கணினி வலையமைப்பு 03
பல வலையமைப்புப் பிரயோகங்கள்ஒரு சாதனத்தில் இயங்கும் என்பதால், ஆரம்ப இடத்திலிருந்து இலக்கு நோக்கி செல்லும் தரவுப் பொட்டலங்களின் வாயிலாகச் செல்லும் பிரயோக மென்பொருட்கள் சரியாகச் செல்கின்றனவா என்பதனை உறுதிசெய்யக் கணினிகளுக்கு ஏதாவதொன்று தேவைப்படும். இயங்கும் பிரயோக தொடர்பாடலில் காணப்படளும் ஒவ்வொரு செயல்முறையும் ஒதுக்கப்பட்ட வலையமைப்பு இடைமுகத்தினூடாகத் தொடர்பாடலினை மேற்கொள்கின்றது. இது குதை என அழைக்கப்படுகின்றது. வலையமைப்பில் காணப்படும் ஒவ்வொரு குதைக்குமென த் தனிச்சிறப்பான எண் உண்டு. இதனைக் குதை எண் என்பர் மற்றும் இது சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்ட IP முகவரிகளுடன் இணைந்து ஒவ்வொரு முறைவழிக்குமாகத் தனிச்சிறப்பாகக் காணப்படும்.
இது குறித்த விருந்தோம்பலில் நடைபெறுகின்றது. வெவ்வேறு கணினிகளில் இயங்கும் செயல்முறைகள் ஒரே இலக்கிற்குத் தரவினை அனுப்பும் போது, வெவ்வேறு முறைவழியாக்கதில் காணப்படும் குகை எண்ணும் IP முகவரியும் குறித்த முறைவழியாக்கத்தினைத் தனிச்சிறப்பாக அடையாளப்படுத்தப் பயன்படும். குதை முகவரியினதும் IP முகவரியினதும் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்படும் முறைவழியாக்கமும் மற்றும் சரியான முறைவழியாக்கத்தினை தீர்மானிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் சரியான முறைவழியாக்கம் பல்சேர்ப்பு என அழைக்கப்படும்.
பயனர் தரவுச் செய்தி நடப்பொழுங்கு (User Data-gram Protocol)
UDP ஆனது ஒரு போக்குவரத்து நடப்பொழுங்காகும் மற்றும் DNS, SNMP போன்ற பல நன்கு அறியப்பட்ட பயன்பாட்டு அடுக்கு நடப்பொழுங்குக்கானது UDP ஆனது எளிய மற்றும் கேள்வி அடிப்படையிலான தகவல் தொடர்புக்குப் பொருத்தமானது, மேலும் இது இணைப்புச் சார்ந்ததல்ல.
பரிமாற்றக் கட்டுப்பாட்டு நடப்பொழுங்கு (Transmission control protocol)
TCP ஆனது தரவரிசைக்கு நம்பகமான தகவலை வழங்குகிறது. இது இணைப்புச் சார்ந்த நடப்பொழுங்காகும். மற்றும் தொடர்ச்சியான ஒப்புக்கொள்வதை (Acknowledgment) பெறுதல் ஊடாக தரவுப்பொட்டலங்களை அனுப்பும். இணையம் மற்றும் மின்னஞ்சல் போன்ற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஆள்களப் பெயர் முறைமை (Domain Name system - DNS)
- கொடுக்கப்பட்ட URL மற்றும் வலைமுகவரிகளுக்குக் கோப்பக சேவையினை வழங்குகிறது.
- HTTP நடப்பொழுங்கானது கொடுக்கப்பட்ட URL களின் பொருத்தமான வலை முகவரிகளை அடையாளம் கான DNS இன் சேவைகளைப் பயன்படுத்துகிறது.
- மீவாசக பரிமாற்று நடப்பொழுங்கு (The hypertext transfer protocol - HTTP)
- HTTP ஆனது பகிர்வு, கூட்டுப்பண்பு மற்றும் மீ ஊடகம் போன்ற தகவல் அமைப்புக்களைப் பயன்படுத்தப் பயன்படும் ஒரு பிரயோக அடுக்கு நெறிமுறையாகும்.
- HTTP என்பது உலகளாவிய வலயத்திற்கான தரவுத் தகவல் தொடர்புக்கான அடித்தளம் ஆகும்.
சேவைப்பயனர் - சேவை மாதிரி (Client - Server model)
சேவையக மாதிரியானது, பகிர்ந்தளிக்கப்பட்ட பிரயோக அமைப்புக்கள், பிரிக்கப்பட் பணிகள் அல்லது பிரயோக அமைப்புக்கள் பிரிக்கப்பட்ட அமைப்புக்கள் போன்ற சேவையினை வழங்குவது சேவையகம் எனவும் இதற்கான கோரிக்கையினை மேற்கொள்வது சேவைப்பனர் எவும் அழைக்கப்படும்.
TCP/ IP நெறிமுறை கட்டமைப்பு

வலையமைப்பு அணுகல் அடுக்கு
- TCP/IP படிமுறைகளில் கீழ்மட்டத்திலுள்ள அடுக்கு.
- வலையமைப்பிலுள்ள ஏனையச் சாதனங்களுக்குத் தரவை வழங்குவதற்கான வழிகளை வழங்குகிறது.
- IP தரவளவு பரிமாற்றுவதற்கு வலையமைப்பை எவ்வாறு பயன்படுத்தல் என்பதை வரையறுக்கின்றது.
- Ethernet இல் IP முகவரியானது பௌதீக முகவரிக்கு மாற்றப்படுகின்றது.
இணைய அடுக்கு
- மேல் அடுக்க நெறிமுறைகளுக்கும் வலையமைப்பிற்கும் இடையிலான தொடர்பினை முகாமிக்கின்றது.
- மகவரியிடலையும் தரவு விநியோகத்தையும் கையாளுகின்றது.
- Internet Protocol (IP) மேற்குறித்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றது.



மறைகுறியாக்கமும் இலக்க ஒப்பமும் (Encryption and digital signature)
மறைகுறியாக்கம் என்பது தரவுகளைப் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு குறியாக்கவியலில் நுட்பமாகும். இரண்டு வகையான மறைகுறியாக்கங்கள் காணப்படுகின்றன.
1. சமச்சீர் சாவி மறைகுறியாக்கம் (Symmetric key encryption)
சமச்சீர் சாவி மறைகுறியாக்கத்தில், மறைகுறியாக்கத்திற்கும் (Encryption) மறைகுறியாக்கத்தினை நீக்கலுக்கும் (Decryption) ஒரே சாவியே பயன்படுத்தப்படும். சமச்சீர் சாவி மறைகுறியாக்கதினைப் பயன்படுத்தும் போது பயனர் முதலில் பொதுச்சாவி (Common key) ஒன்றினைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
2. சமச்சீரற்ற சாவி மறைகுறியாக்கம் (Asymmetric key encryption)
சமசீரற்ற சாவி மறைகுறியாக்கத்தில், தரவுகளை மறைகுறியாக்கம் செய்வதற்கும் மீள்குறியாக்கம் செய்வதற்குமென வெவ்வேறு விதமான இரண்டு சாவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு பயன்பாட்டாளரும் தனிப்பட்ட சாவி (Private key) மற்றும் பொதுச் சாவி (Public key) என்ற இரண்டு விதமான சாவிகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சாவிகள் கணித அடிப்படையிலான தொடர்பிடையவை. ஒரு சாவியை மறைகுறியாக்கத்திற்குப் பயன்படுத்தும் போது, மற்றைய சாவி மறைகுறியாக்கப்பட்ட வாசகத்தை மீண்டும் மூல வாசகமாக மாற்றும்.
கையெழுத்திடல் (Signing)
வழக்கமாக ஒரு செல்லுபடியாகும் ஆவணம் கீழ் கையொப்பமிடப்பட்டிருக்கும். இதன் காரணமாக குறித்த ஆவணத்தில் காணப்படும் தகவல்கள் பெறுநரினால் நம்பிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றது. வழக்கமான ஆவணங்கள் போலவே இலக்கமுறை ஆவணங்களிலும் காட்டாயமாகக் கையெழுத்துக் காணப்படவேண்டும். இதன் காரணமாக இலக்கமுறைக் கையெழுத்திடலானது செய்திகளின் அங்கீகாரத்திற்கு உதவுகின்றது. இலக்கமுறைக் கையெழுத்திடலானது செய்தி ஒன்றினை உருவாக்கியவர், உருவாக்கிய திகதி மற்றும் நேரம் என்பனவற்றினை உறுதிப்படுத்த உதவும்.
தீங்கு பயக்கும் மென்பொருள்கள் (Malware)
கணினி முறைமை ஒன்றிற்கு தீங்கு பயக்கும் நோக்கத்துடன் எழுதப்படும் மென்பொருட்கள் தீங்குபயக்கும் மென்பொருட்கள் எனப்படும்.
1. கணினி நச்சு நிரல் (Viruses)
- கணினியில் உள்நுழைந்து, கணினி அறியாமலே, கணினிக்கு சேதம் விளைவிக்கும் செயல்நிரல் நச்சு நிரல்கள் எனப்படும்.
2. றோஜன் குதிரை (Trojans horse)
- தீங்கற்றது போன்று போன்றுகின்ற போதிலும் தீஙகுபயக்கும் மென்பொருளாகிய இது பயனர் அறியாமலேயே கணினியுடன் தொடர்புபடுகின்றது.
3. Phishing
- நம்பகமான நபராக நடிப்பதன் மூலம் உணர்திறன்மிக்க பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடன்அட்டை இலக்கம் போன்ற விபரங்களைப் பெறுதல்.
அங்கீகரிக்கப்படாத தீங்கிழைக்கும் அணுகல்களுக்கு எதிரான பாதுகாப்பு
- தீச்சுவர் (Firewalls) - தரவுகளை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எதிராக பாதுகாப்பதற்காக செயற்படும் அமைப்பு
- எதிர்நச்சுநிரல் மென்பொருள் (Antivirus software) - கணினிக்கு தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுதல் அல்லது கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் மென்பொருள்.
- கணினி பயன்படுத்துனர் (Computer users) - தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கும் மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகல்களுக்கும் எதிராக அலையமைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தக் கணினி பயனர்கள் அறிந்திருக்க வேண்டும் தாக்குதல்களிலிருந்து முறைமையைப் பாதுகாப்பதற்கு வலுமிக்க கடவுச் சொற்களைப் பயன்படுத்துவதுடன் எதிர்நச்சுநிரல் அடிக்கடி தற்காலப்படுத்தலையும் மேற்கொள்ளல் வேண்டும்.
இணையச் சேவை வழங்குனர்கள் (ISPs)
இணைய சேவைகளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்காமான சேவையினை இணையச் சேவை வழங்குனர்கள் வழங்குவர். இணையச் செவை வழங்குனர்கள் பல்வேறு இடங்களில் அல்லது வடிவங்களில் ஒழங்கமைக்கப்படலாம்.
மொடம் (Modem)
எல்லா வகையான DSL (Digital subscriber line) மற்றும் ADSL (Asymmetric digital subscriber line) இன் கூட்டாக குறிப்பிடப்படுகிறது. ADSL என்பது இணையத்துடன் இணைக்கப் பயன்படுத்தபடும் DSL அகலப்பட்டை தகவல்தொடர்பு தொழிநுட்பத்தின் ஒரு வகையாகும். பாரம்பரிய மொடத்துடன் ஒப்பிடும் பொழுது, ADSL ஆனது அதிக தரவுகளை, தொலைபேசி செப்புக் கம்பி வழியூடாக அனுப்புகிறது.
DSL இன் நன்மைகள்
- சுதந்திரமான சேவைகள்
- பாதுகாப்பு
- ஒருங்கிணைப்பு
ADSL இன் நன்மைகள்
- மலிவான விலைகள்
- முழுமையான அகவமைப்பியலுமை
Comments
Post a Comment