கணினி நினைவகம்
கணினி நினைவகம் ஆனது கணினியின் தரவு மற்றும் தகவல்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் கணினி நினைவகம் ஆனது 02 வகைப்படும்.
- நிலையான நினைவகம் (volatile memory)
- நிலையற்ற நினைவகம் (non - volatile memory)
நிலையான நினைவகம் (volatile memory)
கணினிகளில் பயன்படுத்தப்படும் நினைவகம் கணினிகளின் செயற்பாட்டிற்கு முக்கியமானதொன்றாகும். நினைவகத்தால் ப[ரியும் பிரதான செயலானது கணினி தரவு செயற்பாட்டின் பலதரப்பட்ட கூட்டங்களுக்குத் தேவையான தரவுகளைக் களஞ்சியப்படுத்தி வைப்பதாகும். அதில் களஞ்சியப்படுத்தி உள்ள தரவுகள் அழியாமலிருக்க தொடர்ச்சியாக மின் வழங்கலை மேற்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வகையில் அந்த நினைவகங்களுக்குக் கிடைக்கும் மின்தொடர்பு துண்டிப்படைந்தால் உடனே அதன் நினைவகத்திலுள்ள தரவுகள் அழிந்து விடும். ஆகையால் இந்நினைவகங்கள் மின் தொடர்பின் மேல் தங்கியிருக்கும் நினைவக வகையாகும். கணினியிலுள்ள கீழ்காணும் நினைவகங்கள் இவ்வகையைச் சேறும்.
- எழுமாறு அணுகல் நினைவகம் (RAM)
- பதிவகங்கள் (Registers)
- பதுக்கு நினைவகம் (Cache memory)
எழுமாறு அணுகல் நினைவகம்
இந் நினைவகம் கணினியின் பிரதான நினைவகம் எனவும் அழைக்கப்படும். கணினியின் மத்திய செயற்பாட்டு அலகிற்கு ஏதாவதொரு செயற்பாட்டைச் செய்வதற்குத் தேவையான முறைமை மென்பொருள், பிரயோக மென்பொருள் மற்றும் தேவையான தரவுகளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது இந் நினைவகத்திலேயாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்பாட்டு அலகிற்கு இதில் உள்ளவைகளை நேரடியாக பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமையேயாகும். அது போலவே அதன் பிரவேச காலம் மிகவும் குறைவானபடியால் செயற்பாடு மிகவும் வேகமாகச் செய்ய முடியும்.
இந் நினைவகத்தின் ஏதாவதொரு இடத்திலிருந்து நேரடியாகத் தரவுகளைச் செயலியிற்குப் பெற்றுக் கொள்வதனால் அதற்கு ஒழுங்கு முறையொன்று தேவையில்லை. ஆகையால் இந் நினைவகத்தை எழுமாறு அணுகல் நினைவகம் என அழைக்கப்படும்.
இந் நினைவக வகைகள் வேகமானது போலவே இதில் பலவிதமான கொள்ளளவுகளைக் கொண்டதாக பெற்றுக் கொள்ள முடியும். அதில் தரவுகளை களஞ்சியப்படுத்தவும், அதிலிருந்து வாசிக்கவும் முடியும். இப்படி இருந்தபோதிலும் கணினியின் மின் தொடர்பை நிறுத்தியவுடன் அதில் உள்ள அனைத்துத் தரவுகளும் அழிந்து போய்விடும்.
எழுமாறு அணுகல் நினைவகங்கள் இரு வகைகளில் பெற்றுக் கொள்ள முடியும். அவைகளாவன.
- இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
- நிலையியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
நவீன கணினிகளில் சுலபமாகக் காணப்படும் நினைவக வகை அசைவு எழுமாறு அணுகல் நினைவகமாகும். இந் நினைவகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள ஏதாவதோர் தகவலை அடிக்கடி புத்துணர்வூட்ட (Refresh) வேண்டும். இந் நினைவகத்தின் நினைவக் கலன்களில் வைக்கப்பட்டிருக்கும் தரவுகள் செக்கனுக்கு மில்லியன் அளவு அல்லது மின் துடிப்புகளை அனுப்பி மீண்டும் மீண்டும் புத்துணர்வூட்டும்.
நிலையியல் எழுமாறு அணுகல் நினைவகம் கணினியின் இரண்டாம் வகை நினைவகமாக கருத முடியும். இந் நினைவகங்களிலுள்ள தரவுகள் அடிக்கடி புத்துணர்வூட்டப் படமாட்டாது. ஆனாலும் அத்தரவுகள் மேல் இன்னுமொரு தரவு எழுதப்படும் வரையில் அல்லது மின் துண்டிப்படையும் வரை இது ஓர் நிலையியல் படமாக காணப்படும். இந் நினைவக சிப்கள் மெல்லியதானதால் பாவனையில் இல்லாதபோது பாவனை குறைவானது. இதனால் இயக்கவியல் நினைவகங்களை விடவும் செயலியில் உள்ள பதுக்கு நினைவகத்திற்கு (Cache memory) மிகவும் பொருத்தமான தெரிவு இந்த நிலையியல் நினைவகம் எனக் காட்டலாம். இன்னுமோர் வகையில் அசைவு நினைவகங்களின் தரவுக் கொள்ளளவு அதிகமானதால் பிரதனா நினைவகத்திற்குப் பொருத்தமான தெரிவு இதுவாகும்.
பதிவகங்கள் (Registers)
கணினி நிர்மாணத்தின் போது பதிவகங்கள் என்பன மிகவும் சிறிய கொள்ளளவுகளைக் கொள்ளட களஞ்சிய நினைவகமாகும். இவற்றிலுள்ள தரவுகளை பேறு இடத்தில் உள்ள தரவுகளை பெறுவதை விட அதிக வேகத்தில் செயலிற்கு அணுகிக் கொள்ளக் கூடியது, இதன் சிறப்பம்சமாகும். நினைவக வேகப் படிநிலையின் உயர் நிலையில் இருப்பது இப் பதிவகங்களேயாகும்.
பதுக்கு நினைவகம் (Cache memory)
கணினி செயற்பாட்டிற்கு சம்பந்தப்பட்ட காலத்தை கணிக்கப்படுவது மிகச் சிறிய அலகினாலாகும். உதாரணமாக கணினி செயலி பிரதான நினைவகத்தை அணுகவதற்கு எடுக்கும் நேரம் பொதுவாக வினாடியின் மில்லியன் 60 இல் இரு பங்காகும். அதாவது நெனோ செக்கன் 60 ஆகும். ஆனாலும் செலியின் செயற்பாட்டில் ஒரு சுற்றிற்காக செல்லும் நேரம் நெனோ செக்கன் 2 ஆகும். இதன்படி செயலியொன்றிற்கு நெனோ செக்கன் 60 என்து மிகப் பெரிய காலமாகும்.இதன்படி கணினி செயலியிற்கு தமது காரியங்களுக்காகத் தேவைப்படும் தரவுகளைப் பிரதான நினைவகத்திலிருந்து அணுகிக்கொள்வதற்கு அதிக நேரம் செலவிடப்படும் விடயமானபடியால் பிரதான நினைவகத்தை விடக் குறைந்து இருப்பினும் வேகமாக அணுகல் உள்ள செயலியிற்கு மிகவும் நெருக்கமுள்ள அல்லது செயலியினுள் அடக்கப்பட்டிருக்கும் நினைவக வகை பதுக்கு நினைவகமாகும்.
பதுக்கு நினைவகத்தில் பெரும்பாலும் களஞ்சியப்படுத்திக் கொள்வது செயலியினால் அடி்க்கடி பயன்படுத்தப்படும் பிரதான நினைவகத்திலுள்ள தரவுகளின் பிரதிகளாகும். செயலியிற்கு பிரதான நினைவகத்தின் ஓர் இடத்திலுள்ளவற்றை வாசிக்க அல்லது அதில் எழுதுவதற்கு தேவையேற்பட்டால் செயலி முதலாவதாக பதுக்கு நினைவகத்தில் அதற்குரிய பிரதி உள்ளதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும். அதற்குரிய பிரதியிருந்தால் உடனடியாக அதனை செயலியிற்குப் பெற்றுக்கொள்ளும். பிரதான நினைவகத்தின் தரவு அணுகளுக்கு இது வேகத்தைத் தரும்.
அழியுறா நினைவகம் (Non Volatile Memory)
இவ்வகையான நினைவகங்கள் களஞ்சியப்பட்டிருக்கும் தரவுகள் அல்லது தகவல்கள் மின் தொடர்பு துண்டித்தவுடன் அல்லது கணினியை செயலிலக்கச் செய்தவடன், அழியமாட்டாது இந் நினைவக வகைக்கு வாசிப்பு மாத்திரம் நினைவகம் மற்றும் இரண்டாந்தர நினைவகங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வகை கொள்ளலவில் அதிகமாக இருந்தாலும் நிலையற்ற நினைவகத்தைப் போன்று வேகம் கொண்டதல்ல. மற்றும் விலையிலும் கூடியதாகும்.
நவீன கணினி தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் உலகில் பல கணினி நிறுவனங்கள், நிலையற்ற நினைவகங்களின் வேகத்திற்குச் சமனான வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
- உதாரணம் - IBM நிறுவனத்தின் Magnetoresostive RAM (MRAM)
நிலையான நினைவகம் பிரதானமாக இரண்டு வகைப்படும்
- வாசிப்பு மாத்திரம் நினைவகம் (Read only memory - ROM)
- இரண்டாந்தர நினைவகங்கள் (Secondry Storage)
வாசிப்பு மாத்திரம் நினைவகம்
இந் நினைவகம் வாசிக்க மாத்திரம் முடிந்த நினைவகம் போலவே கணினி செயலியிற்கு அதில் எழுத முடியாது. இவ்வாறான நினைவகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள விசேட மென்பொருள் உள்ளது. அவை நிலைபொருள் (Firmware) என அழைக்கப்படும். இம் மென்பொருட்கள் விசேடமான வன்பொருளுக்கு மாத்திரம் கட்டுப்பட்டதும் அவை அடிக்கடி புத்துணர்வூட்ட அவசியமற்றதாகும். விசேடமாக தனிநபர் கணினியை பொருத்த வரையில் அவற்றின் தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் குறைகடத்தி சிப் ஒன்றில் களஞ்சியப்படுத்தி இருக்கும் நிலைபொருள் மூலம் கணினியினை செயற்படுத்தும் அடிப்படை காரியங்களை நிறைவேற்றும்.
கணினியிற்கு மின் தொடர்பை வழங்கியவுடன் செயற்படும் இம்மென்பொருள் மூலம் கணினியிற்கு பொருத்தப்பட்ட உபகணங்களைக் கண்டறிவதற்கான நடைமுறையை (Diagnostic Routine) செய்வதுடன் அம் மென்பொருளின் மற்றொரு பகுதியின் மூலம் கணினியின் இயக்க முறைமை களஞ்சியப்படுத்தி உள்ள இடத்திலிருந்து ஒரு பிரதியை பிரதான நினைவகத்திற்கு அணுக வைக்கும் உள்ளீட்டு உபகரணங்களிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை பரிவர்த்தனை செய்தல் போன்றவைகளும் இந் நிரலின் மற்றைய விடயங்களாகும். கணினிகளுக்கு மேலாக மற்றைய உற்பொதிந்த முறைமைகளிலும் இவ்வாறான வாசிப்பு மாத்திரம் நினைவகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாசிப்பு மாத்திரம் நினைவகங்களுக்கு கணினி செயலியினால் எதுவும் எழுத முடியாவிட்டாலும் நவீன தொழிநுட்ப முறையினால் மின் மற்றும் வேறு முறைகளைப் பயன்படுத்தி விசேட உபகரணதங்கள் மூலம் அழிக்கவும் மீண்டும் எழுதவும் முடியும். இவ்வாறான வாசிப்பு மாத்திரம் நினைவக வகைகள்.
- வாசிப்பு மாத்திரம் நினைவகம் (Read Only Memory - ROM)
- நிரல்படுத்தக்கூடிய வாசிப்பு மாத்திரம் நினைவகம் (Programmable ROM - PROM)
- அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவகம் (Erasable ROM - EROM)
- மின்னால் அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவகம் (Elactrically Erasable ROM - EEROM)
- துரித நினைவகம் (Flash Memory)
நிரல்படுத்தக்கூடிய நினைவகம் (PROM)
மிகச் சிறந்த வாசிப்பு மாத்திரம் நினைவகமொன்றை நிர்மானிக்க அதிக காலம் செல்வதாலும், மிகச் சிறிதாக தயாரிப்பதற்கு செலவு அதிகமாவதாலும் இவ் வாசிப்பு மாத்திரம் நினைவக தயாரிப்பாளர்களால் நிரல்படுத்தக்கூடிய வாசிப்பு மாத்திரம் நினைவகம் (PROM) எனும் பெயரில் நினைவக சிப் நிர்மாணிக்கப்பட்டது. இந் நினைவக சிப் வெற்று சிப்களாகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் அவற்றை நிரல்படுத்தி (Programmer) எனும் விசேட உபகரணத்தின் மூலம் நிரல்படுத்த முடியும்.
அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் நினைவகம் (EPROM)
மேற்குறிப்பிட்ட ROM மற்றும் PROM களுடன் செயற்படுவது ஒருவகையில் நாசகார செயலாகக் கருதலாம். ஏனென்றால் இச் சிப்களின் விரைகுறைவாயிருந்தாலும் மீண்டும் மீண்டும் நிரல்படுத்த முடியாததாலாகும். ஆகையால் மீண்டும் மீண்டும் நிரல்படுத்தக்கூடிய சிப் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை அழிக்கக்கூடிய நிரல்படுத்தக்கூடிய வாசிப்பு மாத்திரம் நினைவகம் என அழைக்கப்படும். இந் சிப்பில் உள்ள தரவுகள் புற ஊதா கதிர் மூலம் விசேட உபகரணமொன்றினால் அழிக்க முடியும். பின் மீண்டும் எழுதக்கூடிய நிலைக்கு வரும். இந் முழு சிப்புமே அழிக்கப்படும்.
மின்னால் அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவகம் (EEPROM)
அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவகம், நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவத்தை விட சிறப்பியல்புகளில் முன் இருந்தபோதிலும் இச் சிப்பை அழிக்கும் போதும் மீண்டும் எழுதும் போதும் அதற்காக ஒதுக்கப்பட் விசேட உபகரணம் பயன்படுத்த வேண்டியதும் குறைந்த செலவில் இலகுவாக செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லாமையாலும் இவ்வாறான அசௌகரியங்களை அகற்றி மின்னை பயன்படுத்தி அழிக்கக்கூடிய நிரல்படுத்தல் வாசிப்பு மாத்திரம் நினைவகம் தயாரிக்கப்பட்டது. இந்த சிப்பை தயாரித்ததன் பின் கீழ் காணும் அனுகூலங்கள் உருவாகி உள்ளன.
- மீண்டும் எழுத்தும்போது சிப்பை பொருத்திய இடத்திலிருந்து அகற்ற தேவைப்பட்டாது.
- முழு சிப்பையும் அழித்து விடாமல் அவசியமான பகுதியை மட்டும் மீண்டும் எழுத முடியும்.
- உள்ளடக்க தரவுகளை அழப்பதற்கான விசேட உபகரணம் தேவைப்படாமை
துரித நினைவகம் (Flash Memory)
மின்னால் அழிக்கக்கூடிய நிரல்படத்தக்கூடிய வாசிப்பு மாத்திரம் நினைவகம் சிப்பில் 1 Byte மட்டுமே மீண்டும் எழுத முடியும். ஆனாலும் இது மந்த கதியில் நடைபெறும். இவ் விடயம் ஒருவகையில் இலகுவானதாயிருந்தலும் இரு கொள்ளளவை எழுதுவதற்கு வெகு, நேரம் செல்வது ஒரு பிரதிகூலமாகக் கருதலாம்.
ஓர் உபகரணத்தின் உள்ளடக்கப்பட்ட சிப்பில் உள்ள தரவுகளின் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் எனின் அவ்வாறாக உபகரணங்களுக்கு இத்தகைய சிப்கள் மிகவும் பொருத்தமற்றதாகும் இத்தகைய பின்வாங்களுக்குத் தீர்வாக துரித நினைவக சிப் தயாரிக்கப்பட்டது.
இவ்வகையான சிப்பில் தரவு மீல் எழுதும்போது ஒரேயடியாக பாரிய பகுதியாக எழுத முடியும். அதாவது 512 பைட்களின் பகுதியை ஒரேயடியாக எழுதலாம். மிகவேகமாகவும் இலகுவாகவும் மீண்டும் மீண்டும் எழுத முடியாததால் அதற்கென்று விசேட உபகரணம் தேவைப்படாததனால் துரித நினைவகம் மிகவும் பிரபல்யமாகியுள்ளது.
அடிப்படை உள்ளீட்டு, வௌியீட்டு முறைமை (Basic input Output System - BIOS)
இது கணினியை தயார்ப்படுத்தும் நிலைப்பொருளாகும். கணினியிற்கு மின் தொடர்பை வழங்கியவுடன் செயற்படும் முதலாவது மென்பொருள் இந்நிலை பொருளாகும். CMOS இச்சிப் பிரதான பலகைக்குப் பொருத்தப்படுவது அப் பலகையை தயாரிக்கும் போதேயாகும். இந் நிலைப்பொருளின் அடிப்படை நடவடிக்கையானது கணினி முறைமையின் வன் தட்டு, விசைப்பலகை, சுட்டி மற்றும் ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தலாகும். இங்கு முறைமையில் உள்ள வன்பொருள்கள் முறைமைகளுக்கு ஏற்றமான முறைக்கு அமைத்துத் தரும். இதற்காக இவ் வன்பொருட்களின் ஒட்டும் மென்பொருட்களை அணுகல் செய்து அவ் வன்பெருட்களை கட்டுப்பாட்டை முறைமைக்கு வழங்கும். இச் செயற்பாடு Booting அல்லது BOOting Up என அழைக்கப்படும் இதை Booting Strapping எனவும் அழைக்கப்படும்.
நிரப்பு உலோக ஒக்சைட்டு குறைகடத்தி (Complementry Metel Oxide Semi Conductor - CMOS Chip)
இது கணினி தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சிப் ஆகும். இதில் முறைமையின் சிறிய சிப் ஆகும் . இதில் முறைமையின் திகதி, நேரம் மற்றும் ஏனைய அமைப்புகள் அடங்கியுள்ளது. இந்த சிப்பிற்குத் தேவைப்படுவது மிகச் சிறிய மின் சக்தி என்பதால் அச் சகத்தியை சிறிய லித்தியம் பட்ரியொன்றால் வழங்கப்படும். இந்த பட்டரியை பல வருடங்கள் பாவிக்க முடியும். இதை CMOS பட்டரி என அழைக்கப்படும்.
நிலையான நிவைக வகைகளுக்கு அடங்கும் இன்னுமொரு நிவைகமாக இரண்டாந்தர களஞ்சியமாக அழைக்க முடியும். அவை பல வடிவங்களில் காணலாம். கீழ் காட்டப்படது அதன் சிலதாகும்.
- காந்த நாடாக்கள் - Megnetic tapes
- வன் வட்டுகள் - Hard Disks
- ஔியியல் நாடாக்கள் - Optical Disks
காந்த நாடாக்கள்
காந்த ஔிப்பதிவு செய்வதற்கான ஊடகமாவது இக் காந்த நாடாக்களே, மெல்லிய கணத்தைக் கொண்ட, நீண்ட பிளாஸ்டிக் நாடாவை காந்தப்படுத்துவதன் மூலம் இந்த காந்த நாடாக்கள் அமைகக்ப்படும். பெரும்பாலும் ஒலி, ஔி தரவுகள் பேன்று கணினி தரவுகளை களஞ்சியப்படுத்திவைக்க இவை பயன்படுத்தப்படும். முதன் முறையாக இக் காந்த நாடாக்களை தயாரித்தவர்கள் ஜேர்மனியினர் ஆவார்கள். இந்நாடாக்ககள் ஒலி, ஔி ஔிப்பதிவு செய்வதற்கும், மீள் ஓட்டவும் (Play Back) கூடிய பல உபகரணங்களில் பயன்படுத்தப்படும்.
ரெக்கோடர் மற்றும் வீடியோ ரெக்கோடர்களை காட்டலாம். கணினி தரவுகளை களஞ்சியப்படுத்துவதற்காக இக்காந்த நாடாக்ககளை செலுத்தும் பகுதி நாடா செலுத்தி என அழைக்கப்படும். முற்காலத்தில் கணினியின் இரண்டாந்தர களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது. இக்காந்த நாடாக்களைப் பாதுகாப்பு சேமித்தலுக்காகப் பயன்படுத்தப்படும். பாரிய அலவிலான தரவுகளை களஞ்சியப்படுத்துவத்றகு அவை தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன.
வன் வட்டு (Hard Disk)
கணினியின் பிரதான களஞ்சியமாக பயன்படுத்தப்படுவது வன்வட்டாகும். எண்ணியல் குறியீடாக்கப்பட்ட தரவுகளை களஞங்சிப்படுத்தப்பட்ட காந்த முகப்பைக் கொெண்ட வளையாத வேகமாக சுற்றும் வட்டுகள் பல சேர்க்கப்பட்ட வன்வட்டு ஓட்டியொன்று நவீன கணினிகளில் காணப்படும். அவை பல கொள்ளளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். காந்த நாடாக்களை விட மிகக் கூடிய தரவுகளை அணுகல் செய்துகொள்ள முடியும். இத்தட்டுகள் நவீன கணினிகளில் பரவலாகக் காணலாம்.
ஔியியல் வட்டு
இவை தட்டையான வட்டவடிவ வட்டு வகைகளாகும். இதில் எண்ணியல் தரவுகளை களஞ்சியப்படுத்தும் போது இவ்வட்டில் உள்ள சிறிய பள்ளங்கள் (Pits) , மேடுகள் அடிப்படையாகக் கொண்டு எண்ணியல் 0 மற்றும் 1 வாசிகக்கூடிய வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இத் தரவுகள் வாசிக்கப்படுவது லேசர் ஔிக்கதிர் உதவியுடனாகும். இவ்வட்டில் தரவுகளைக் களஞ்சியப்படுத்தவுது லேசர் மூலம் அல்லது இயந்திரப் பதிவு மூலமாகும். பொதுவாக இவ்வட்டுகள் ஔிவட்டுகள்(Copact Disk - CD - R) என அழைக்கப்படும். இதில் ஒரு முறை மட்டுமே தரவு எழுத முடியும். மீண்டும் மீண்டும் எழுதுவதற்காக CD - RW வகையிலான ஒலிவட்டுகள் பயன்படுத்தப்படும். இதில் அநேகமாக கணினி தரவுகள் களஞ்சியப்படுத்தப்படுவதுடன் ஒலி, ஔி தரவுகளும் களஞ்சியப்படுத்தலாம். இத்தட்டுகளில் களஞ்சியப்படுத்தியதல்ல, திரைப்படங்கள், பாடல்கள் போன்வற்றை சந்தையில் பெறலாம். தற்போது அநேகமாக பயன்படுத்தப்படுவது DVD வட்டுகளாகும். இத்தட்டுகள் பல கொள்ளவுகளில் உள்ளன. நவீன கணினிகளில் பயன்படுத்தும் இவை விலையிலும் குறைந்தவையாகும்.

Comments
Post a Comment