கப்பட்ட நீர் தாங்கியிலிருந்து நீர் வழங்கப்படுகிறது. இந்த தாங்கியிற்கு நீர் பின்பவரும் இரு முறைகளில் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
- பிரதான வேவை நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளல்
- கிணற்றிலிருந்து பம்புதல் மூலம் பெற்றுக் கொள்ளல்
வீட்டுக் கழிவு முகாமைத்துவம்
- வீடுகளில் பிரதானமாக சமயலறை களியலறை மற்றும் மலசலகூம் என்பவற்றில் இருநது களிவிகள் உருவாகின்றன.
வீட்டுக் கழிவு வகைள்
கழிவுப் பொருட்களை அகற்றும் முறைகள்
எரித்தல்
- எரித்தலின் மூலம் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் விடுவிக்கப்படுகின்றன.
- வெப்பநிலை காரணமாக மேல் சென்று வெப்பநிலை குறைந்ததும் மீண்டும் கீழே வருகின்றது இது பாதகமான செயற்பாடாகும்.
மீழ் சுழற்சிப்படுத்தல்
- களிவுகளை அகற்றாது வேருதேவைக்காக பயன்படுத்தல் தேவையற்ற திரவியம் ஒன்றாக ஒதுக்கப்பட்டகளிவை வேரு ஒரு தோற்றத்தில் மீழ பயன்படுத்துதல்.
மீள பயன்படுத்தல்
- களிவுகளை முடியுமான அளவு மீழபயன்படுத்தல் இதன் மூலம் களிவு உற்பத்தி ஆவது குறைக்கப்படும்.
அழுகிப்போகச் செய்தல்
- காபன்சேர்வைகள் பக்டீரியாக்களின் இடைநிலை செயற்பாடுகளின் மூலம் உக்கல் அடைய வலிவகுத்தல்
- இந்த செயற்பாட்டை வேகப்படுத்த தேவையான சூழலை ஏற்படுத்த வேண்டும் இதற்காக இயற்கை பங்களிப்பு செய்யும்.
கூட்டுப் பசளை/ கூட்டெரு தயாரித்தல்
- இலைகுலை, இரந்த தாவர விலங்குகளின் விளங்குக் களிவுகளும் நுன் அங்கிகளின் தெழிற்பாட்டில் பிரிகை அடையச் செய்யப்பட்டு கூட்டுப்பசளை உற்பத்தி செய்யப்படும் இது காற்றூள்ள அல்லது காற்றின்றிய நிலைமைகளின் கீழ் நடைபெற்று உருவாகிறது. எனினும் பெரும்பாலும் காற்றுள்ள பிரிகையாக்கல் செயற்பாடே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
- பீப்பாய் முறை
- குவியல் முறை
- குளி முறை
- உயிர்பாத்தி முறை
Comments
Post a Comment