உற்பத்தித் துறையில் தரத்தின்செல்வாக்கு
உற்பத்தித் துறையில் முடிவுப்பொருற்களின் தரத்தைப் பேனுவது அவசியமாகும். உற்பத்தி ஒன்றின் தரம் ஆனது குறையும் போது அவ்வுற்பத்தியின் ஆயுற்காலம் மற்றும் உற்பத்தியின் நோக்க்த்தில் தாக்கம் செலுத்தும். என்வே உற்பத்தித் துறையில் தரத்தின் செல்வாக்கு முக்கியமானதாகும்.
உற்பத்தி ஒன்றின் தரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரனிகள்.
- தரத்தை அதிகரிக்கும் காரனிகள்
- பொருத்தமான பொருற்களை தெரிவு செய்தல்.
- பொருத்தமான உபகரணங்களை பயன்படுத்தல்.
- முறையான நுற்ப முறைகளை பயன்படுத்தல்.
- விபரக்கூற்றை முறையாக பின்பற்றுதல்.
தரத்தை குறைக்கும் காரனிகள்
- திட்டப்படத்தில் உள்ள தகவல்களை பின்பற்றாமை.
- விபரக்கூற்றுக்கு அமைவாக உற்பத்தி மேற்கொள்ளப்படாமை.
- அங்கீகரிக்கப்பட்ட பொருற்களை பயன்படுத்தாமை.
- உற்பத்தி நுற்ப முறைகள் பயன்படுத்தப்படாமை.
உற்பத்தி பொருற்களை (மூலப்பொருற்களை) தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
- உற்பத்தியின் நோக்கத்தை கருத்திற்கொள்ளல்.
- உற்பத்தி பயன்படுத்தப்படும் சூழல்.
- ஆயுற் காலம்
- உற்பத்தியின் பயன்பாடு
- மூலப்பொருளின் இயல்பு

உற்பத்தி ஒன்றிற்கு மூலப்பொருற்களை தெரிவு செய்யும் முன் அம் மூலப்பொருறின் இயல்புகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இவ்வியல்வுகள் ஆனது 4 வகைப்படும்.
1. பௌதிக இயல்புகள்
- அடர்த்தி
- பரப்பு இழுவை
- பிசுக்குமை / பாகுநிலை
- உருகுநிலை
- கொதிநிலை
2. இரசாயன இயல்புகள்
- துரு எதிர்ப்புத் தன்மை
- இரசாயன சடத்துவத்தன்மை
3. மின்காந்த இயல்புகள்
- தடைத்திறன்
- கடத்து திறன்
- காந்தப்பாய அடர்த்தி
4. பொறிமுறை இயல்புகள்
- நீட்டற்றகவு
- வாட்டற்றகவு
- வன்மை
- உரப்பு/ வலிமை
- நொருங்குமியல்பு
உற்பத்திகள் மேற்கொள்ளும் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.
உற்பத்தி ஒன்றின் தரத்தில் பொருத்தமான உபகரணங்களை தேரிவு செய்வது மிக முக்கியமானதாகும். உபகரனங்களை தெரிவு செய்யும் போது தேவைக்கு ஏற்றவாறு தெரிவு செய்தல் அவசியமாகும்.
உற்பத்தி நடவடிக்கை ஒன்றின் போது பொருற்களை பாகங்களாக தயாரித்தல் மற்றும் பாகங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு உபகரணங்கள் பயன்படுத்தப்படிகின்றன.
உற்பத்தி நடவடிக்கை ஒன்றில் பயன்படித்தப்படும் உபகரணவகைகள்.
- அளக்கும், அடையாளமிடும் உபகரணங்கள்
- வெட்டும் உபகரணங்கள்
- துளைக்கும் உபகரணஙகள்
- சீவும் மற்றும் தேய்வுருத்தும் உபகரணங்கள்
- நேர்த்தியாக்கும் உபகரணங்கள்
மேலும் இவ் உபகரணங்கள் 2 வகையாக வகைப்படுத்தப்படும்.
- கைக்கருவிகள்/ கைஉபகரணங்கள் (கைத்துரப்பனப்பொறி)
- வலு உபகரணங்கள் (மின் துரப்பனப்பொறி)
உற்பத்தி நடவடிக்கை ஒன்றில் கருவிகளை தெரிவு செய்யும் போது தெரிவு செய்யும் கவனத்தில்கொள்ள வேண்டியவை.
- விபரக்கூற்றுக்கு அமைய தெரிவுசெய்தல்.
- தேவைக்கு ஏற்ற உபகரணத்தை தெரிவு செய்தல்
- பொறி இயங்கும் கதி
- பொறி பயன்படுத்தப்படும் சூழல்
உபகரணம்/ கருவிகளை பராமரித்தல்
உபகரணங்களின் பராமரிப்பு ஆனது உபகரணத்தின் ஆயுற்காலம் மற்றும் வேலைசெய்வோரின் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும். எனவே உபகரணம்/ கருவி ஒன்றின் பராமரிப்பு ஆனது இன்றியமையாதது.
பராமரிப்பு முறைகள்
- மசகிடல்/ உராய்வு நீக்கல்
- குளிர்த்தல்
- சீராக்கல்
- தேய்ந்துபோன பொருற்களை பிரதியீடு செய்தல்
உற்பத்தி ஒன்றினை வடிவமாக்கல்
பொருள் ஒன்றின் உற்பத்தியின் போது முதலில் பொருளின் பாகங்களே வடிவமைக்கப்படும். இப் பாகங்களானது 2 முறைகளில் வடிவமைக்கப்படும்.
- குளிர் நிலை வடிவமைப்பு – இது உற்பத்தி மூலப் பொருளின் வெப்பநிலையை குறைத்து வடிவமைப்பதை குறிக்கும்.
- சூட்டு நிலை வடிவமைப்பு - இது உற்பத்தி மூலப் பொருளின் வெப்பநிலையை அதிகரித்து வடிவமைப்பதை குறிக்கும்.
வடிவமைப்பு வேலையின் போது வெவ்வேரு தேவைகளுக்காக வெவ்வேரு நுற்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணம் –
- வலைத்தல்
- முறுக்குதல்
- காய்சியடித்தல்
- உருட்டுதல்
- வெளித்தள்ளல்
- பாகங்களைவெட்டி அகற்றுதல்
மேலும் மேற்குறிப்பிட்ட நுற்ப முறைகளை பயன்படுத்தும் போது கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் கானப்படுகின்றன.
- வழங்கப்பட வேண்டிய விசை
- வழங்கபட வேண்டிய அமுக்கம்
- நுற்ப முறை பயன்படுத்தப்பட வேண்டிய வெப்பநிலை
- குறிப்பிட்ட வெப்ப நிலையில் மூலகத்தின் விரிவு
- உற்பத்தி பொருளில் இயங்கும் போது பாகங்களின் அசைவினால் ஏற்படும் வெப்பம் மற்றும் விரிவு
- குளிர்த்தல் வீதம்
பகுதிகளை ஒன்று சேர்த்தல்
உற்பத்திப் பொருற்கள் தயாரிப்பின் போது முதலில் பொருளின் பகுதிகளே வடிவமைக்கப்படும். இவ்வாரு வடிவமைக்கப்படும் பொருற்கள் இருதியில் ஒன்று சேர்க்கப்படும்.
பகுதிகளை ஒன்று சேர்க்கும் போது மூட்டுகள் அல்லது காய்ச்சியினைத்தல்/ பற்றாசு பிடித்தல் முறைகள் பயன்படுத்தப்படும். மூட்டுகள் ஆனது பொதுவாக அல்லுலோக தயாரிப்புகளுக்கும் காய்ச்சியினைத்தல் மற்றும் பற்றாசு பிடித்தல் முறைகள் உலோக தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும்.
பகுதிகளை ஒன்று சேர்க்கும் முறைகள்.
- ஒட்டுதல்
- திருகியிடல்
- மூட்டுதல்
- தறைத்தல்
- காய்ச்சியினைத்தல்
- பற்றாசுபிடித்தல்

காய்ச்சியினைத்தல்
- மின்வில் காய்ச்சியினைத்தல்
- வாயுக்காய்ச்சியினைத்தல்
பற்றாசு பிடித்தல்
- மென்பற்றாசு பிடித்தல்
- வன்பற்றாசு பிடித்தல்
- கம்மாலை பற்றாசு பிடித்தல்
CNC பொறி பற்றிய Notes இனிவரும் பதிவுகளில் வழங்கப்படும்.
Comments
Post a Comment