உணவின் சுகாதாரத் தன்மை
உணவு உட்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள்

- மனிதன் தனது போசணைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உணவை உட்கொள்ளும் போது மேற்படித் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
- உணவொன்று நுகர்வோனை திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வுணவில் சில இயல்புகள் காணப்பட வேண்டும் இவை உணவின் புலணுனர்வு இயல்பு எனப்படும்.
- உணவின் நிறம்
- மணம்
- சுவை
- இழையமைப்பு
- சகல போசாக்கும் தேவையான அளவு உள்ளடக்கப்பட்ட உணவு நிறையுணவு எனப்படும்.
- ஆரோக்கியமான உணவொன்றை உட்கொண்ட பின்னர் வேறு நோய்களோ, உபாதைகளோ ஏற்படக்கூடாது.
- இந்நிலமை தரமான உணவினால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும்.
உணவின் தரம்
- குறிப்பிட்ட உணவொன்றிலுள்ள தனித்துவமான இயல்புகள் நுகர்வோரினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் காணப்படுவதே உணவின் தரம் ஆகும்.
- உணவின் நிறம், சுவை, மணம், இழையமைப்பு, போசணை பதார்த்தங்கள் ஆகிய தனித்துவமான இயல்புகள் உணவின் தரத்தை தீர்மானிக்கின்றன.
- அதே வேளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், பீடை நாசினிகள், கழிவுப் பதார்த்தங்கள் அடங்கியிருத்தலானது உணவின் தரத்தை குறைக்கின்றது.
உணவின் தரத்தை குறைக்கும் பௌதீக இயல்புகள்
- உணவின் சுவை, இழையமைப்பு, நிறம், புறத்தோற்றம் என்பன உணவின் பௌதீக இயல்புகளாகும்.
- இவற்றில் ஏற்படும் மாற்றம் தரம் குன்றிய உணவிற்கு வித்திடும்.
- களப்படம் செய்தல், வெப்பநிலை ஏற்ற/ இறக்கம், நுண்ணங்கி தாக்கம், களஞ்சியப்படுத்தலின் போது ஏற்படும் வழுக்கள், பொதியிடலின் போது ஏற்படும் வழுக்கள், சரியான முறையில் உணவை உற்பத்தி செய்யாமை, பொருத்தமற்ற சேர்மானங்கள், பிழையான நற்காப்பு முறை போன்றவற்றினால் உணவின் பௌதிக இயல்பு மாற்றமடையும்
உணவின் தரத்தை குறைக்கும் இரசாயன இயல்புகள்
- உணவின் இரசாயன இயல்புகளாக போசணை பதார்த்தங்களையும், உணவின் அமில பெறுமானத்தையும் (pH) குறிப்பிடலாம்.
- நுண்ணங்கி தாக்கம், முறையற்ற தயாரிப்பு, உணவுச் சேர்மானங்கள் பொன்ற காரணிகளினால் போசணைப் பதார்த்தம் அழிவடையும்.
தரச் சான்றிதழ்
- உணவின் தரம் பற்றி நுகர்வோரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் முகமாக தரச்சான்று வழங்கப்படுகின்றது.
- தரச்சான்றுப் படுத்தல் மூலமாக உரிய போசணைத் தன்மை கொண்ட சுகாதார ரீதியான உணவு எனும் உறுதிப்பாடு கிடைக்கின்றது.
- இலங்கை உற்பத்திக்காக இலங்கை தரச்சான்றிதல் (SLS) வழங்கப்படுகின்றது.
- இலங்கை தரச்சான்றிதலை உடைய உணவிப் பொரளை எடுப்பின் உற்பத்திப் பொருளில் காணப்படத்தக்க நுண்ணங்கிகள், இரசாயன, பௌதிக அபாய நிலைமைகள் இன்மை என்ற சான்றுப்படுத்தல்கள் நுகர்வோருக்கு கிடைக்கின்றது.
- மேலும் உற்பத்தி செயன்முறையில் மறைமுகமாக தொடர்புறும் நபர்கள் மூலம் உணவுடன் பாதிப்பான பதார்த்தங்கள் சேர்க்கப்படுதல் குறைவு என்ற சான்றும் நுகர்வோருக்கு கிடைக்கின்றது.
உரிய தரம் கொண்ட உணவின் முக்கியத்துவம்
- சுத்தமான உண்வை பெறல்.
- ஆரோக்கியமான உத்தரவாதமளிக்கும் உணவைப் பெறல்.
- சகலரும் பெறக்கூடிய விலையை அனுமதித்தல்.
- போசாக்கு பெறுமானம் உடையதாக அமைதல்.
- சஞ்சு, தீங்கு பயக்கும் இரசாயனப் பதார்த்தங்களிலிருந்து நீங்குதல்.
- விரும்பக்கூடிய பலனுனர்வு இயல்புகளை பேணுதல்.
- நுண்ணங்கி தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்தல்.
- இரசாயன, பௌதிக அபாய நிலமைகள் இல்லையென உறுதிப்படுத்தல்.
ISO 22000 சான்று
உணவு உற்பத்தி தொடக்கம் சந்தை வரை எந்த ஒரு நிலையிலும் உணவில் கலப்படம் நிகழப்பெற்றால் அவ்வாற இடம்பெற்ற இடம், திகதி, நேரம், எக்காரணத்தினால் நடைபெற்றது என முறையாக கண்டறியக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.
தரச்சான்றுதல் பெறுதலானது உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் முக்கியமானதாகும்.
- முடிவுப் பொருளுக்கான சான்றிதழ்.
- உற்பத்தி செயன்முறைக்கான சான்றிதழ்
முடிவுப் பொருளுக்கான சான்றிதழைப் பெறல்
- உற்பத்திக்குரிய விவரக்கூற்றினை பொருத்தமான நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளல்.
- முடிவுப் பொருளை அதற்கு ஏற்றவாரு தயாரித்தல்.
- அதே நிறுவனத்திலிருந்து / வேறு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பொருளின் தரத்தை பரிசீலனை செய்தல்.
- பரிசோதனை முடிவு தர உறுதிப்படுத்தல் நிறுவனத்தின் விவரக்கூற்றுடன் பொருத்துகிறதா என சரிபார்த்து குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்தல்.
- தர உறுதிப்படுதல் சான்றிதலை கோருதல்.
உற்பத்தி செயன்முறைக்கான சான்றிதழைப் பெறல்
- உற்பத்தி செயன்முறைக்கான சட்டங்களை இனங்காணல்.
- அதனை நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தல்.
- சான்றிதழ் வழவங்கும் நிறுவனத்தினூடாக உணவு உற்பத்தி செயன்முறை சுகாதார ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது என உறுதிப்படுத்திக் கொள்ளல்.
- அந்த செயன்முறையை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்.
- தரஆய்வு மூலம் வருடந்தோறும் செயன்முறை மேற்கொள்ளப்படுகிறது என உறுதிப்படுத்தல்.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் வழங்கும் தரச் சான்றிதல்கள்
- SLS
- ISO 22000
- GMP
- HACCP
- சிறப்பான விவசாய நடைமுறைகள் - Good Agricultural Practices (GAP)
- சிறப்பான உற்பத்தி நடைமுறைகள் - Good Manufacturing Practices (GMP)
- சிறப்பான சுகாதார நடைமுறைகள் - Good Hygienic Practices (GHP)
- அவதிப் புள்ளியின் உதவியுடன் அபாயப்பகுப்பாய்வு - Hazard Analysis Critical Control Point (HACCP)
சிறப்பான விவசாய நடைமுறைகள்
- உணவுற்பத்தி செயன்முறையின் போது உணவில் நிகழத்தக்க பௌதிக, இரசாயன மாற்றங்கள் என்தளவுக்கு கட்டுப்படுத்தினாலும் பயிர் செய்கை நிலம் தொடக்கம் தொழிற்சாலை வரை கழிவுப் பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்புண்டு.
- இதனை தவிர்ப்பதற்கு இவ்வாறான முகாமைத்துவத் தொகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பயிர்ச் செய்கைக்கான நிலத் தெரிவு
- சிற்பபான நடுகைப் பொருட்களை தெரிவு செய்தல்
- பீடைக்கட்டுப்பாட்டு முறைகளை தெரிவு செய்தல்
- விவசாய இரசாயனம், தாவரப் போசனை முகாமைத்துவம்
- நீர்ப்பாசனமும், நீரின் அமிலத் தன்மையும்
- வயலை சுகாதாரமாக பேணுதல்
- அறவடையும் அதற்கு பிந்திய தொழிநுட்பமும்
- மேலே கூறிய அனைத்து முறைகள் தொடர்பாகவும் அறிக்கை ஒன்றை பேனுதல்
சிறப்பான உற்பத்தி நடைமுறைகள்
- உணவு உற்பத்திகள் உயர் சுகாதாரமான நிலமைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என சான்றுபடுத்த இந்த முகாமைத்துவ தொகுதி முக்கியமானது.
- உற்பத்தி மேற்கொள்ளப்படும் இடம் சூழல் மாசடைதலுக்கு உட்படாத இடமாக இருத்தல் வேண்டும்.
அவதிப் புள்ளியின் உதவியுடன் அபாயப்பகுப்பாய்வு
- இது உணவுப் பாதுகாப்புக்ெகன தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்கான ஒரு முறைமை.
- உணவை பதப்படுத்தும் போது ஒரசாயன, பொளதிக மற்றும் நுண்ணங்கி பகுதிகள் மூலம் உணவு மாசடையும்.
- இம்மாசினை பரிசோதித்து அதற்கான காரணங்களை இனங்காணலும், பகுத்தாய்தலும், அவ்வபாயங்களை இயன்றளவு குறைப்பதற்கு/ நீக்குவதற்கு ஆவணம் செய்தலுமே இதன் பிரதான நோக்கம் ஆகும்.
- அபாயத்தை பகுப்பாய்வு செய்தல்
- அவதிக் கட்டுப்பாட்டுப் புள்ளியை தீர்மானித்தல்
- அவதி எல்லைகளை தாபித்தல்
- அவதிக் கட்டுப்பாட்டுப் புள்ளிகளை அவதானித்தல்
- சரிசெய்யும் உத்திகளை தாபித்தல்
- சரிசெய்யும் செயன்முறையை தாபித்தல்
- அறிக்கைகளை சரியாகப் பேணுதல்
தரம்
மக்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான அநுகூலங்களை நோக்கமாகக் கொண்டு விஞ்ஞானத்தையும், தொழிநுட்பத்தையும், அனுபவத்தையும் இணைத்து அதன் விளைவுகளை பொதுவான அங்கீகாரம், ஒத்துழைப்பு, உடன்பாடுகளுடன் சர்வதேச, வலய நுட்ப ஒழுங்கு தரம் எனப்படும்.
- தேசிய மட்டத்திலான தரம்
- சர்வதேச தரம்
- இலங்கை தரச் சான்றிதழ் கொண்ட குறிமுறையை நடைமுறைப்படுத்தல்.
- தேசிய ரீதியான தர உட்பத்திகளை தயாரித்தல்.
- சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணுதல்
- இறுக்குமதிப் பரிசோதனை.
- அரச சட்டதிட்டங்களையும், விதிகளையும் அமுல்படுத்துதல்.
- நுகர்வோருக்கு கல்வியழிக்க முயலுதல்
- தரம் தொடர்பான சட்டத்தை மீறும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.
- உற்பத்தி / சேவை தரத்திற்கு அமைவாக இருத்தல்.
- குறித்த நிறுவனத்தில் தர உறுதிப்பாட்டு மகாமைத்துவ முறைமை நடைமுறைப்படுத்தப்படுதல்.
- வரடாந்த மொத்த வருமானத்தில் 0.05% இனை இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு உடன் படல்.
இடைத்தொடர்பாடல்
உணவு உற்பத்தி நிறுவனத் தலைவர்களுக்கும் ஊழியருக்கு இடையேயும் மூலப்பொருள்களையும், பொதியிடுப் பொருட்களையும், சேர்மானப் பொருள்களையும் வழங்குனர்களுடன் போக்குவரத்து முகவர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் ஆகிய அனைவருக்கிடையேயும் நல்ல இடைத்தொடர்பாடல் பேணப்பட வேண்டும்.
இடைத் தொடர்பாடல் சிறப்பானதாக அமையின் ஒழங்கு விதிகள், உற்பத்தி தொடர்பான கட்டளைகள், ஏனைய அறிவுறுத்தல்களை யாவரும் பெற்றிரு்பபர். இதனால் உற்பத்திச் சங்கிலியின் அந்தந்த படிமுறையின் போது ஏற்படத்தக்க குறைபாடுகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
முன் வேலை வேலைத்திட்டம்
- (GMP, GHP) போன்ற முறைகள் நன்கு செயற்படுவதால் சுகாதார பாதுகாப்பான உற்பத்தி உறுதியாகும்.
- உணவு தொடர்பாக முழு உலகும் ஏற்றுக் கொண்ட சட்டதிட்ட ஒழுங்கு விதிகள் இச்சான்றுப்படுத்தலில் செயற்படுகின்றமையால் உலகின் எந்தவொரு நாட்டிலும் வரவேற்புக்குள்ளாகும்.
முறைமை முகாமைத்துவப்படுத்தல்(HACCP) நடைமுறைப்படுத்துவதால் சுகாதார பாதுகாப்பான உற்பத்திகள் வௌியிடப்படும்.
உடல் நலத்திற்கு பாதுகாப்பான உணவின் தேவையும் முக்கியத்துவம்.
- எந்தவொரு உணவும் 100% பாதுகாப்பற்றதாவதுடன் எந்த உணவும் உடல் நலத்திற்கு கேடாக அமையலாம்.
- உணவு நஞ்சாதல் மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்த்தல்.
- உணவின் மூலம் ஏற்படும் நோய்களை தடுத்தல்.
- உணவை நுகர்வதன் மூலம் உடல் நலத்திற்கு ஏற்படும் ஆபத்தை குறைத்துக் கொள்ளுதல்
- உணவு வழவவங்கல் முமைக்கு தடை ஏற்படுத்தாத முறையில் உணவை பெற்றுக் கொள்வதில் உள்ள தடங்களை குறைத்துக் கொள்ளுதல்
- நரம்புக் கோளாறு, புற்று நோய் போன்ற நீண்ட கால நோய்களை தவிர்த்துக் கொள்ளுதல்.
உணவு ஒவ்வாமை
உணவிலுள்ள சமிபாடு அடைவதற்கு கடினமான பகுதிகள் அல்லது உடலிக்கு ஆபத்தானவை என உடலினால் இனங்காணப்பட்டு நீர்ப்பீடனத் தொகுதியினால் அப்பதார்த்தத்திற்கு எதிராக துலங்களை காட்டுதல் உணவு ஒவ்வாமை எனப்படும்.
பெரும்பாலும் உணவு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளாக நிலக்கடலை, பாலம் பாலுற்பத்திப் பொருட்களும், கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு, இறால், நண்டு போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் இவை தவிர வேறு உணவுகளும் நபருக்கு நபர் ஒவ்வாமை ஏற்படுத்தும்.
ஒரு நபரின் உடல் நிலை மற்றும் வயதிற்கு ஏற்ப ஒவ்வாமை வேறுபடும்
- செறிவு
- தோல் சிவப்பு
- தோல் தடித்தல்
- வீங்குதல்
- கொப்பளம் உருவாதல்
- சமிபாட்டுக் கோளாறு
- வாந்தி
- வயிற்றுவலி
- வாயும், தொண்டையும் வீங்குதல்
உணவு நஞ்சாதல்
நுண்ணங்கிகள் சுரக்கும் நச்சுப் பொருட்கள் உணவினை சென்றடைவதன் மூலம் உணவு நஞ்சாக்கப்படுகின்றது. அன்றியும் சில உணவுகளில் இயற்கையாகவே நச்சுப் பதார்த்தங்கள் உள்ளன.
- வயிற்றுவலி
- வாந்தி
- காய்ச்சல்
- மரணம்
- உணவு உற்பத்தியின் போது
- உணவு கொண்டு செல்லலின் பொது
- உணவு களஞ்சியப்படுத்தலின் போது
- உணவு சந்தைப்படுத்தலின் போது
- உணவு சமைக்கும் போது
- கடல் நத்தை - நரம்பு சந்சு (Neuro toxin)
- மீன் - (Histamin)
- கிழங்கு வகை - சயனைட்
- காளான் - பல்வேறு நஞ்சுகள் (Mushroom toxin)
(Clostridium) சுரக்கும் (Botulinum) எனப்படும் நஞ்சு நரம்புத்தொகுதியை பாதிக்கும்.(Aspergillus) எனும் பங்கசு (Afla toxin) ஐ சுரக்கும்.
பொருத்தமில்லாத உணவுகளை உட்கொள்வதனால் ஏற்படும் பாதிப்புகள்.
- உணவின் தரம் குறைதல்
- பொருளாதார செலவு
- உணவு வீண்விரயம்
- நோய் ஏற்படுதல்
- நுகர்வோருக்கும், விற்பனையாளருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுதல்.
உணவு கையாள்வதுடன் தொடர்பான சட்டப்பிரமானங்களின் அவசியம்.
- உணவை மாசடையச் செய்யும் இயற்கையான, செயற்கையான பொருட்கள் உற்பத்திப் பொருளுடன் சேர்வதை தடுத்தல்.
- நகர்வுக்கு தகாத உணவுப் பொருள்கள் சந்தைக்கு வரதலை தடுத்தல்.
- தரம் குறைந்த உணவுப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படவதை தவிர்த்தல்.
- தவறான பேர்சுட்டி இடுதலையோ, பெயர் சுட்டி இல்லாததையோ, காலாவதியான உணவுப் பொருள்களையோ சந்தைப்படுத்துவதை தவிர்த்தல்.
- அனுமதிப்பத்திரம் இன்றி உணவுற்பத்தி செய்யப்படுவதை தவிர்த்தல்.
- இச்சட்டப்பிரகாரம் காரணமாக உணவு தொடர்பான நம்பிக்கை நகர்வோரிடம் கட்டியெழுப்பப்படும்.
- தரச்சான்றுப்படுத்துகை.
- தயாரிக்கும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருத்தல்.
- முக்கியமான தகவல்கள் குறிக்கப்பட்ட சுட்டித்துண்டு காணப்படுதல்.
- முத்திரையிடப்பட்ட மூடி காணப்படுதல்.
உணவுச் சட்டங்கள்
- நகர்வோரின் தேகாரோக்கியத்திற்காக உணவு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய சட்டம் - உணவுச் சட்டம் இல - 25 (Food act - NO : 25)
- இச் சட்டத்தின் மூலம் உணவுப் பொருள் விற்பனைக்காக தயார்படுத்தல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் போன்ற எல்லாச் செயற்பாடுகளும் அடங்கியிருக்கும்.
- உணவின் சுகாதாரம் போனப்படும் முறையில் அவற்றை பொதி செய்பவரின் சுகாதாரம், இடத்தின் சுகாதாரம், உணவுப் பொதியிடுதலில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் போன்றன தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும்.
- சட்டதிட்டங்களை செயற்படுத்துவதற்கு எல்லாப் பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன அமைப்பு செயற்படுதல் வேண்டும்.
- இச்சட்டங்களை செயற்படுத்துவதற்கான அதிகாரியாக சுகாதார பணிப்பாளர் நாயகம் இருப்பார்.
- சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது நுகர்வோர் மாகான சுகாதார அதிகாரிக்கு அறிவித்தல் வேண்டும்.
- உணவுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அத்துறையுடன் தொடர்பான அமைச்சருக்கு உரிய தகவல்களை வழங்குவதற்கு ஆலோசனை சபையொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- உணவுச் சட்டத்தின் கீழ் உற்பத்தி செயன்முறைகளின் வெவ்றேு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான சட்டதிட்டங்கள் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிடலாம்.
உணவு சேர்மானப் பதார்த்தங்கள்
- சுவையூட்டிகள்
- நிறமூட்டிகள்
- நற்காப்பு பதார்த்தங்கள்
சுவையீட்டிகள்
- சோடியம் நைதரேற்று புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டது. அனேக திடீர் உணவுகளுடன் சுவையூட்டிகள் சேர்க்கப்படும்.
- (MSG - Mono Sodium Glutamate) எனப்படுவது அவ்வாறான ஒரு சுவையூட்டியாகும்.
- உடலில் அரிப்பு ஏற்படுதல்
- தலைவலி ஏற்டுதல்
- கருதியமுக்கம் அதிகரித்தல்
நிறமூட்டிகள்
உணவுடன் சேர்க்கப்படும் நிறமூட்டிகளில் கரற்றின் எனப்படும் இயற்கையான மஞ்சள் சாயம் உண்ணும் உணவின் தரத்தை அதிகரிக்கச் செய்வதோடு வௌிற்றிகள் உணவின் நிறத்தை மாற்றும். (சீனியை வௌிற்றுதல்)
நற்காப்புப் பதார்த்தங்கள்
- உணவுகளின் வகைக்கேற்ப பயன்படுத்தப்படும் நற்காப்பில் பதார்த்தங்களும் வேறுபடும்.

Comments
Post a Comment