தாவர இனப்பெருக்க நுட்பமுறைகள்
- தாவர இனப்பெருக்கம் எனப்படுவது தாவரமொன்று தன்னை ஒத்த வளமான எச்சம் அல்லது மகட்தாவரத்தை உருவாக்கும் செயற்பாடு ஆகும்.
இது பிரதானமாக இரு முறைகளில் நடைபெறும்
- இலிங்கமில் முறை/ பதிய முறை
- இலிங்க முறை
இலிங்கமில்/ பதிய முறை இனப்பெருக்கம்
- தாவரம் ஒன்றின் பதியப் பகுதிகளினால் நடைபெறும் இனப்பெருக்கம் பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.
இது இரு வகைப்படும்
- இயற்கை பதிமுறை
- செயற்கை பதியமுறை
இயற்கை பதியமுறை இனப்பெருக்கத்தின் நன்மைகள்
- எவ்வித செலவும் இல்லாமல் மிக இலகுவாக இனப்பெருக்கிக் கொள்ளலாம்.
- தாய்த்தாவரத்தை ஒத்த மகட் தாவரத்தைப் பெறலாம்.
- வித்துக்களை உருவாக்காத அன்னாசி, வாழை போன்ற தாவரங்களையும் இனப்பெருக்கலாம்.
- இவ்வினப்பெருக்கம் இயற்கையான முறையில் நடைபெறுவதனால் தொழிநுட்ப அறிவு தேவையில்லை.
- குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெறலாம்.
செயற்கை பதிய முறை இனப்பெருக்கம்
ஒரு தாவரத்தின் தண்டு, வேர், இலை போன்ற பதியப் பகுதிகளை செயற்கை நிபந்தனைகளின் கீழ் வேர் கொள்ளச் செய்து புதிய மகட் தாவர சந்ததியை பெறுதல் செய்ற்கை பதியமுறை எனப்படும்.
செயற்கை பதியமுறை இனப்பெருக்கமானது 02 முறைகளில் மேற்கொள்ளப்படும்.
- மா இனப்பெருக்க முறை
- நுண் இனப்பெருக்க முறை
செயற்கை பதியமுறை இனப்பெருக்கத்தில் வேர் கொள்ளலை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படும் நுட்ப முறைகள்.
- தாவரத் தண்டில் மோதிர வடிவில் பட்டையை சேதமாக்குதல்.
- சேதமாக்கிய பகுதிக்கு செயற்கை ஓமோனைத் தடவுதல்
- சேதமாக்கப்பட்ட தாவரப்பகுதி மண்ணினுள் புதைப்பதன் மூலமோ, பொருத்தமான நிபந்தனைகளை வழவங்க்வதன் மூலமோ வேர் கொள்ளலை தூண்டலாம்.
01. மா இனப் பெருக்கம் முறை
தண்டுத் தூண்ட முறை
- பொருத்தமான தாவர வெட்டுத் துண்டங்களை தயார்படுத்தி பொருத்தமான ஊடகத்தில் நட்டு தாய்த் தாவரத்தை ஒத்த மகட் தாவரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
- வெட்டுத் துண்டங்களில் படத்தில் காட்டியவாறு மென் வைரம், இடைவைரம், வன்வைரம் ஆகிய பகுதிகளை அவதானிக்கலாம்.

1. மென்வைரத் தண்டுத் துண்டம்
- சில தாவரங்களில் மென்வைரத் துண்டங்கள் மூலம் புதிய தாவரங்கள் உருவாக்கப்படும். (பசளி, வற்றாளை, கங்குன்)
- இத் தண்டுத் துண்டங்களை வேர் கொள்வதற்கு தயார் படுத்தும் போது இலைகள் அகற்றப்படுவது இல்லை.
- ஏனெனில் தண்டில் உணவு சேமிப்பு குறைவு ஔித்தொகுப்பு செய்வதற்கு இலைகள் தேவை.
2. இடைவைரத் தண்டுத் துண்டம்
- இத்துண்டங்களில் ஓரளவு சேமிப்புணவு காணப்படுவதனால் பாதி இலைகள் அகற்றப்படும்.
3. வன்வைரத் தண்டுத் துண்டம்
- போதியளவு சேமிப்புணவுகள் இருப்பதால் இலைகள் முற்றாக அகள்ளப்படும்.
வேர் கொள்ளலை தூண்டும் முறைகள்
- வேர் கொள்ளலை தூண்டும் போது தண்டுத் துண்டங்களை 45 பாகை சரிவில் வெட்டிக் கொள்ளுதல் (வேர் கொள்ளளுக்கான பரப்பை அதிகரிப்பதற்காக)
- வெட்டுப் பரப்பிற்கு செரடிக்ஸ், ரூட்டோன் ஓமோன்களைத் தடவுதல்.
- தண்டுத் துண்டத்திற்கு தேவையான ஊடகக் கலவையை வழங்குதல்.
ஊடகக் கலவை என்பது மென்மண்ணும் கூட்டெருவும் சமமான விகித்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவையாகும்.
தண்டுத் துண்டங்களை வேர்விடச் செய்யும் நுட்பமுறைகள்
- நாற்று மேடைகளை தயாரிப்பவர்கள் ஓமோன்களை விசிறுவதன் மூலமும், சூரிய இனப் பெருக்கிகளை தயார்படுத்துவதன் மூலமும் வேர் விடலை தூண்டுகினறனர்.
- வேர் வளர்ச்சியை தூண்டுவதற்காக (IAA, IBA, NAA) போன்ற ஓமோன்களை பயன்படுத்துகின்றனர்.
- இவ் ஓமோன்கள் சந்தையில் செடிக்ஸ், ரூட்டோன் என்ற பெயரில் பெறலாம்.
- விசேட சந்தர்பப்ங்களில் சூழற் காரணிகளின் தாக்கத்திலிருந்து தண்டுத் துண்டங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தக்கூடிய கட்டமைப்புகளே சூரிய இனப் பெருக்கிகள் எனப்படுகின்றது.
- இப் பெருக்கிகள் பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளிலும் சூழற் காரணிகளை அளுகை செய்யக்கூடியதாக இருக்கும்.
அவையாவன
- எளிய தனி சூரிய இனப் பெருக்கி
- கூட்டு சூரிய இனப்பெருக்கி
எளிய சூரிய இனப்பெருக்கி
- இதில் ஒரேயொரு தண்டுத்துண்டததை மட்டுமே வேர்விடச் செய்ய முடியும்.
- பொலித்தீனூடு ஔி உட்செல்வதனால் வெப்பநிலை அதிகரித்து வேர்விடுதல் தூண்டப்படும்.
- வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக மண்ணிலுள்ள மண்ணீரும் ஆவியாகி ஈரப்பதனும் கூடும்.
- அதிகரிக்கும் வெப்பநிலையினால் ஓமோன்களின் தொழிற்பாடு கூடி வேர்விடுதல் விரைவுபடுத்தப்படும்.
கூட்டு சூரிய இனப்பெருக்கி
- ஒன்றிற்கு மேற்பட்ட தண்டுத் துண்டங்களை வேர்விடச் செய்யலாம்.
- இலங்கையில் அதிகளவு பயன்படுத்தப்படும்.
- இரும்புக் குழாய் அல்லது மூங்கில் கீழம் மூலம் சட்டகம் அமைக்கப்படும்.
- அதன் மேல் பொலித்தீன் விரிக்கப்படும்.
02. பதிவைத்தல்
- தாய்த்தாவரத்துடன் இணைந்திருக்கும் போது தாவரக்கிளையை தரையிலோ, காற்றிலோ வேர் கொள்ளச் செய்து மகட் தாவரத்தை பெறுதல் பதிவைத்தல் எனப்படும்.
- இம்முறையில் பின்வரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இனப்பெருக்கப்படும்.
- மா, கொய்ய, மாதுளை, தோடை, எலுமிச்சை
பதிவைத்தல் ஆனது இரு வகைப்படும்
- நிலக்கீழ் பதிவைத்தல்
- காற்றுப் பதிவைத்தல்
நிலக்கீழ் பதிவைத்தல்
- நிலத்திற்கு வளையக்கூடிய கிளையொன்றை வேர்விடச் செய்து பதியத்தாவரத்தை பெறுதல் நிலப்பதிவைத்தல் எனப்படும்.
- இது எளிய பதிவைத்தல், கூட்டுப் பதிவைத்தல், கும்பிப் பதிவைத்தல், உச்சிப் பதிவைத்தல், அகழி/ தொடர் பதிவைத்தல் போன்ற முறைகளில் மேற்கொள்ளப்படும்.
செயன்முறை
- தெரிவு செய்யப்பட்ட தாய்த்தாவரத்தின் நிலமட்டத்திற்கு அண்மையிலுள்ள கிளையொன்றினை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.
- பின்பு தாவரக் கிளையை வளைத்து வேர் கொள்ளத் தூண்டும் பகுதிக்கண்மையில் மரவுரியை மோதிர வடிவில் அகற்றுதல் அல்லது 45 பாகை சரிவில் வெட்டொன்றை இட்டு பிளவினுல் கல்லொன்றை செறுகுதல் (பிளவு இணையாதிருப்பதற்காக).
- நிலத்தினுள் தாவரப் பகுதியை இடல். அதற்கு ஊடகக் கலவையை இட்டு மேல் பாரம் ஒன்றை வைத்தல்.
- பின்பு குறித்த பருவத்தின் பின்பு அப்பகுதியை வெட்டி வேறொரு இடத்தில் நடுதல்.
கூட்டுப் பதிவைத்தல்
- இம்மிறையில் மிளகு, திராட்சை, கொடிதோடை, வெற்றிலை ஆகிய கொடி போன்று வளரும் தாவரங்களுக்கு சிறப்பானதாகும்.
கும்பிப் பதிவைத்தல்
- பழைய மரங்களில் மேற்பகுதியை அகற்றிவிடும் போது உருவாகும் பக்கக் கிளைகளிலிருந்து மரவுரியை அகற்றி மண்ணினுள் புதைப்பதன் மூலம் புதிய தாவரங்களை பெற முடியும்.
காற்றுப்பதிவைத்தல்
- நிலமடடத்திற்கு கிளைகளை வளைக்க முடியாத தாவரங்களுக்கு இது பொருந்தும்.
- பொருத்தமான கிளையை தெரிவு செய்யப்பட்டு பட்டையை மோதிர வடிவில் அல்லது 45 பாகை சரிவில் வெட்டி கல் ஒன்றை நுழைத்து கூட்டெரு, மென்மண், தும்புத்தூள், நீர் என்பவற்றைினைக் கலந்து ஊடகம் தயாரித்தல் வேண்டும்.
- பின்னர், வெட்டப்பட்ட பகுதியில் உடகக் கலவையை வைத்து உறிமட்டை அல்லது மண்மூட்டியின் உதவியுடன் கலவை இடப்படும்.
- வேர் கொண்ட பின்னர் கிளை அகற்றப்படலாம்.
பதிவைத்தலின் அநுகூலங்கள்
- தாய்த்தாவரத்தை ஒத்த மகட் தாவரத்தை பெறலாம்.
- தாய்த்தாவரத்துடன் இணைந்திருக்கும் போதே வேர்கொள்ளச் செய்வதால் பதிவைத்தலை வெற்றிகரமாக நடத்தலாம்.
- தாவரங்களிலிருந்து வெட்டி அகற்றப்படும் தாவரக் கிளையிலிருந்து புதிய தாவரத்தைப் பெறலாம்.
- ஒட்டுக்கட்டை இன்றி ஒரு தாவரத்திலிருந்து பல மகட்தாவரங்களைப் பெறலாம்.
- எளிய தொழிநுட்பத்தை பிரயோகிக்கலாம்.
- விசேட உபகரணங்கள் எதுவும் தேவை இல்லை
பதிவைத்தலின் பிரதிகூலங்கள்
- ஒரே தடவையில் மிகக் குறைந்தளவு தாவரங்களையே உற்பத்தி செய்யலாம்.
- தாய்த்தாவரத்தில் ஏற்படும் காயங்கள் மூலம் நோய்க்கிருமிகள் உட்செல்லும்.
- சில தாவரங்களில் வேர் கொள்ளல் மந்தமாக இருப்பதால் அவற்றை இனப்பெருக்க முடியாது.
- விளைச்சலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க முடியாது.
- புதிய பேதங்களை உருவாக்க முடியாது.
Comments
Post a Comment