தகவல் முறைமை
முறைமை என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைய ஒரு திட்டத்தின் படி ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று சார்ந்த கூறுகளின் ஒரு ஒழுங்கமைப்பாகும்.
முறைமையின் வகைப்படுத்தல்
- திறந்த முறைமை
- மீடிய முறைமை
- மனிதனால் உருவாக்கப்பட்டது
- இயற்கையான முறைமை
தகவல் முறைமைகள்
1. அலுவலகத் தன்னியக்க முறைமைகள் (OAS)
இது ஒரு வணிகத்தினை நடத்தத் தேவையான, அன்றாட வழக்கமான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கும் மற்றும் பதிவு என்பனவற்றை மேற்கொள்ளவும் உதவுவதோடு ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு மட்ட பயனர்களுக்குச் சேவை செய்யும் ஒரு தகவல் முறைமையாகும்.
2. பரிமாற்ற முறைவழியாக்கல் முறைமைகள் (TPS)
இது சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் போன்ற ஒரு கணினி முறைமையாகும், மின்அஞ்சல் மற்றும் பணி திட்டமிடல் அமைப்புகள் ஆகியலை அலுவலகத்தில் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வடிவமகை்கப்பட்டுள்ளன.
3. முகாமைத்துவ தகவல் முறைமைகள் (MIS)
இது ஒரு வணிகத்தினை நடத்தத் தேவையான, அன்றாட வழக்கமான பரிவர்த்தனைகளைச் செய்வதற்கும் மற்றும் பதிவு என்பனவற்றை மேற்கொள்ளவும் உதவுவதோடு ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு மட்ட பயனர்களுக்குச் சேவை செய்யும் ஒரு தகவல் முறைமையாகும்.
4. முகாமைத்துவ தகவல் முறைமைகள் (MIS)
இது திட்டமிடல், கட்டுப்படுத்தல் மற்றும் முடிவெடுத்தல், செயல்பாடுகளைச் செயற்படுத்தும் தகவல் அமைப்புக்கள், ஒரு நிறுவனத்தின் நிர்வாகத் தரப் பயனாளர்களுக்கு வழக்கமான சுருக்கம் மற்றும் புறநடை தெரிவிப்பு அறிக்கைகள் வழங்குதல் போன்றவற்றினை மேற்கொள்ளும் ஒரு தகவல் முறைமையாகும்.
5. தீர்மான உதவு முறைமைகள் (DSS)
இது தரவு மற்றும் நுட்பமான பகுப்பாய்வு மாதிரிகளை ஒருங்கிணைக்கும் அல்லது நிர்வாக மட்டப் பயனர்களுக்குத் தரவு பகுப்பாய்வு கருவிகளை ஒரு அமைப்பின், குறை கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத தீர்மானம் எடுக்கம் ஒரு முகாமைத்துவ மட்ட பயனர்களின் ஒரு தகவல் முறைமையாகும்.
6. நிறைவேற்று உதவு முறைமைகள் (ESS)
ஒரு நிறுவனத்தின் மூலோபாய மட்டபயனர்களுக்கு மே்பட்ட வரைவியல் மற்றும் தொடர்பு மூலம் கட்டமைப்பற்ற முடிவெடுக்கும் தகவல் முறைமையாகும்.
7. புவியியல் தகவல் முறைமைகள் (GIS)
என்பது வரைபடம், மாதிரிகள், வினவல் மற்றும் அவற்றின் இருப்பிடத்தின்படிி ஒரு தரவுத்தளத்தில் தரவுகளை அதிக அளவில் ஆய்வு செய்ய அனுமதிக்கும் முறைமைகள். காட்சிகளைக் கற்பனை செய்து, சக்தி வாய்ந்த கருத்துக்களை வழங்குவதற்கும் பயனுள்ள தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் இது உதவுகின்றது.
8. அறிவு முகாமைத்துவ முறைமைகள் (KMS)
இது அடையாளம் காணுதல் மற்றும் உருவாக்குதல், பிரதிநிதித்துவம் செய்தல், விநியோகித்தல், நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைத் தரும் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பரந்த நடைமுறைகளை உள்ளடக்கிய தகவல் முறைமை, இத்தகைய நுண்ணறிவு மற்றும் அனுபவங்கள், அறிவு சார்ந்தவையாகும், தனிநபர்களுடனான உள்ளடக்கம் அல்லது நிறுவன செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளில் உட்பொதிக்கப்பவை ஆகும்.
9. உள்ளடக்க முகாமைத்துவ முறைமைகள் (CMS)
இது இலக்கமுறை உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் திருத்துவதற்குமான கணினி பிரயோகமாகும். இது பலபயனர்கள் ஒன்றாக பயன்படுத்துவதற்கான ஒரு சூழ்நிலையின் உருவாக்கதிற்கு உறுதுணையாகின்றது. இதற்கான உதாணங்களாக இணைய அடிப்படையிலான வௌியீடுகள், வடிவமைப்பு முகாமைத்துவம், வரலாற்று வடிவமைப்பு, பார்வை கட்டுப்பாடு, இலக்கமிடல், தேடலும் மீட்டெடுத்தலும், உள்ளடக்கம் மற்றும் முன்வைத்தல் என்பனவற்றிற்கு உதவுகின்றன.
10. நிறுவன மூலவள திட்டமிடல் முறைமைகள் (ERP)
இது செயல்முறை முகாமை முறைமையாகும். இது ஒருங்கிணைந்த பயன்பாடுகளைப் பயன்படுத்தி வணிகத்தினை முகாமை செய்ய உதவுகின்றன. இம் முறைமையானது தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பல அலுவலக செயற்பாடுகளைத் தானியங்கு சேவைகளை வழங்குவதுடன், மனித வளமாகவும் காணப்படுகின்றது. இம் மென்பொருள் முறைமையானது உற்பத்தித் திட்டமிடலையும் அபிவிருத்தியையும், உற்பத்தியையும், விற்பனையையும், சந்தைப்படுத்தலையும் மேற்கொள்ளும்.
11. வல்லுனர் முறைமை (Expert system)
செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தும் மென்பொருள்களாகும். வல்லுனர் முறைமையினை வடிவமைக்கும் ஒருவர், மனித வல்லுநர்கள் எவ்வாறு தீர்மானங்களை எடுக்கின்றனர் எனப்தையும் அவ்விதிமுறைகளை எவ்வாறு கணினி புரிந்து கொள்கின்ற வகையில் மொழிபெயர்க்கின்றனர் என்பதையும் ஆராயும் அறிவியல் பொறியியலை கற்று அறிந்திருத்தல் வேண்டும்.
12. சூட்டிகை முறைமை
முறைமை மாதிரிகள்
1. நீர்வீழ்ச்சி மாதிரி (Waterfall model)

- நீர்வீழ்ச்சி மாதிரியம் என்பது தொடர்ச்சியான செயற்பாடு ஊடான ஒரு மென்பொருள் உற்பத்தி மாதிரியம் ஆகும். ஒவ்வொரு படியின் வௌியீடும் அடுத்த படிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
- இந்த மாதிரிகள் தேவைகள் நன்கு இனங்காணப்பட்ட மற்றும் நிலையானதாக இருக்கும் முறைமைகளுக்கு மட்டம் மிக்பபொருத்தமானதாகும்.
2. சுருளியுருவ மாதிரியம் (Spiral model)
- சுருளியுரு மாதிரியம் என்பது மீள் சுழற்சி விருத்தி மாதிரியம் (iterative development process) மற்றும் தொடர்ச்சியான நேர்கோட்டு வளர்ச்சி செயல்முறை (linear development process) என்பனவற்றின் சேர்மானமாகும். செயற்றிட்ட ஆபத்து நடுத்தரத்திலிருந்து உயர்வடையும், சிக்கலான தேவைகள் காணப்படும் மற்றும் அபிவிருத்தியின் போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற அமைப்புகளுக்கு இது பொருத்தமானதாகும்.
3. Agile மாதிரியம்
- இம் மாதிரியம் நடைமுறையிலுள்ள முறைகளைப் பயன்படுத்துவதுடன் திட்டதின் தேவைகளுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றியமைக்கின்றது. பணிகள் ஒரு வௌியீட்டிற்காக குறிப்பிட்ட அம்சங்களை வழங்க கூடியவாறு நேரத்துடன் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மீள்சுழற்சி அணுகுமுறையாக அமைவதுடன் மென்பொருள் விநியோகமம் ஒவ்வொரு மீள்சுழற்சிக்குப் பின்பும் நடைபெறுகிறது. ஒவ்வொரு உருவாக்கமும் ஒரு வளர்ச்சிப்படியில் இருக்கும். அத்துடன் இறுதி உள்ளடக்கம் பயனர் கோரிய அனைத்துச் செயற்பாடுகளையும் கொண்டிருக்கும், இம்மாரியமானது நிலையானது அல்லது மாறும் தேவைகள் கொண்ட முறைமைகளுக்கு ஏற்றது.
4. முன்வடிவ மாதிரியம் (Prototyping)
- முன்வடிவ மாதிரியம் ஆனது உற்பத்தி செய்யவுள்ள செயற்பாட்டின் மாதிரியினை முன்கூட்டியே காட்சிப்படுத்தும் ஆனால் முழுச் செயற்பாட்டினையும் அல்ல, இம்முறையினைப் பயன்படுத்தி பயனர்களின் பின்னூட்டலினைப் பெற்று, பயனர்களின் தேவைப்பாடுகளை ஆரம்பகட்டத்திலேயே விளங்கி மென்பொருளை உருவாக்கக்கூடியதாக இருக்கும். சரியான பயனர் தேவைகளை விளங்கிக் கொள்ள இது உற்பத்தியாளருக்கு உதவுகின்றது.
5. துரித பிரயோக விருத்தி (RAD)
- இம் மாதிரியத்தில் செயற்பாட்டுத் தொகுதிகள் முன்வடிவ மாதிரியத்திற்கு இணையாக உருவாக்கப்படுகின்றன. அத்துடன் இறுதித் தயாரிப்பு ஒரு விரைவான உற்பத்திக்கு அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் செயற்படுகிறது.
முறைமை விருத்தியின் வரைவியல்கள்
1. கட்டமைக்கப்பட்ட முறைகள்
- பணிகளின் படிகள் மூலம் நன்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.
2. பொருள் நோக்குடைய முறைகள் (Object oriented methodology)
- ஒருங்கிணைந்து செயற்படும் பொருள்களின் தொகுதியாகக் காணப்படும் மாதிரி அமைப்பு.
Comments
Post a Comment