கணினி வலையமைப்பு 02
பொது ஆளியிடப்பட் தொலைபேசி வலையமைப்பு
- PSTN - Dial Up Connection - மோடெம் மற்றும் தொலைபேசி இணைப்பு என்பலை சேவை வழங்குபவரிடம் இணைப்பினை ஏற்படுத்த அவசியமானதாகும்.
பண்பேற்றம், பண்பிறக்கம் மற்றும் மோடம்
- மொடம் ஆனது இலக்கமுறை சமிக்ஞையினை ஒப்புமை சமிக்ஞையாக மாற்றி (பண்பேற்றம்), பண்பேற்றப்பட்ட சமிக்ஞையினை தொலைபேசி இணைப்பினூடாகச் செலுத்தும் பின் பெறும் இடத்தில் ஒப்பிமை சமிக்ஞையினை இலக்க முறை சமிக்ஞையாக மாற்றம் செய்யும் (பண்பிறக்கம்)
- ஆகவே பெறும் சாதனம் ஆனது தவினை சரியாகப் பெற்றுக் கொள்ளும்.
- தரவுகளைப் பண்பேற்றம் செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. துடிப்பு குறியீடு பண்பேற்றம் என்பது ஒரு ஒப்புமை சமிக்ஞையின் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். பின்னர் இந்த மாதிரிகள் மூலம் மூல சமிக்ஞையினைப் பெற முடியும்.
கணினி வலையமைப்பின் இடத்தியல் முறைகள்
பாட்டை இடத்தியல்

பாட்டை இடத்தியலின் பிரதான வடத்தின் இரண்டு முடிவிடங்களிலும் முடிப்பிகள் காணப்படும். அனைத்து முனையங்களும் (கோப்பு சேவையகம் பணிநிலையங்கள், சாதனங்கள்) பிரதான வடத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும், பகிரப்பட்ட பொது தொடர்பு ஊடகத்தினை முனையங்கள் அணுகம், பலமுனைகள் ஒரெநேரத்தில் அணுக முயற்சிக்கும் பொழுது முனையங்கள் பிரச்சினையினைச் சந்திக்கும்.
வின்மீன் இடத்தியல்

வின்மீன் இடத்தியலானது அதில் காணப்படும் ஒவ்வொரு முனையமும் (கோப்பு சேவையகம், பணிநிலையங்கள், சாதனங்கள்) நேரடியாக ஒரு மைய வலையமைப்பு குவியனுடன் அல்லது ஆளியுடன் இணைக்கப்பட்டு இருக்கக்கூடியதாகவடிவமைக்கப்பட்டிருக்கும்.
வளையம் இடத்தியல்

வளைய இடத்தியலில் காணப்படும் ஒவ்வொரு நிலையமும் நேரடியாக அருகில் காணப்படும் இரு நிலையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். தரவானது பரிமாற்றப்படம் பொழுது இரண்டு நிலையங்களும் இடையில் இருக்கும் அனைத்து நிலையங்களினூடாகவும் பரிமாற்றப்படும் (மணிக்கூட்டு திசையாக அல்லது எதிர்மணிக்கூட்டு திசையாக)
கண்ணி இடத்தியல்
இந்த இடத்தியலல் ஒரு விருந்தோம்பிக் கணினி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விருந்தோம்பிக் கணினிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவ் இடத்தியலில் காணப்படம் விருந்தோம்பிக் கணினிகள் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று சில விருந்தோம்பிக் கணினிகள் சில விருந்தோம்பிக் கணினிளுடன் மாத்திரம் ஒன்றுடனொன்று அடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கும்.
ஆளிகள் , குவியங்கள்
- குவியங்கள் மற்றும் ஆளிகள் ஒரு பொது வலையமைப்புச் சாதனங்கள் இவற்றின் பிரதான செயற்பாடாக வலையமைப்புச் சாதனங்களினை ஒரு பொதுவான இடத்தில் இணைத்து ஒரு வலையமைப்பினை ஏற்படுத்தப் பயன்படுகின்றன.
- ஆளியானது உள்வரும் இணைப்பில் காணப்படும் சாதனத்தின் தரவினைப் பெற்று அதனை வௌிச்செல்லும் இணைப்பில் காணப்படும் சாதனத்திற்கு மா்த்திரம் அனுப்பும்.
- குவியன் ஆனது உள்வரும் இணைப்பில் காணப்படும் சாதனத்தின் தரவுகளைப் பெற்று தனது வௌிச்செல்லும் இணைப்பில் காணப்படும் அனைத்துச் சாதனங்களுக்கும் தரவைப் பரப்பும். இதனூடாக ஆளியானது குவியனினைக் காட்டிலும் ஒரு திறமையான சாதனமாகப் பயன்படுகின்றது.
இடத்துரி வலையமைப்பு (LAN)
இடத்துரி வலையமைப்பு என்பது ஒரு கணினி வலையமைப்பாகும் இது ஒரு குறிபபிட்ட வரையறுத்த இடத்திற்குள் (இருப்பிடங்கள், பாடசாலை, ஆய்வுகூடம், பல்கலைக்கழகம்) காணப்படும் கணினிகளை ஒன்றுடனொன்று இணைக்கின்றது.
சாதனங்களைக் கண்டறிதல்
MAC முகவரிகள் என்பது ஒரு வலையமைப்பு இடைமுகத்தில் காணப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒதுக்கப்படிருக்கும் ஒரு தனிச்சிறப்பான முகவரியாகும். மெக் முகவரிகள் 48 பிட்கள் நீளமானதும், இரட்டைமுற்றுப்புள்ளி மூலம் பிரக்கப்பட்ட 6 தொகுதிகளைக் கொண்டவை. ஒவ்வொரு தொகுதியும் 8 பிட் நீளமானது. அவை மீண்டும் 4 பிட் கொண்ட இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்
ஒவ்வொரு 4 பிட்டும் பதினறும் எண்முறைமையில் குறித்துக்காட்டப்படும். ஒரு MAC முகவரி 4A:8F:3C:4F:9E:3D எனும் அமைப்பில் காணப்படும். வலையமைப்பில் காணப்படும் சாதனங்கள் தரவுகளை வலையமைப்பினில் பெறும்போதும் அனுப்பும் போதும் மெக் முகவரியானது சாதனங்களின் இடைமுகத்தினைத் தனிச்சிறப்பாக அடையாளங்கண்டு தரவுகளைச் சேர்க்க உதவுகின்றது.
சட்டகங்கள்
தரவு மூலகத்திலிருந்து தரவு உருவாக்கப்பட்டுத் தொடர்பாடல் இணைப்பின் ஊடாக Data Link Layer இல் அனுப்பப்படும் பொழுது, தரவு சட்டகங்களில் இணைக்கப்படும் இடத்தில் அனுப்பப்படும் சாதனத்தின் மெக் முகவரியும் அருகில் காணப்படும்
சாதனத்தின் மெக் முகவரியும் சட்டகத்தின் தலைப்பில் உள்ளடக்கப்படும். ஒரு சோடி சாதனங்களினை இணைக்கும் தரத்தைப் பொறுத்து ஒவ்வொரு சட்டமும் உருவாக்கப்படுகின்றன.
நடப்பொழுங்கு (Protocol)
இரண்டு சாதனங்களுக்கிடையில் தரவு பரிமாற்றப்படும் போது தரவுகளைின் ஒழுங்கு வடிவம் என்னவற்றை வரையறுக்கின்றது. வலையமைப்பில் பல நடப்பொழுங்குகள் காணப்படுகின்றன. அத்துடன் ஊடக செயற்படுத்தி கட்டுப்பாடு நடப்பொழுங்கானது (Medium assess control protocol ) அடிப்படைச் செயற்பாட்டிற்கான பொது பரிமாற்ற ஊடக தொடர்பாடலுக்காகச் செயற்படுகின்றது. பாட்டை இடத்தியலில் பொதுவானதொரு ஊடகமானது பல சாதனங்களினூடாகப் பரிமாறப்படுகின்றது. இதனால் ஏற்படும் தரவு மோதுகையினைத் தவிர்ப்பதற்காக ஊடக செயற்படுத்தி கட்டுப்பாடு நடப்பொழுங்கானது ஊடகம் சரியான ஒழுஙகில் வழிப்படுத்தப்படுவதனை உறுதி செய்கின்றது.
தகவல் ஒன்றின் தொலைபரப்பலும் தனிப்பரப்பலும்
தகவலைத் தொலைபரப்பும் பொழுது ஒரு தகவலானது பல எண்ணிக்கையான பெறுநருக்கு அனுப்பப்படும். தனிப்பரப்பலின் பொழுது ஒரு தகவலானது குறித்த ஒரு கணினியில் இருந்து அதில் உள்ளடக்கப்பட்ட தனிச்சிறப்பான ஒரு பெறுநர் கணினியின் முகவரிக்கு மட்டும் அனுப்பப்படும்.
நுழைவாயில் (Gateway)
- ஒரு நுழைவாயில் என்பது அனைத்துத் தகவல்களுடனும் பொருத்தப்பட்ட ஒரு வழிப்படுத்தி ஆகும்.
- இது வழிச்செலுத்திப் பொதிகளை இலக்கு விருந்தோம்பிக் கணினிக்கு அனுப்புகின்றது.
IP முகவரி
- இம் முகவரியானது கணினி வலையமைப்பில் காணப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் வழிங்கப்பட்டிருக்கும் ஒரு தனிச்சிறப்பான முகவரியாகும்.
- இது IP பதிவு 4 (IPv4) ஆனது 32 பிட் நீளமானது.
- இம் முறையினைப் பயன்படுத்தி 4 பில்லியன் வலையமைப்புச் சாதனங்களுக்கு IP முகவரிகளை வழங்க முடியும்.
- IP Version 6 (IPv6) ஆனது 128 பிட் நீளமானது, இதனைப் பயன்படுத்தி மிகப் பெரிய எண்ணிக்கையிலான வலையமைப்பு சாதனங்களுக்கு IP முகவரி வழங்க முடியும்.
புள்ளியிட்ட தசம குறிமுறை (Dotted decimal notation)
IP முகவரி வகைகள்
- முதல் தொகுதியானது 0 இல் அரம்பிக்கும்
- முதல் தொகுதியின் பெறுமதி வீச்சு 1 தொடக்கம் 126 வரையானதாகும்
- உபவலை மறைமுகம் (Network mask) ஆனது 8 பிட்டுகள் அல்லது 255.0.0.0 என எழுதப்படும்.
- இதில் 1.0.0.0 தொடக்கம் 126.0.0.0 வரையான வலையமைப்புகளில் ஒவ்வொன்றிலும் 16777214 (2 ^24 - 2) எண்ணிக்கையான விருந்தொம்பிகள் (Hosts) காணப்படும்.
- முதல் தொகுதியானது 10 இல் ஆரம்பிக்கும்
- முதல் தொகுதியின் பெறுமதி வீச்சு 128 தொடக்கம் 191 வரையானதாகும்.
- உபவலை மறைமுகம் ஆனது 16 பிட்டுகள் இது 16 அல்லது 255.255.0.0 என எழுதப்படும்.
- இதில் 128.0.0.0 தொடக்கம் 191.255.0.0 வரையான வலையமைப்புகளில் ஒவ்வொன்றிலும் 65534 (2 ^16 - 2) எண்ணிக்கையிலான விருந்தோம்பிகள் காணப்படும்.
- முதல் தொகுதியானது 110 இல் ஆரம்பிக்கும்
- முதல் தொகுதியின் பெறுமதி வீச்சு 192 தொடக்கம் 223 வரையானதாகும்.
- உபவலை மறைமுகம் ஆனது 24 பிட்டுகள் இது 24 அல்லது 255.255.255.0 என எழுதப்படும்.
- இது 192.0.0.0 தொடக்கம் 223.255.255.0 வரையான வலையமைப்புகளில் ஒவ்வொன்றிலும் 254 (2 ^ 8 -2) எண்ணிக்கையான விருந்தோம்பிகள் காணப்படும்.
Assignment of IP addresses
ஒரு வலையமைப்பில் காணப்படும் அனைத்து விருந்தோம்பிகளினதும் முகவரிகளின் முற்சேர்க்கை ஒரே பெறுமதியினைக் கொண்டிருக்கும். முகவரிகளினது முற்சேர்க்கையானது ISPs இனால் பெறப்பட்டு முகவரி முற்சேர்க்கைகள் மை அதிகாரத்தால் ஒதுக்கப்படுகின்றது. வரையமைப்பில் காணப்படும் ஒவ்வொரு கணினிக்கும் எனத் தனிச்சிறப்பான ஒரு பிற்சேர்க்கை வலையமைப்பு முகாமையாளரினால் வழங்கப்பட்டு இருக்கும்.
உபவலையமைப்பி (Sub netting)
32 பிட் முகவரித் திட்டமிடலில் காணப்படும் மேலதிக வலையமைப்பு முகவரிகளின் எண்ணிக்கையினைக் குறைக்கும் ஒரு நுட்பமாக உபவலையமைப்பு உள்ளது. உபவலையமைப்பில் உள்ள ஒவ்வொரு பௌதீக வலையமைப்பு முகவரிகளும் 32 பிட் உபவலை மறைமுகத்தினைக் கொண்டிருக்கும். இது வலையமைப்புக்களில் இருந்து குறித்த வலையமைப்பினை அடையாளம் காணப் பயன்படும். ஒரே உபவலையமைப்பில் காணப்படும் எல்லா சாதனங்களும் ஒரே உபவலை மறைமுகத்தினைக் கொண்டிருக்கும்.
வகுப்பற்ற உள்ளர்ந்த ஆள்கள வழிச்செலுத்தல்
வகுப்புக்களான A,B,C வலையமைப்பிற்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தும் போது இதில் எந்த எண் முகவரிகளையும் ஒதுக்க முடியும். இந்தத் திட்டம் பெரிய வழிச் செலுத்தல் அட்டவணைகளைக் குறைக்க உதவும்.
The vanishing IP address space
தனியாள் IPs (Private)
- மூன்று விதமான மகவரி எல்லைகள் தனியார் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
- 10.0.0.0 - 10.255.255.255
- 172.16.0.0 - 172.30.255.255
- 192.168.0.0 - 192.168.255.255
மாறும் விருந்தோம்பி உள்ளமைவு நெறிமுறை சேவையகக் கணினி (DHCP)
வலையமைப்பில் காணப்படும் விருந்தோம்பிகளுக்கு IP முகவரிகளை வரையலைறசெய்யும் ஒரு நெறிமுறையாகக் DHCP காணப்படுகின்றது. ஆனாலும் வலையமைப்பு முகாமையாளர் வலையமைப்பில் காணப்படும் விருந்தோம்பிகளுக்கு IP முகவரிகளை வழங்கலாம். DHCP யால் IP முகவரிகள் தானாகவே விருந்தோம்பிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இலக்குப் பாதையினைக் கண்டறிதல் (Finding path to the destination)
தரவானது ஆரம்ப இடத்திலிருந்து இலக்கினை நோக்கி வௌியேறும் போது ஒன்றோடொன்று தொடர்ச்சியாகக் காணப்படும் பல சாதனங்களினூடாகச் செல்லவேண்டும். தரவுகள் ஆரம் இடத்திலிருந்து இலக்குநோக்கிச் செல்வதற்கு வேண்டிய வழிச்செலுத்தில்களை வழிப்படுத்தி மேற்கொள்கின்றது. வழிச்செலித்தல் என்பது ஆரம்ப இடத்திலிருந்து இலக்கு நோக்கி வலையமைப்பில் தரவு செல்வதற்கான வினைத்திறனான பாதையினைத் தெரிவு செய்தலாகும். வழிப்படுத்தியானது வலையமைப்பில் காணப்படும் ஒத்த சாதனங்களுடன் தொடர்புகொள்வதற்கான திறன் கொண்ட ஒரு வலையமைப்புச் சாதனமாகும். அதனுடன் இணைந்து தொழிற்படும் சாதனங்களை ஒனங்கண்டு தரவு வந்த பாதையினைக் கண்டுபிடிப்பதற்கும் இது உதவும்.
வழிப்படுத்தியானது தனக்கான இலக்குகளின் பாதைகளை அட்டவணைப்படுத்தி வைத்திருக்கும். இது வழிச்செலித்தல் அட்டவணை என அழைக்கப்படும். வழிப்படுத்தியானது தனது வழிச் செலுத்தல் அட்டவணையினை ஏனைய வழிப்படுத்திகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளும். இதனால் நேரத்திற்கு நேரம் வழிச்செலுத்தல் அட்டவணை மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கும்.
பொதி மடைமாற்றல் (Packet switching)
ஒரு தரவு மூலத்திலிருந்து தரவானது உற்பத்தியாகும் போது அது பொட்டலங்கள் எனப்படும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பொட்டலங்களுக்குமென தனிச்சிறப்பாக அடையாளப்படுத்தப்படக் கூடிய தலைப்பு காணப்படும் அத்துடன் ஒவ்வொரு பொட்டலமும் தன்னிச்சையாக அனுப்பப்படும்.
Comments
Post a Comment