கணினி வலையமைப்பு
தரவுத் தொடர்பாடல்
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தொடர்பாடல் சாதனங்களுக்கிடையில், தரவு ஊடுகடத்தும் ஊடகத்தின் ஊடாகத் தரவுகளை அனுப்பும் செயற்பாடு தரவுத்தொடர்பாடல் எனப்படும்.
- கணினிகளுக்கிடையிளான இத்தகைய தொடர்பு கணினி வலையமைப்பு எனப்படும்.
தரவுத் தொடர்பாடல் ஒன்றில் காணப்படும் பிரதான அம்சங்கள்
- மூலம்/ அனுப்புனர்
- ஊடுகடத்தும் முறை/ ஊடுகடத்தும் மூலம்
- இலக்கு/ பெறுனர்
கணினி வலையமைப்பு
தரவிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் நோக்குடன் இணைக்கப்பட்ட இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கணினிகளைக் கொண்ட தொகுதி கணினி வலையமைப்பு எனப்படும்.
சமிக்ஞைகள்
1. ஒப்புமைச் சமிக்ஞைகள்
- ஒப்புமை சமிக்ஞைகள் தொடர்ச்சியாக அலை வடிவில் தரவுகளை கொண்டு செல்கின்றது. இது இலத்திரனியல் அலை ஊடாகப் பிரதியிடப்படுகின்றது.
உதாரணம் - சத்தம், ஔி, வெப்பநிலை
2. இலக்க முறைச் சமிக்ஞைகள்
இலக்க முறைச் சமிக்ஞைகளானது ஒரு இலத்திரனியல் அழுத்தமாக அல்லது மின்சாரமாகக் காணப்படும். இது நேரத்துடன் மாற்றமடைந்து கொண்டு செல்லும்.
இது ஒரு முனையிலிருந்து மறு முனைக்குத் தரவுகளைப் பரிமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இலக்க முறை என்பது தனித்துவமான பெறுமானங்களைக் குறிக்கின்றது. எனவே, எந்த தகவலையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு விசேடமான பெறுமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இலக்க சமிக்ஞையில் 0 மற்றும் 0 எனும் இரண்டு பெறுமானங்கள் மட்டுமே எந்த ஒரு விடயத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

சமிக்ஞைகளின் இயல்புகள்
- வீச்சம் - அலை ஒன்றின் உயரம் (m)
- அதிர்வென்/ மீடிறன் - ஒரு செக்கனில் குறித்த ஒரு பகுதியினைக் கடந்து செல்லும் அலைகளின் என்னிக்கை (Hz)
- அலைநீளம் - இரண்டு முறைகளுக்கு இடையிலான தூரம் மீற்றரில் அளக்கப்படும்.
- நிலை/ அவத்தை - குறித்த ஒரு நேரத்தில் அலை சுழற்சி முறையின் ஆரம்பிக்கும் நிலை
ஊடகத்தில் பரவும் வேகம்
ஒரு குறிப்பிட்ட ஊடகம் மூலம் அலை பரவுகின்ற வேகம், அவ்வூடகத்தின் பன்புகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகத்தில் இருந்து இன்னுமொறு ஊடகத்திற்கு அலை பரவும் வேகம் மாறுபடும்.
தரவு ஊடுகடத்தல் ஊடகங்கள்
- ஒரு வலையமைப்புச் சாதனத்திலிருந்து பிறிதொரு வலையமைப்புச் சாதனத்திற்கு தரவுகளைப் பரிமாறும் ஒரு பௌதீக ஊடகமாகும்.
- வடமானது வழிப்படுத்தப்பட்ட ஊடகமாகக் கருதப்படுகின்றது.
- இது தரவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னுமொறு இடத்திற்கு அதிர்வெண் மாறாமல் பரிமாற்றுவதற்கு வழிகாட்டுகின்றது.
- தரவு திரிபடைதல் இதனால் குறைக்கப்படுகின்றது.
- இது வடம் இல்லாத தரவு ஊடுகடத்தல் அல்லது வழிப்படுத்தப்படாத ஊடகம் எனப்படும்.
- தரவு ஆனது எந்த திசைவழியேயும் அனுப்பப்படலாம்.
சமிக்ஞைகளின் பன்புகள்
- மறை நிலை - ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒரு அலகு தரவு செல்வதற்கு எடுக்கும் நேரத்தின் வௌிப்பாடாகும். இது பொருவாக மில்லி விநாடிகளில் அளவிடப்படுகின்றது.
- பட்டை அகலம் - பட்டை அகலம் என்பது அதிர்தெவண்களின் வீச்சாகும் இது ஹேட்ஸ் இல் அளவிடப்படுகின்றது.
- இரைச்சல் - இது ஒரு சமிக்ஞையினைத் தந்தாலும் விளக்கத்தையும் வௌிப்படுத்தாது.
- நெய்மை - ஊடகத்திற்கூடாக செல்லும் பொழுது அதன் சமிக்ஞை சக்தியினை குறைக்கின்றது.
- திரிபு - தொடர்பாடல் ஊடகத்தின் கொள்ளளவு மற்றும் இயல்புகள், பரிமாற்றப்பட்ட சமிக்ஞையின் பண்புகளில் ஏற்படுத்தும் மாறுதல்கள்.
எளிய இடத்தியல்
பன்பேற்றம் (Modulation)
பண்பேற்றம் என்பது ஒரு தகவலை அனுப்புவதற்காக அதன் அடிப்பைட இயல்புகளான அதிர்வென், வீச்சம், நிலை என்பனவற்றால் ஒரு உணர் அதிர்வெண் சமிக்ஞை உடன் இணைப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தித் தகவல்களை அனுப்புவதற்குப் பயன்படும் நுட்பமாகும்.
- காவி சமிக்ஞையின் வீச்சத்தினை மாற்றுவதன் ஊடாக பண்பேற்றப்பட்ட அலையினை உருவாக்கி மேற்கொள்ளப்படும் பண்பேற்றம் இதுவாகும். இதன் போது வீச்சம், நிலை என்பன மாற்றமடையாமல் காணப்படும்.
- காவிச் சமிக்ஞையின் மீடிறனை மாற்றவதன் ஊடாக பண்பேற்றச் சமிக்ஞை மாற்றப்படும்.
- ஒரு அலைவரிசை தரவு சமிக்ஞையின் மின்னழுத்தத்தில் மாற்றங்களைப் பிரதிபலிப்பதற்காக ஒரு காவி சமிக்ஞையின் நிலை பண்பேற்றப்படும்.
இலக்க முறைச் சமிக்ஞையினை ஒப்புமை சமிக்ஞையாக மாற்றீடு செய்தல்
- பண்பேற்றப்பட இருக்கும் சமிக்ஞை ஒப்புமை சமிக்ஞை எனின் மூன்று பண்பேற்றத் திட்டங்கள் பயன்படுத்தப்படலாம்.
- இந்த நுட்பமுறையில் ஒப்புமை காவிச் சமிக்ஞையின் வீச்சம் துவித தரவாக பிரதிபலிக்கப்படுகிறது. இலக்கமுறைத் தரவு இலக்க எண் 1 ஐ குறிக்கும் போது வீச்சு 1 ஆகவும் மற்றைய சந்தரப்பத்தில் வீச்சு 0 ஆகவும் பிரதியிடப்படும். காவி சமிக்ஞையின் வீச்சமும் நிலையும் மாற்றமடையாமல் காணப்படும்.
- இந்த மாற்று நுட்பத்தில் ஒப்புமை சமிக்ஞையின் மீடிறன் துவித தரவாக பிரதிபலிக்கப்படுகின்றது.
- இந்த மாற்று நுட்பத்தில் ஒப்புமை காவிச் சமிக்ஞையின் நிலை துவித தரவாக பிரதிபலிக்கப்படுகின்றது.
ஒத்திசைவு
- ஒத்திசைவு இரண்டு சாதனங்களுக்கிடையில் தரவுப்பாச்சல் சரியான முறையில், பெறப்படுதலையும் அனுப்பப்படுதலையும் உறுதிப்படுத்த உதவுகின்றது.
- பொதுவாக சரியான சமிக்ஞை நேரத்தினைப் பராமரிப்பதற்காக ஒரு கடிகார சமிக்ஞை தொடர்ச்சியாக தரவுத்தொகுதியுடன் அனுப்பப்படுகின்றது.
சமிகஞைக் குறிப்பாக்கத் திட்டம்
- Non - return to Zero level - இக் குறியாக்கத்தில் தரவுகளை வகைக்குறிப்பதற்கு 0.1 இற்கான இரண்டு வேறுபட்ட மின்னழு்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒரு பிட் இடைவௌியில் மாறாமல் இருக்கும்.
- Non - return to Zero inverted - இந்த குறியாக்கத்தில் 1 ஆனது பௌதீக மட்டத்தில் நிலைமாற்றம் நடைபெற்றதனையும், 0 எனப்து நிலைமாற்றம் நடைபெறாததையும் குறிக்கின்றது.
- Manchester encoding - இந்த குறியாக்கத்தில் மின்னழுத்தம் குறைந்ததிலிருந்து கூடியதாக அல்லது கூடியதிலிருந்து குறைவாக சமிக்ஞையின் நடுப்பகுதியில் காணப்படும்.
வழுக்களை கையாளுத்ல்
- தரவு பரிமாற்றத்தின் போது சில சந்தர்ப்பங்களில் தரவு பிட்டுக்கள் பல்வேறு காரணங்களினால் இழக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் தரவு பிட் பெறப்பட்டது தவறாகும்.
- பிழைகண்டறிதல் என்பது தரவு பரிமாற்றத்தின் போது தரவு பிட்டு மாற்றத்திற்கு உள்ளானதைக் கண்டறியும் முறையாகும்.
- பிழைதிருத்தம் மற்றும் மீட்டெடுப்பு வழிமுறைகள் பிழையாகப் பெறப்பட்ட தரவு பிட்களை அடையாளம் கண்டு அதனைச் சரிசெய்ய உதவும் ஒரு வழிமுறையாகும்.
சமநிலைச் சோதனை
- இது ஒரு எளிய பிழைகண்டறிதல் நுட்பமாகும். அனுப்பப்படும் தரவின் பிட் எண்ணிக்கையுடன் கூடுதலாக ஒரு பிட் சேர்க்கப்பட்டு அனுப்பப்படும்.
- தரவு பிட் இல் காணப்படும் 1 களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு அது ஒற்றை எண் எனின் 1 இனையும் இரட்டை எண் எனின் 0 இனையும் கூட்டுவது இரட்டை ச் சமநிலையாகும்.
- தரவு பிட் இல் காணப்படும் 1 களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு அது ஒற்றை என் எனின் 0 இனையும் இரட்டை எண் எனின் 1 இனையும் கூட்டுவது ஒற்றைச் சமநிலையாகும்.
Comments
Post a Comment