கணினி நினைவகம் கணினி நினைவகம் ஆனது கணினியின் தரவு மற்றும் தகவல்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் கணினி நினைவகம் ஆனது 02 வகைப்படும். நிலையான நினைவகம் (volatile memory) நிலையற்ற நினைவகம் (non - volatile memory) நிலையான நினைவகம் (volatile memory) கணினிகளில் பயன்படுத்தப்படும் நினைவகம் கணினிகளின் செயற்பாட்டிற்கு முக்கியமானதொன்றாகும். நினைவகத்தால் ப[ரியும் பிரதான செயலானது கணினி தரவு செயற்பாட்டின் பலதரப்பட்ட கூட்டங்களுக்குத் தேவையான தரவுகளைக் களஞ்சியப்படுத்தி வைப்பதாகும். அதில் களஞ்சியப்படுத்தி உள்ள தரவுகள் அழியாமலிருக்க தொடர்ச்சியாக மின் வழங்கலை மேற்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வகையில் அந்த நினைவகங்களுக்குக் கிடைக்கும் மின்தொடர்பு துண்டிப்படைந்தால் உடனே அதன் நினைவகத்திலுள்ள தரவுகள் அழிந்து விடும். ஆகையால் இந்நினைவகங்கள் மின் தொடர்பின் மேல் தங்கியிருக்கும் நினைவக வகையாகும். கணினியிலுள்ள கீழ்காணும் நினைவகங்கள் இவ்வகையைச் சேறும். உதாரணம் - எழுமாறு அணுகல் நினைவகம் (RAM) பதிவகங்கள் (Registers) பதுக்கு நினைவகம் (Cache memory) எழுமாறு அணுகல் நினைவகம் இந் நினைவகம் கணினியின் பிரதான நின...