Skip to main content

Sitemap

Comments

Popular posts from this blog

Tamil notes for Bio system technology Unit 06

உணவின் சுகாதாரத் தன்மை உணவு உட்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள் மனிதன் தனது போசணைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உணவை உட்கொள்ளும் போது மேற்படித் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உணவொன்று நுகர்வோனை திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வுணவில் சில இயல்புகள் காணப்பட வேண்டும் இவை உணவின் புலணுனர்வு இயல்பு எனப்படும். புலணுனர்வு இயல்புகள் உணவின் நிறம் மணம் சுவை இழையமைப்பு சகல போசாக்கும் தேவையான அளவு உள்ளடக்கப்பட்ட உணவு நிறையுணவு எனப்படும். ஆரோக்கியமான உணவொன்றை உட்கொண்ட பின்னர் வேறு நோய்களோ, உபாதைகளோ ஏற்படக்கூடாது. இந்நிலமை தரமான உணவினால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும். உணவின் தரம் குறிப்பிட்ட உணவொன்றிலுள்ள தனித்துவமான இயல்புகள் நுகர்வோரினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் காணப்படுவதே உணவின் தரம் ஆகும். உணவின் நிறம், சுவை, மணம், இழையமைப்பு, போசணை பதார்த்தங்கள் ஆகிய தனித்துவமான இயல்புகள் உணவின் தரத்தை தீர்மானிக்கின்றன. அதே வேளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், பீடை நாசினிகள், கழிவுப் பதார்த்தங்கள் அடங்கியிருத்தலானது உணவின் தரத்தை குறைக்கின்றது. உணவின் தரத்தை குறைக்கும் பௌதீக இயல்புகள் ...

Networking (Tamil Notes For ICT) (G.C.E Advanced level) Part 01

  கணினி வலையமைப்பு தரவுத் தொடர்பாடல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தொடர்பாடல் சாதனங்களுக்கிடையில், தரவு ஊடுகடத்தும் ஊடகத்தின் ஊடாகத் தரவுகளை அனுப்பும் செயற்பாடு தரவுத்தொடர்பாடல் எனப்படும். கணினிகளுக்கிடையிளான இத்தகைய தொடர்பு கணினி வலையமைப்பு எனப்படும்.  தரவுத் தொடர்பாடல் ஒன்றில் காணப்படும் பிரதான அம்சங்கள் மூலம்/ அனுப்புனர் ஊடுகடத்தும் முறை/ ஊடுகடத்தும் மூலம் இலக்கு/ பெறுனர் கணினி வலையமைப்பு தரவிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் நோக்குடன் இணைக்கப்பட்ட இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கணினிகளைக் கொண்ட தொகுதி கணினி வலையமைப்பு எனப்படும். சமிக்ஞைகள் 1. ஒப்புமைச் சமிக்ஞைகள் ஒப்புமை சமிக்ஞைகள் தொடர்ச்சியாக அலை வடிவில் தரவுகளை கொண்டு செல்கின்றது. இது இலத்திரனியல் அலை ஊடாகப் பிரதியிடப்படுகின்றது. உதாரணம் - சத்தம், ஔி, ​வெப்பநிலை 2. இலக்க முறைச் சமிக்ஞைகள் இலக்க முறைச் சமிக்ஞைகளானது ஒரு இலத்திரனியல் அழுத்தமாக அல்லது மின்சாரமாகக் காணப்படும். இது நேரத்துடன் மாற்றமடைந்து கொண்டு செல்லும். இது ஒரு முனையிலிருந்து மறு முனைக்குத் தரவுகளைப் பரிமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இலக்க முறை என்பத...

Computer operating system (ICT Tamil Notes) 04

கணினி இயக்க முறைமை பல்நிரல்படுத்தல் (Multiprogramming) ஆரம்ப கால கணினிகளில் செயலியொன்றின் நேரம் பெறுமதிமிக்கதாக இருந்ததுடன் இந்நேரத்தை அதிகூடியளவில் பயன்படுத்திக் கொள்வது கடினமானதால் கணினிப் பாகங்களில் செயற்பாடு மிகவும் மந்தகதியாயிருந்தது. அவ்வாறு நடப்பதற்கு செயலியொன்று ஏதேனுமொரு ஏற்பட்ட உடனே இதுவரை செய்த கொண்டிருந்த வேலையை நிறு்திவிட்டு இடையூறு (Interupt) க்கு பதிலளிக்கப்படும். இது முழு முறைமைக்கும் ஏற்பட்ட பாரிய விரும்பத்தகாத நிகழ்வாகும். இந்நிலைக்கு தீர்வாக 1960 களில் பல பயனர்கள் (Multiprogramming) ஒரெ தடவையில் செயற்படுத்தக்கூடியதுமான முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்முறைமைகள் செயலியால் தொடர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் திருத்தியமைக்கப்பட்டன. எனவே இச்செயல் உயர் செயற்றிறனுடன் கூடியதென்பதை தௌிவுபடுத்தியது. இம்முறைமைகளில் ஒரே தடவையில் பல மென்பொருட்களை இயக்கக்கூடிய வசதி ஏற்பட்டது. நவீன கணினிகளில் ஏதேனும் மென்பெருட்களை இயக்கும்போது அம்மென்பொருளின் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை ஒரே தடவையில் பிரதான நினைவகத்திற்கு உட்செலுத்தக் கூடியதுடன் இதன் மூலம் ஒரே தடவையில் பலரால் அம்மென்...