தரவு முறைமை 02
கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு முறையியல் (SSADM)
- 1980 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முறைமைகளில் ஒன்று.
- முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தின் கட்டங்களில், சாத்தியவள கற்கையில் இருந்து முறைமை வடிவமைப்பு வரையான பெரும்பான்மையினைக் கொண்டுள்ளது.
முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தின் கட்டங்கள் (SDLC) ஆனது கட்டமைப்பு முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு முறையியல் (SSADM) ஆக மாற்றப்படல்.
SSADM மேற்கொள்ளப்படும் கட்டங்கள்

சாத்திய வளக்கற்கை
- முறைமை வளர்ச்சிச் சாத்தியத்தினைத் தீர்மானிக்க வணிகப் பகுதி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது.
- அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அமைப்புகளின் தேவைகள் அடையாளம் காணப்பட்டு, நடப்பு வணிகச் சூழல் மேற்கொள்ளப்பட்ட செயல் முறைகளின் அடிப்படையிலும், தரவு சேமிக்கப்பட்டதின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும்.
- விரிவான செயல் சார்ந்த தேவைகள் மற்றும் செயல்சாராத் தேவைகள் வரையறுக்கப்படுகின்றன. மற்றும் புதிய முறைமையின் தேவையான செயலாக்கத்தையும் தரவுச் சேமிப்பையும் வரையறுக்க புதிய செயல் முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
- தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் தர்க்கரீதியாகக் குறிப்பிடப்பட்ட முறைமையை உருவாக்கி கொள்ள வேண்டும்.
- தர்க்கரீதியான வடிவமைப்பானது தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பௌதீக வடிவமைப்பிற்காக மாற்றியமைக்கப்படுகின்றது.
பூர்வாங்க ஆய்வு (Preliminary investigation)
இது முறைமை அபிவிருத்தி வாழ்க்கை வட்டத்தின் முதற்கட்டமாகும். இது உண்மையில் பௌதீக முறைமையானது எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான தௌிவான விளக்கத்தினை வழங்கும். பூர்வாங்க ஆய்வானது பிரச்சினை வரையறை மற்றும் சாத்திய வள கற்கை என்ற இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. பிரச்சினை வரையறை கட்டத்தில் முறைமையின் நோக்கம் அடையாளம் காணப்படுகின்றது. சாத்திய வள கற்கையில் முன்மொழியப்பட்ட முறைமையின் சாத்தியக் கூற்று மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஒரு அமைப்பின் சாத்தியம் என்பது ஒரு புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட அமைப்பின் உருவாக்கம் நடைமுறையில் பயனுள்ளதாக என்பது தொடர்பானது.
சாத்திய வள கற்கையானது உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்படுத்துனர் தொடர்பான தோற்றப்பாடுகளில் இருந்து மதிப்பிடப்படுகின்றது. உற்பத்தியாளர்கள், புதிய முறைமை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்திதையும் மனிதவளத்தையும் கொண்டிருக்கின்றனவா என்பதை மதிப்பிடுகின்றனர். புதிய முறைமையானது பயனர்களுக்கு நன்மை இருக்குமா? மற்றும் முறைமையினை உருவாக்க வேண்டிய பொருளாதார நிலையினைக் கொண்டுள்ளனரா? மற்றும் முறைமையின் சாத்தியவள கற்கை ஆனது தொழில்நுட்பம், பொருளாதாரம், செயற்பாடு, மற்றும் தாபனம் போன்ற நான்கு முக்கிய அம்சங்களில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழினுட்பச் சாத்தியப்பாடு
- பொருளாதாரச் சாத்தியப்பாடு
- செயற்பாட்டுச் சாத்தியப்பாடு
- தாபன சாத்தியப்பாடு
தொழினுட்பச் சாத்திப்பாடு
இது உற்பத்தியாளர்கள் முன்மொழியப்பட்ட அமைப்பை நிர்வகிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளனரா என்பதை மதிப்பீடு செய்கின்றது. புதிய முறைமைக்குத் தேவையான தெழினுட்பம் சார்ந்த தேவைகளையும் மற்றும் சிக்கலான முறைமை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் உற்பத்தியாளர்கள் குறித்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தலில் அனுபவத்தினைக் கொண்டுள்ளனரா என்பது தொடர்பான மதிப்பீடு முறைமைக்கு இது பதிலளிக்கின்றது.
பொருளாதாரச் சாத்தியப்பாடு
இது முறைமையினை வடிவமைப்பதற்கான செலவுகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றினை மதிப்பீடு செய்கிறது. வடிவமைப்பாளர்களின் செலவும் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் ஒரு முக்கிய விடயம், செலவுப் பயன்பாட்டுப் பகுப்பாய்வு ஆகும்.
தூபனச் சாத்தியப்பாடு
இது முன்மொழியப்பட்ட அமைப்பு நிறுவனத்தின் மூலோபாயத்தின் நோக்கங்களை ஆதரிக்கும் அளவிற்குத் தீர்மானிக்கின்றது. இங்கு இந்த அமைப்பானது முழு அமைப்பின் துனைக்குழுவாக எடுக்கப்படும்.
சாத்திய வள ஆய்வு முடிவு என்பது ஒரு சாதாரன ஆவணமாகும் முன்மொழியப்பட்ட தீர்வின் தன்மை மற்றும் நோக்கம் பற்றிய ஒரு அறிக்கையாகும். சாத்தியக்கூறு ஆய்வு முடிந்ததும், இந்த ஆய்வுகளின் படி ஒப்புதல் அல்லது ஒப்புதல் மறுப்பு என்பன ஏற்படுத்தப்படுகின்றன. திட்டம் சாத்தியமான மற்றும் விரும்பத்தக்கதாகக் காணப்படுகின்றது என்றால், செயற்றிட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கப்பெறுகின்றது. விருப்பத்திற்கு மாறாகக் காணப்படின் மேலதிக செயற்பாடுகள் செயற்படுத்தப்படும.
தேவைப் பகுப்பாய்வு
தேவப் பகுப்பய்வு என்பது முறைமைத் தேவைகளின் வரையறைக்குள் காணப்படும் பயனர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்வதும் அது பற்றிக் கற்றலுமான செயற்பாடாகும். இதன் முக்கிய நோக்கம் புதிய முறைமையின் எல்லைகளைக் கண்டறிவதும், புதிய முறைமையானது பிரச்சினை அமைப்பிற்கு எவ்வாறு தீர்வாக அமைகின்றது என்பதை அறிவதுமாகும். பகுப்பாய்வு ஆனது பயனர் தேவைகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் கண்டறிய மற்றும் தீர்க்க உதவுகிறது.
செயல் சார்ந்த தேவைகள்
குறித்த முறைமையினால் என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய தேவைகளின் செயற்பாடுகளை விபரித்தல் அல்லது முறைமையின் நடத்தை IEEE தரநிலை அவசியமாகும்.
முக்கிய தேவகளை வகைக்குறிக்க Shall என்னும் பதமும் முக்கியம் குறைந்த தேவைகளை வகைக்குறிக்க Should என்னும் பதமும் பயன்படுகின்றது
செயற்பாட்டு விளக்க வரைபடங்கள்
வணிகச் செயற்பாட்டு மாதிரி
முறைமையின் ஆராய்தலில் முறைமையில் என்ன நடக்கின்றது என்பதைப் பிரிந்து கொள்வதற்கான தொடக்கத் தொழில்நுட்பமாகும். முறைமையில் காணப்படும் நபர்கள் மற்றும் அவர்களது சூழல்கள் என்பனவற்றில் வணிக நடவடிக்கைகளைக் காண்பிக்க இது பயன்படுகின்றது
தரவுப் பாய்ச்சல் மாதிரி
இது முறைமையில் காணப்படும் தரவுப் பாய்ச்சலினைக் காண்பிகக்ப் பயன்படுகின்றது. இது முறைமையினை உபமுறைமைகளாகப் பிரிப்பதற்குப் பயன்படுகின்றது. இது தரவுப் பாய்ச்சல் வரைபடம் மற்றும் இது சார்ந்த எழுத்துருவான விளக்கங்களைக் கொண்டுள்ளது. இது முறைமையைச் சுற்றித் தரவு அனுப்பப்படுகின்ற விதத்தை விபரிக்கின்றது. மற்றும் முறைமையில் தரவு செலாக்கப்படுவது எவ்வாறு மற்றும் தரவு சேமிக்கப்படுவது எவ்வாறு என்பன தொடர்பாக விளக்குகிறது.
தரவுப் பாய்ச்சல் மாதிரியின் கூறுகள்
வௌிப்புற நிலைபொருள்
- குறித்த முறைமையில் பயன்படும், வௌிப்புறமாக உள்ள மக்கள், அமைப்புகள் அல்லது பிற முறைமைகள் என்பவை ஆகும்.
- ஒரு மூலமாக அல்லது தரவு பெறுநராக செயல்படுகின்றது.
- பெயர் பொதுவான வகையை கொண்டதாகக் காணப்பட வேண்டும்
தரவுப் பாய்ச்சல்
- முறைமையின் உள்ளேயும் வௌியேயும் தரவுப் பாய்ச்சலினைக் காட்டுகிறது.
- ஒருவழி அல்லது இரண்டு வழிகள் இருக்க முடியும்
- திட அம்புகள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும், அத்தோடு இரண்டு வௌிப்புறக் கூறுகள்
Comments
Post a Comment