வணிக அறிமுகம்
இலாப நோக்கில் மனிதத் தேவைகள், விருப்பங்களைப்
பூர்த்தி செய்வதற்குத் தேவையான பொருள்கள்,
சேவைகளை உற்பத்தி செய்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல்
என்பவற்றுடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகளையும் வணிகமெனப்படும்.
மனித தேவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்த பொருளாதார நடவடிக்கையும் வணிகம் ஆகும்.
தேவை
- மனிதன் உயிர் வாழ்வதற்கு நிறைவேற்ற வேண்டிய சகல உடல், உள நிலைமைகளும் தேவைகள் ஆகும்.
உதாரணம் உணவு, உடை, பாதுகாப்பு, அன்பு, கல்வி, சுகாதாரம், தொடர்பாடல், போக்குவரத்து
விருப்பம்
- தேவைகள் நிறைவேற்றப்படுகின்ற வடிவம் விருப்பம் ஆகும்.
உதாரணம்
உணவு என்பது தேவை சோறு, பிட்டு, இடியப்பம் போன்றன விருப்பம் ஆகும்.
உடை என்பத தேவை சேலை, காற்சட்டை, வேட்டி போன்றன விருப்பம் ஆகும்.
தேவையின் பண்புகள்
- விருப்பத்துடன் ஒப்பிடும் போது வரையருக்கப்பட்டது.
- சகலருக்கும் தேவை என்பது பொதுவானது.
- உயர் வாழ்வத்கு கட்டாயம் நிறைவு செய்யப்பட வேண்டும்.
- வணிகங்களால் தோற்றுவிக்க முடியாது.
- சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றம் அடையாது.
விருப்பத்தின் பண்புகள்
- தேவையுடன் ஒப்பிடும் போது வரையருக்கப்படாது.
- நபருக்கு நபர் வேறுபடும்.
- உயர் வாழ்வத்கு கட்டாயம் நிறைவு செய்யப்பட வேண்யதில்லை.
- சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றம் அடையும்.
உற்பத்திப் பொருள்
மணித தேவை விருப்பங்களை பூர்த்தி
செய்வதற்காக சந்தைக்கு முன்வைக்கப்படும் எதுவும் உற்பத்தி பொருள் ஆகும். இது பரந்த
அடிப்படையில் 10 வகையாக வகைப்படுத்தப்பட்டாலும் அடிப்படையில் பொருட்கள் சேவைகள் என இரு
வகைப்பத்தப்படும்.
பொருட்களின் பண்புகள்
- தொட்டுணரக் கூடியது
- களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடியது
- வழங்குனரிடம் இருந்து வேறுபடுத்தி பெறக்கூடியது
- ஓரினத் தன்மை கொண்டது.
சேவையின் பண்புகள்
- தொட்டுனரக் முடியாதது
- களஞ்சியப்படுத்தும் தன்மை அற்றது
- வழங்குனரிடம் இருந்து வேறுபடுத்தி பெற முடியாதது
- வழங்குனருக்கு வழங்குனர் சேவையின் தன்மை வேறுபடும்.
சந்தை
தேவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் கொள்வனவாளர்ளும் விற்பனையாளர்களும் சந்திக்கின்ற ஏதேனும் ஒரு நிலைமை சந்தை எனப்படும்.
வணிகங்களின் பண்புகள்
- உற்பத்திப் பொருட்கள் பண ரீதியான பெறுமானத்தின் அடிப்படையில் விற்பனை அல்லது பரிமாற்றம் ஏற்படும்.
- பொருட்கள் சேவைகளினது கொடுக்கல் வாங்கல் தொர்ச்சியாக இடம் பெறல்.
- இலாபம் அல்லது நட்டத்தினால் ஊக்குவிக்கப்படல்.
- உரிமையாளர், ஊழியர் வாடிக்கையாளர் அரசு போன்ற தரப்பினர்கள் சார்பில் இடர்கள் தோன்றுதல்.
- வாடிக்கையாளர்களிடம் விருப்பங்களை தோற்றுவித்தல்.
- அருமையான வழங்களை பயன்படுத்தி பொருளாதார கருமங்களில் ஈடுபடல்.
வணிகம் ஒன்றின் அடிப்படை கருமங்கள்
- மனித தேவை விருப்பங்களை பூர்த்தி செய்தல்.
உதாரணம் - சிற்றுன்டிச் சாலையில் வாடிக்கையாளர்களுக்கு உணவினை வழங்கி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தல்.
- வளங்களின் பெறுமதியை அதிகரித்தல்.
உதாணம் - துணியினை பயன்படுத்தி ஆடை தைத்தல் இதன் போது துணியின் பெறுமதி அதிகரித்தல்.
வணிகத்தின் நோக்கங்கள்
- குறித்த சந்தையில் இறுதி வரை நிலைத்திருத்தல்.
- விற்பனை, இலாபம் போன்றவற்றை உச்சப்படுத்தல்.
- குறித்த சந்தையில் நிறுவனத்திற்கான பங்கினை அதிகரித்தல்.
- நுகர்வேனின் தேவை விருப்பங்களை உத்தம மட்டத்தில் பூர்த்தி செய்தல்.
- சமூகம், ஊழியர்களின் நலன்களை உச்சப்படுத்தல்.
வணிக பரம்பல்
ஆரம்ப காலத்தில் மனிதன் தனக்கான தேவையை தானே உற்பத்தியில் ஈடுபட்டு
பூர்த்தி செய்து கொண்டான் இது நேர்; உற்பத்தி என அழைக்கப்பட்டது.
அவ்வாறு நேர் உற்பத்தியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் விளைவாக
சிறப்புத் தேர்ச்சி உருவானது. (குறித்த உற்பத்தியில் தொடர்;ச்சியாக ஈடுபடுவதன் விளைவாக
அவ்வுற்பத்தி தொடர்பாக கிடைக்கும் அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவம் சிரப்புத் தேர்ச்சி ஆகும்) சிறப்புத்
தேர்ச்சியின் விளைவாக தனது தேவைக்கும் அதிகமாக அவர்களால் உற்பத்தி செய்ய
முடிந்தது. அவ்வாறு தேவைக்கும் அதிகமாக காணப்பட்ட உற்பத்திப் பொருட்கள் மிகை
உற்பத்தி பொருட்கள் மிகை உற்பத்தி எனப்பட்டது. காலப்போக்கல் அம்மிகை உற்பத்திகளை
தனது மற்றைய தேவை விருப்பங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் மற்றொரு நபரின் மிகை
உற்பத்தியுடன் பரிமாற்றிக் கொண்டான்.இது பண்டமாற்று எனப்பட்டது.( மிகை
உற்பத்தியின் விளைவாக பண்டமாற்று உருவனாது)பண்டமாற்றின் பின் வியாபாரம்
தோற்றம்பெற்றது.( மிகை உற்பத்திகளின் பரிமாற்றத்தின் விளைவாக வியாபாரம் உருவனாது).
பண்டமாற்றில் காணப்பட்ட குறைபாடுகள் விளைவாக பணம் தோற்றம் பெற்றது.
வணிகத்தின் பிரதான வளர்ச்சிக்கட்டங்கள்
- வணிகத்தின் வளர்ச்சிப் பாதையில் பல கட்டங்கள் காணப்பட்டாலும் கூட பிரதான வளர்ச்சிக் கட்டங்களாக
- பண்ட மாற்று
- பணப்பாவணை
- கைத்தொழில் புரட்சி
- தகவல் தொழிநுட்ப வளர்ச்சி
பண்ட மாற்று
மிகை உற்பத்திகளுக்கு மிகை உற்பத்திகளை பரிமாற்றுதல் பண்ட மாற்று
ஆகும்.
காலப் போக்கில் சனத்தொகை வளர்ச்சிஇ விருப்பங்களின் அதிகரிப்பு போன்ற
காரணங்களினால் பண்டமாற்று முறைமையில் பல குறைபாடுகள் தோன்றின.
அவையாவன
- கொண்டு செல்லல் கடினம்.
- இரட்டை பொருந்துகை இன்மை.
- சேமித்து வைக்க முடியாமை.
- பொதுவான அளவீட்டு சாதனம் இன்மை.
- பரிமாற்றப்படும் சில பொருட்களை சிறு சிறு அலகுகளாக பிரிக்க முடியாமை.
போன்ற குறைபாடுகளின் விளைவாக அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு
பணம் தோற்றம் பெற்றது. இதுவே இரண்டாவது பிரதான வளர்ச்சிக் கட்டமாகும்.
பணப்பாவனை
கொடுக்கல் வாங்களுக்கு பயன்படுத்தக் கூடியதும் பொதுவாக எல்லோராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான எந்த ஒரு சாதனமும் பணம் ஆகும்.
இப்பணப் பாவணையானது பண்டமாற்று முறைமையில் காணப்பட்ட குறைபாடுகளை
நிவர்த்தி செய்தது.
பணத்தின் வளர்ச்சிக்கட்டங்கள்
- பொருட் பயன்பாடு
உதாரணம்: புகையிலை, சிப்பி
- உலோக வகைப் பயன்பாடு
உதாரணம்: தங்கம், வெள்ளி போன்ற உலோகப் பொருள்கள்
உலோக நாணயப் பணப் பயன்பாடு
பல்வேறு அளவுகளைக் கொண்ட உலோகத் துண்டுகளின் முகப்பில் குறிப்பிட்ட
பெறுமானம் குறிப்பிடப்பட்டது. பிற்காலத்தில் அச்சிடப்பட்ட
நாணங்களுக்கு இதுவே
அடிப்படையாக இருந்தது.
நாணயம், நாணயத்தாள்களின் பயன்பாடு
- பெறுமதி கூடிய உலோகத்துண்டுகளைப் பணமாகப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட
- சிரமம் காரணமாக அகப்பெறுமதியற்ற குற்றி நாணயங்கள் பாவனைக்கு உட்படுத்
- தப்பட்டன. இதன்போது தாள் நாணயங்களும் பயன்பாட்டிற்குட்படுத்தப்பட்டது.
- அரசின் அதிகாரம் பெற்ற அதிகாரியினால் வெளியிடப்படும் தாள், குற்றி நாணங்கள் இவற்றிற்குரியதாகும்.
உதாரணம்: இலங்கை - ரூபா
ஐக்கிய இராச்சியம் - பவுண்
ஐக்கிய அமெரிக்கக் குடியரசு - டொலர்
ஐரோப்பிய நாடுகள் - யூரோ
வங்கிப் பணப் பயன்பாடு
- வங்கி நடைமுறைக் கணக்குடன் தொடர்புடைய காசோலைப் பயன்பாடு.
இலத்திரனியல் பணப் பயன்பாடு
- தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் எண்மானத் தொழினுட்ப விருத்தியுடன்
- அறிமுகப்படுத்தப்பட்ட கணினி மயப்படுத்தப்பட்ட வலையமைப்பின் மூலம கொடுக்கல் வாங்கல் இடம்பெறும் முறையொன்றாகும்.
உதாரணம்: வரவட்டை
கடனட்டை
முற்பணக் கொடுப்பனவு அட்டை
கடன் மாற்றுகை முறை
கைத்தொழில் புரட்சி
உற்பத்தியில் மனித உழைப்புக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்த
ஆரம்பித்தது கைத்தொழில் புரட்சி எனப்படும்.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக உற்பத்தியில் மனிதனின் பங்களிப்பு குறைவடைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சி காரணமாக இதுவரையில் காணப்பட்ட குடிசைக் கைத்தொழில்கள் பாரியளவு கைத்தொழில்கள் எனும் நிலைக்கு மாறியமை காரணமாக வியாபாரமும் விரிவடைந்தது.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக பல சாதகமானஇ பாதகமான விளவுகள் தோன்றியது.
கைத்தொழில் புரட்சியுடன் வங்கி, போக்குவரத்து, காப்புறுதி, தொடர்பாடல், களஞ்சியப் படுத்தல் போன்ற துணைச் சேவைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
கைத்தொழில் புரட்சியானது வணிகப் பரம்பலின் மூன்றாவது கட்டமாகும்.
தகவல் தொழிநுட்ப வளர்ச்சி
வியாபாரம்
பணப் பெறுமதியின் அடிப்படையில் பொருட்கள் சேவைகளின் பறிமாற்றம்இ
உரிமை மாற்றம் இடம்பெறல் வியாபாரம் எனப்படும்.
இது உள்நாட்டு வியாபார மற்றும் வெளிநாட்டு வியாபாரம் என இருவகைப்படும்.
துனைச் சேவைகள்
வியாபார நடவடிக்கைகளை விரைவாகவும் இலகுவாகவும் மேற்கொள்வதற்கு
உதவுகின்ற சேவைகள் துனைச் சேவைகள் ஆகும். இதில் பின்வருவன உள்ளடங்கும்.
- காப்புறுதி
- வங்கி
- போக்குவரத்து
- தொடர்பாடல்
- கலஞ்சியப்படுத்தல்
வர்த்தகம்
துணைச் சேவையின் உதவியுடன் இடம் பெறும் வியாபார நடவடிக்கை வர்த்தகம்
எனப்படும்.

எனவே வணிகம் என்பது வர்த்தகம் மற்றும் வியாபாரம் எனும் விடயங்களை பார்க்க பரந்ததாகும்.
இலத்திரணியல் வியாபாரம்
- இலத்திரணியல் சாதனங்களை பயன்படத்தி பொருட்கள் சேவைகளை விற்பனை செய்தல்.
இலத்திரணியல் வர்த்தகம்
- துணைச் சேவையை பயன்படுத்தி இலத்திரணியல் சாதனங்களின் ஊடாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
இலத்திரணியல் வணிகம்
- சகல வணிக நடவடிக்கைகளையும் இலத்திரணியல் சாதனங்களின் உதவியுடன் மேற்கொள்ளல் இலத்திரணியல் வணிகம் எனப்படும்.
இலத்திரணியல் வர்த்தகம் நடைமுறையில் பிரபல்யமடைந்தமைகான காரணம்
- ஊரடங்கு காலங்களில் தேவையான பொருட்களை வீட்டிற்கே பெற முடிதல்
- நேரம் மீதப்படுத்தப்படல்
- வணிக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடிதல்
- தேவையான பொருட்கள் தொடர்பான முழு தகவலையும் அறிய முடிதல்
- பொருட்களை ஒப்பிட்டு கொள்வனவு செய்ய முடிதல்


This comment has been removed by the author.
ReplyDeleteBusiness studies notes
Delete