நீர் வட்டம்
நீர் வட்டம் என்பது புவிக் கோளத்தில் ஓரிடத்தில் காணப்படும் நீர் வெவ்வேறு மூறைகளில் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வெவ்வேறு காலப்பகுதிகளை கடந்து மீண்டும் ஆரம்ப இடத்தை அடையும் செயல்முறை நீர் வட்டமாகும்.
நீர் வட்ட செயன்முறைகள் மாற்றமடைய காரணமான மனித தலையீடுகள்.
- செயற்கை மழை பொழியவைத்தல்
- ஆவியாதலைக் கறைத்தல் (மூடு படை இடல்)
- மண்ணினுள் நீர் ஊவடுயும் வேகத்தை மாற்றுதல்
- மேற்பரப்பில் வழிந்தோடுவதை கட்டுப்படுத்தல்
- நிலக்கீழ் நீரை மேற்பரப்புக்கு கொண்டு வருதல் (குழாய்க்கிணறு)

நீர் வட்டத்தின் பிரதான படிமுறைகள்.
- படிவு வீழ்ச்சி
- ஆவியாதல்
- ஆவியுயிர்ப்பு
- ஓடிவடிதல்
- ஊடு வடிதல்
- கீழ் வடிதல்
- ஆழ் கீழ் வடிதல்
நீராவி வளி மண்டலத்தை சேரும் முறைகள்
சூரியனின் செல்வாக்கினால் மண்ணிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும், ஆவியாதல் மூலமும், தாவரங்களிலிருந்து ஆவியுயிர்ப்பு மூலமும் நீராவி வளிமண்டலத்தை சேர்கின்றது.
இந்த நீராவியானது வளிமண்டலத்தின் மேற்பகுதியில் குறைந்த வெப்பநிலையில் காணப்படுவதால் ஒடுங்கி முகிழ்களை உருவாக்குகின்றது.
இம் முகிழ்கள் நீர்த் துளியாகவோ அல்லது பனிக்கட்டியாகவோ நிலத்தை வந்தடையும்.
இந்த நீர் கீழ் வடிதல், ஆழ்கீழ் வடிதல், மேற்பரப்பில் ஓடிவழிதல், ஊடுவடிதல் போன்ற செயற்பாடுகளுக்கு உள்ளாகி நீர் நிலைகளுக்கும், நிலத்தடி நீரோட்டத்திற்கும் சேருகின்றது.
படிவி வீழ்ச்சி
வளிமண்டலத்திலுள்ள நீராவி திண்மம் அல்லது திரவமாக நிலத்தின் மீது படிதல் படிவி வீழ்ச்சி எனப்படும்.
படிவு வீழ்ச்சியின் முறைகளாக மழை, பனி, உறைபனி, மூடு பனி, மழைப்பனி, புகார்ப்பனி என வகைப்படுத்தப்படும்.
மழை
புவி மேற்பரப்பை நீர் அடையும் பிரதான முறை மழையாகும். நீர் நிலைகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் மண்ணிலிருந்திம் நீர் ஆவியாகி வளியுடன் சேர்கின்றது. இந்த நீர் மேலே செல்லும் போது குளிர்ச்சியடைந்து மிகச் சிறிய நீர்த்துளிகளாக மாறுவதால் முகிழ்கள் தோன்றுகின்றன. இச் சிறிய நீர்த் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய நீர்த்துளிகளாக மாறி மழையாக நிலத்தை அடைகின்றன.
பனி
பனி தோன்றும் வெப்பநிலையை விட வளியின் வெப்பநிலை குறைவடையும் போது நீராவி பனித்துளியாக மாறுகின்றது. குறித்த வெப்பநிலையில் வளி கொண்டிருக்கக் கூடிய உச்ச நீராவியின் அளவை விட அதிகமாக நீராவி இருக்கும் போது இவ்வாறு நிகழும்.
உறை பனி
புல், தேயிலை போன்ற தாவரங்களின் இலகைளில்ருந்து நீர் ஆவியாகிச் செல்வதனால் அந்த இலைகளின் வெப்பநிலை குறைவடைந்தது. அப்போது அவ்விலைகளின் மேலுள்ள நீராவி ஒடுங்குவதால் உறைபனி உருவாகிறது. பனி தோன்றும் வெப்பநிலை (வளி நீராவியில் நிரம்பியுள்ள வெப்பநிலை) 0 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலும் கிறைவாக உள்ள குளிரான இரவு வேளைகளில் பொருள்களின் மேல் தோன்றும்.
மூடு பனி
அதிகாலை அல்லது இரவு வேளைகளில் புவிமேற்பரப்பின் வெப்பநிலை குறைவடையும் போது நிலத்திற்கி அருகே உள்ள வளிப்படைகளில் காணப்படும் நீராவி குளிர்ச்சியடைந்து ஒடுங்கிவதால் சிறிய நீர்த்துளிகள் உருவாகும்.இது மீடு பனி எனப்படும்.
பனிப்புகார்
தடித்த மூடு பனி பனிப்புகார் எனப்படும்.
மழைப்பனி
முகிலொன்றின் வெப்பநிலை -10 பாகை செல்சியஸ் இலும் குறைந்த நீராவி பனிக்கட்டி பளிங்குகளாக மாறும். அதிகமான முகிழ்களின் மேல்மட்டத்தில் பனிக்கட்டி பளிங்குகளை கானலாம்.
இப்பளிங்குகள் ஒன்று சேரும் போது நிறை கூடுவதனால் முகிழ்கள் கீழ் நோக்கி வருகின்றன. இதன் போது நீர் துளிகளுடன் மோதுவதால் மேலும் பளிங்காதல் விருத்தியடைகிறது. எனவே மழைப்பனி பனிச்சீவல்களாக நிலத்தை அடையும்.
குறிப்பு
ஏறத்தாள 80% ஆவியாதல் சமுத்திர மேற்பரப்பிலிருந்தே உருவாகிறது. மீதி 20% உம் உள்ளூர் நீர் நிலைகள் மற்றும் ஈரலிப்பான மேற்பரப்புக்கள் என்பவற்றிலிருந்தே நிகழ்கின்றன.
தாவர மேற்பரப்பிலிருந்து நீரானது நீராவியாக வளிமண்டலத்துக்கு எடுத்து செல்லப்படுதலே ஆவியுயிர்ப்பாகும்.
நீரானது உயிரங்கிகளில் காணப்படும் முக்குயமான கூறாகும் மேலும் நீரானது ஒரு முக்கிய கரைப்பானாகும் இரசாயன தாக்கங்களுக்கான ஊடகமாகுவும் காணப்படுகிறது.
ஆவியுயிர்ப்பு, ஒடுங்கல், படிவு வீழ்ச்சி ஆகிய முறைகள் மூலமே தரைவாழ் மற்றும் நீர்வாழ் அங்கிகள் தமது நன்னீர் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
சில படிவு வீழ்ச்சிகள் முக்கியமாக தாவரங்கள் அடர்ந்த பிரதேசங்களில்் ஊடுவடிதல், கீழ்வடிதல், ஆழ் கீழ் வடிதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் நிலத்தின் கீழ் மட்டத்தை அடைந்து நிலக்கீழ் நீராக சேமிக்கப்படுகின்றது.
மேலும் நன்னீர் பனி, உறைபனி வடிவங்களில் துருவம் பிரதேசங்களில் சேமிக்கப்படுன்றது.
நீர் வட்மானது புவுயின் வெப்பசக்தி பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
உயிர் முறைமைகளில் வானிலை காரணிகளின் செல்வாக்கு.
வானிலை
யாதேனும் ஒரு பிரதேசத்தில் குறுகிய காலவேளையில் வளிமண்டலத்தில் நிலவும் தன்மை வானிலை எனப்படும்.
காலநிலை
நீணட காலமாக யாதாயினும் பிரதேசமொன்றில் மேற்கூறிய வானிலை தரவுகளை ஆராய்ந்து வௌியிடப்படும் சராசரி சூழல் நிலமை காலநிலை எனப்படும்.
வானிலைக் காரணிகள்
- மழைவீழ்ச்சி
- வெப்பநிலை
- ஔி
- காற்று
- சாரீரப்பதன்
2வது இடைப்பருவப் பெயர்சசிஇடியுடன் கூடுய மழை பகல் அல்லது மாலை வேளைகளில் பெய்தல் இக்காலத்துக்குரிய விஷேட அம்சமாகும். இதனால் முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். சில வேளைகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அபாயங்களும் நிகலும்.
மழை வீழ்ச்சியின் அனுகூலங்கள்
- தாவர வளர்ச்சிக்கு தேவையான நீர் கிடைக்கும்.
- நிலத்தை பயன்படுத்துவது இலகுவானது
- தரமான புல் உற்பத்தி உயரும்
- நீர் நிலைகளுக்கு நீர் கிடைக்கும்.
- நிலத்தடி நீர் அதிகரிக்கும்
- முகத்துவாரங்களில் போசணை பதார்த்தங்களின் அளவு அதிகரிப்பதால் மீன்கள் பெருக்கமடையும்.
- பருவகாலத்துக்குரய நீர் நிலைகள் நிரம்புவதால் நன்னீர் மீனினங்களை அறிமுகப்படுத்தக் கூடியதாக இருக்கும்
மழை வீழ்ச்சியின் பிரதிகூலங்கள்
- மண்ணரிப்பு ஏற்படுதல்
- பயிர்களுக்கு பொறிமுறை பாதிப்பு ஏற்படுதல் (தாவரங்கள் சாய்தல், பூ;க்கள் அல்லது காய்கள் உதிர்தல்)
- வானம் முகிழ்களினால் மூடிக் காணப்படுவதால் ஔிச் செறிவு குறைவடைந்து ஔித்தொகுப்பு குறைவடைதல்.
- மகரந்த சேர்க்கை பாதிப்படைதல் (மகரந்தம் கழுவுச் செல்லப்படுதல்)
- அறுவடை, பதப்படுத்தல் ஏன்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படல்.
- நோய் காரணிகள் பரவுதல்.
- திறந்த வௌி வளர்ப்பு முறையில் மேற்கொள்ளப்படும் பண்ணை விலங்குகள் உணவு பெற்றுக் கொள்ளும் காலம் கிறைவடைதல்.
- வௌ்ளத்தினால் மீன்களின் பூக்கள் காயமடைவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
- முட்டைகள் அழிவடைவதால் மீன்களின் பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
- நீர்ச்சூழல் தொகுதியுடன் இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் பார உலோகங்கள் சேர்தல்.
- மீன்களை அறுவடையில் பதப்படுத்தலில் பாதிப்பு ஏற்படல்.
வெப்பநிலை
வித்து முளைத்தல், ஆவியுயிர்ப்பு, ஔித்தொகுப்பு, சுவாசம், பூத்தல் என்பவற்றில் வெப்பநிலை பாதிப்பு ஏற்படுதல்.
தண்டு துண்டங்களில் வேர் கொள்ளச் செய்வதிலும் வெப்பநிலை தாக்கம் செலுத்துகின்றது.
விலங்குகளின் இனப்பெருக்க வளம் குறைவதில் வெப்பநிலை செல்வாக்குச் செலுத்துகின்றது.
விளைச்சளை உலர்த்தல், வித்துக்கள் விளைச்சல்களை களஞ்சியப்படுத்தல் போன்ற செயற்பாடுகளிலும் வெப்பநிலை செல்வாக்குச் செலுத்தும்.
அதிக வெப்பநிலை காரணமாக இலிங்க முதிர்ச்சி தாமதடைதல், பால், முட்டை ஆகியவற்றின் உற்பத்தி குறைவடைகிறது.
அதிக வெப்பநிலை காரணமாக சில அங்கிகள் அழிவடைவதோடு, மகரந்தமணிகள் உலர்வடைந்து விளைச்சல் கிறைவடைகின்றது.
வெப்பநிலை உயர்வினால் உவர் நீர் மீன்களின் குடித்தொகை பாதிப்படைகின்றது.
ஔிச் செறிவு
ஔிச் செறிவானது ஔித்தொகுப்பு, சுவாசம், ஆவியுயீர்ப்பு ஆகிய காரணிகளில் செல்வாக்கு செலுத்துகிறது.
பச்சை தாவரங்கள் சூரிய ஔி முன்னிலையில் CO2, H2O என்பவற்றை பயன் படுத்தி உணவு உற்பத்தி செய்யும் செயன்முறையே ஔித்தொகுப்பாகும்.
தாவரங்களில் பகல் நேர வெப்பநிலையானது இரவு நேர வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது 10 - 15 பாகை செல்சியஸ் அதிகமாக உள்ள போது தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.
ஆனால், இந்த வீச்சு எல்லாத் தாவரங்களுக்கும் பொருந்தாது எனினும், பகல் நேர வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ள போது ஔித்தொகுப்பு பாதிக்கப்படுகின்றது.ஔித் தொகுப்பு தாக்கங்கள் நொதியச் செயற்பாட்டில் தங்கியுள்ளது. நொதியச் செயற்பாடு வெப்பநிலையில் தங்கியுள்ளது
உயர் வளிமண்டல வெப்பநிலை தாவரத்தில் குளோரபில் சேதத்தை உண்டு பன்னுவதால் ஔித்தொகுப்பு வீதத்தை பாதிக்கின்றது.
ஔிச் செறிவு எனப்படுவது ஔியின் கதிர் வீச்சின் அளவேயாகும்.
சுவாசம்
அதிக விளைச்சலை பெற சூடான பகலும் குளிரான இரவும் முக்கியமாகும். ஏனெனில் இரவு நேர வெப்பநிலையானது சுவாச வீதத்தை அதிகரிப்பதால் சேமிப்பு உணவில் வீண் விரயத்தை ஏற்படுத்துகின்றது. எனவே பகலில் அதிகளவான சூரிய ஔி ஔித்தொகுப்பை அதிகரிக்கும்.
ஆவியுயிர்ப்பு
தாவர உடல் மேற்பரப்பில் இருந்து நீரானது நீராவியாக வௌியேற்றப்படல் ஆவியுயிர்ப்பாகும்.
தாவர வளர்ச்சிச் சூழலை தீர்மானிப்பதில் ஔிச்செறிவு முக்கிய பங்கு வகிக்கின்றது. வெவ்வேறு ஔிச் செறிவு நாட்டம் கொண்ட தாவரங்கள் உள்ளன.
நீர் சூழற் தொகுகுதியிலுள்ள தாவரப் பிளான்தன்கள் மற்றும் நீர் தாவரங்களின் வளர்ச்சியில் ஔிச் செறிவு செல்வாக்குச் செலுத்துகிறது.
மேலும் மீனினங்களின் இனப்பெருக்கத்திலும் ஔிச் செறிவின் அளவு செல்வாக்கு செலுத்துகிறது.
ஔிக்கால அளவு
ஔிக்கல அளவானது சில பயிர்களின் பூத்தலில் செல்வாக்குச் செலுத்துகிறது.
அதே நேரம் சில பயிர்கள் பதிய வளர்ச்சியின் போது குறித்த வெப்பநிலையில் ஔி கிடைக்கும் போது பூக்க ஆரம்பிக்கின்றன.

ஔியின் தன்மை
- நீல நிற ஔி - ஔித் தொகுப்பு செய்ய உதவும்
- சிவப்பு நிற ஔி - வித்து முளைத்தலுக்கு, கிளைத்தலுக்கு உதவும்
ஔிக்கால அளவு
நீண்ட பகற்கால அளவு அதிகரிக்கும் போது முட்டைக் கோழிகளின் இலிங்க முதிர்ச்சி விரைவடையும்.
முட்டை உற்பத்தியும் அதிகரிக்கும்.
அதிக சூரிய ஔிக்கு திறந்துள்ளபோது உணவின் தரத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.
காற்று
மீதமான காற்று
மகரந்த சேர்க்ைகக்கு தாவரங்களுக்கு இடையிலான காற்றோட்டத்தின் மூலம் ஔித்தொகுப்பில் பாதிப்பு ஏற்படும்.
சூழலின் வெப்பநிலை மூலம் சூழலிற்கு ஏற்படும் பாதிப்பு இழிவாக்கப்படும்.
கடும் காற்று
தாவரத்துக்கு பொறிமுறை பாதிப்பு அதிகமாகும்.
விசிறல் முறை நீர்ப்பாசனத்துற்கு பாதிப்பு ஏற்படும்.
பயிர்விளைச்சலை தூய்மைப்படுத்த உதவுதல்.
கடும் காற்றின் காரணமாக தாவர, விலங்குகளின் நீர்த் தேவை அதிகரிக்கின்றது.
நோய்கள் பரவுவதோடு பீடை தாக்கமும் அதிகரிக்கின்றது.
மேலும் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
கடலில் மேலெழுதல் செயற்பாடும் கடும் காற்றினால் ஏற்படுத்தப்படுகின்றது.
சாரீரப்பதன்
தண்டுத் துண்டங்களை வேர் கொள்ளச் செய்யும் போது உலர்வை தடுத்து கொள்ளில் சாரீரப்பதன் உதவுகிறது.
நீர்ப்பாசனத்தின் கால அளவை தீர்மானிப்பதிலும் சாரீரப்பதன் செல்வாக்குச் செலுத்துகின்றது.
அந்தூரியம், ஓக்கிட் போன்ற மரல்களின் தரத்தை பேனுதல்.
மரக்கறி, பழங்களின் புதுத்தன்மையை பேணுதல்.
நோய்கள், பீடைகளின் வளர்ச்சி பரவுதலிலும் சாரீரப்பதன் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மகரந்த சேர்க்கை செயற்பாட்டின் போது மகரந்த மணி உலர்வதை தடுப்பதில் சாரீரப்பதன் உதவுகிறது.
நுண்ணங்கிகளின் செயற்பாடு காரணமாக உணவு பழுதடைவதிலும் சாரீரப்பதன் செல்வாக்கு செலுத்துகிறது.
வானிலை தகவல்களை அறிக்கைப்படுத்தல்
வானிலை அவதானிப்பு நிலையம்
வானிலை தகவல்களை பெறுவதற்கு உகரணங்கள் நிறுவப்பட்டுள்ள இடமே வானிலை அவதானிப்பு நிலையம் ஆகும்.
வானிலை அவதானிப்பு நிலையத்தை அமைக்க பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.
- தெரிவி செய்யப்பட்ட இடம் குறித்த பிரதேசத்ததை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைய வேண்டும்.
- முடியுமானளவு திறந்த வௌியாக இருக்க வேண்டும்
- குளம், நீர்நிலைகள் அமைந்த இடமாக இருக்க கூடாது.
- நீர் வடிந்தோடும் இடமாகவும், சமதரையான இடமாகவும் அமைய வேண்டும்.
- பிரதேசத்தில் பொதுவாக நிலவும் புவியியல், பௌதீக இயல்புகள் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் காணப்படல் வேண்டும்.
- புறக்காரணிகளால் தடை ஏற்படும் இடமாக இருக்கக் கூடாது.
வானிலை பரிமானங்களை அளப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.

மழை வீழ்ச்சியை அளத்தல்
- புனல் - நீரை பாத்திரத்திற்கு அனுப்பும்
- நீரை சேகரிக்கும் பாத்திரம் - நீரை சேகரிக்கும்
- கவசம் - புனல், நீரை சேகரிக்கும் பாத்திரத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும்.
- அளவுச் சாடி - பாத்திரத்தில் சேகரிக்கப்படும் நீரை அளக்க உதவும்.
தன்னியக் மழை மானி

இவ்வுபகரணத்தினுல் சுழலக்கூடியவாறு பொருத்தப்பட்ட வரைபுத்தாளில் சுயமாகவே மழைவீழ்ச்சியின் அளவு குறுக்கப்படும்.
மழைமானியானது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய நீரை சேகரிக்கவும், அளவிடவும் பயன்படுகிறது.
மழைமானியின் வாசிப்பானது நேரடியாக அல்லது தன்னிச்சை மிறையில் அளவிடப்படலாம்.
வாசிப்பு மேற்கொள்ளும் கால இடைவௌி தேவைக்கேற்ப மாறுபடும்.
வெப்பநிலையை அளத்தல்
வெப்பமானி
வெப்பமானிகளில் சரியாக வாசிப்பை உறுதி செய்யும் முகமாக சூரிய ஔியின் நேரடி தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஸ்டீபனின் மறைப்பினுள் வைக்கப்படும்.
சாதாரன வெப்பமானியில் கண்ணாடி குமிழ் மற்றும் அளவீடு குறிக்கப்பட்ட தண்டு என்ப காணப்படும்.
கண்ணாடி குமிழிற்கும், தண்டுக்கும் இடையில் ஒரு ஒடுக்கமான வடிவமைப்பு உள்ளது.
வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் போது குமிழில் உள்ள இரசம் விரிவடைகின்றது. எனவே இரசம் ஒடுக்கமான வடிவமைப்பினூடாக தண்டினுள் ஏறுகின்றது. இவ்வாறு இரசம் ஏறும் போது இரச நிரலின் நீளம் கணிக்கப்பட்டு வெப்பநிலை அறியப்படுகின்றது.
உயர்வு வெப்பமானி
உயர் வெப்பநிலை என்பது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வெப்பநிலையாகும்.
மிக எளி உயர் வெப்பமானி இரச வெப்பமானியாகும் இவ்வெப்பமானியின் குமிழுக்கு அருகிலுள்ள தண்டுப் பகுதியின் துளையானது மிகவும் ஒடுங்கியது.
இவ்வாறான மயிர்துளை போன்ற அமைப்பு இவ்வெப்பமானியின் விஷேட அம்சமாகும்.
இழிவு வெப்பமானி
இழிவு வெப்பநிலை என்பது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யப்படும் மிகக் குறைந்த வெப்பநிலை ஆகும்.
இவ்வெப்பமாணியானது ஒப்பீட்டளவில் பெரிய துளைகொண்டது.
இதனுள் உலோகத்தாலாக்கப்பட்ட சிறிய உடுக்கை வடிவிலான காட்டி ஒன்று காணப்படும்.
வெப்பநிலை குறைவடையும் போது திரவம் சுருங்குவதால் காட்டி கீழ் நோக்கி இழுக்கப்படும். வெப்பநிலை குறையும் போது திரவம் காட்டியை சூல நகர்ந்தாலும் காட்டி அவ்விடத்திலேயே நிலையாக நிற்கும். இதன் மூலம் இழிவு வெப்பநிலை கணிப்பிடப்படும்
ஸ்டீவன்சனின் திரை
இவ்வுபகரணமானது தோமஸ் ஸ்டீவன்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்திரிரையானது நேரடியான சூரிய ஔி, காற்று மற்றும் மழை என்பவற்றலிருந்து உபகரணங்களை பாதுகாப்பதோடு குளிர் மற்றும் இளம் சூடான வெப்பநிலை உட்செல்லுகையை அனுமதிக்கும் வன்னம் அமையப்பட்டுள்ளது.
இதற்காக சரிவான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சலாகைகளையும் 2 கூறுகளையும் கொண்டுள்ளது.
மேலும் வெண்மைநிறப்பூச்சு நேரடியான சூரிய ஔியை தெரிப்படைய செய்கிறது.
சாரீரப்பதனை அளத்தல்
ஈரமானி மற்றும் ஈர உலர் வெப்பமானி ஆகியன மூலம் சாரீரப்பதனை துணியலாம்.
ஈரப்பதன் எனப்படுவது ஓரலகு கனவளவு வெப்பநிலையில் வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளக்கும் அதே கனவளவு வெப்பநிலையில் அவ்வளியை நிரம்பலடை தேவையான நீராவியின் அளவிற்கும் இடையிலான விகிதம் ஆகும்.
சாரீரப்பதனை அளக்கும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள்.
- ஈரக்கமிழ் வெப்பமானியுடன் உள்ள குமிழ்/குவளை எப்பொழுதும் நீரை கொண்டிருக்க வேண்டும்.
- இவ்வமைப்பபை நிருவுவதற்கு ஸ்டீவன்சன் மறைப்பு இல்லாவிடின் அதனை தாங்கியுடன் இணைத்து வாசிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- உரிய கணித்தல்களை மேற்கொள்ளும் பொது சாரீரப்பதன் அட்டவணையை பயன்படுத்தல்.
காற்றை அளத்தல்
காற்றுத் திசைகாட்டி
காற்றுத் திசைகாட்டியானது காற்று வீசும் திசையை அறிவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
பாரம் கிறைந்த உலோகங்களை கொண்டு அமைக்கப்பட்ட சூழலும் அச்சு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அதன் அச்சு வழியே சுழலக்கூடிய அம்புகள் என்பவற்றை கொண்டது.
காற்று வேகமானி
இதனை பயன்படுத்தி மணிக்கு எவ்வளவு km என (km/hr) காற்றின் வேகம் துணியப்படும்.
நான்கு அரைக்கோளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தான திசையில் அமைக்கப்பட்டிருக்கும். காற்று வீசும் போது இவை சுழலுகின்றன. (இவ் வேகத்தை அடிப்படையாக வைத்து வேகம் துணியப்படும்)
Comments
Post a Comment