நிலஅளவையும் மட்டங்காணலும்
நில அளவை
புவி மேற்பரப்பில் அல்லது புவியின் உட்பகுதியில் அல்லது புவுக்கு மேலான பகுதியில் உள்ள புள்ளியொன்றின் சார் அளவை தீர்மானித்தல் / நிலைக்குத்துத் தூரம், கிடைத்தூரம், திசை ஆகியவற்றினை அளந்து அப்புள்ளியை நிலைப்படுத்தலே நில அளவை ஆகும்.
நில அளவையின் பயன்கள்
- காணி ஒன்றின் பரப்பளவை அறிதல்.
- சமவுயரக் கோட்டு/ சமயரக் கோட்டுப் படம் தயாரித்தல்.
- பயிர்ச்செய்கையின் போது அலகு நிலப்பரப்புக்கு தேவையான உள்ளீடுகளின் அளவை தீர்மாணித்தல்.
- பண்ணை திட்டப்படம் வரைதல்
- நீர்ப்பாசண கால்வாய்களை அமைக்கும் போது குத்துயர வேறுபாட்டினை தீர்மானித்தல்.
மட்டங்காணல்
அளவை உபகரணங்கள், மட்டங் காணும் கம்பம் ஆகியவற்றை பயன்படுத்தி குறிப்பிட்ட அடையாள மட்டத்திற்கு சார்பாக குறிப்பிட்ட புள்ளியின் குத்துயரத்தை தீர்மானித்தல் மட்டங்காணல் எனப்படும்.
மட்டங்காணல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்.
- தரைத்தோற்ற படத்தை வரைதல்
- நீர்ப்பாசன கால்வாய்களை திட்டமிடல்
- வீதியமைத்தல்
- செய்கை பண்ணும் பயிர்களை தீர்மானித்தல்
- கழி, கான் தொகுதிகளை திட்டமிடல்
- மண்ணரிப்பை கட்டுப்படுத்தல்
- உயரமான கட்டிடங்களை அமைத்தல்
நில அளவையில் கிடைத்தூரத்தை அளப்பதற்கான உபாய முறைகள்.
- கவடு வைத்தல்
- தூரமானி முறை
- அளவு நாடா முறை
- அளக்கும் சில்லு
- இலத்திரனியல் முறையில் தூரம் அளவிடல்
கவடு வைத்தல் முறை
உபகரணங்களின்றி கிடைத்தூரத்தை அளவிடும் முறையாகும். இதுவே இலகுவாக மேற்கொள்ள முடியுமான முறையாகும். ஆனால் இதன் மூலம் அண்ணளவான பெறுமானத்தை மட்டுமே பெற முடியும்.
இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கவடுகளின் எண்ணிக்கையை ஒரு கவட்டின் தூரத்தினால் பெருக்குவதன் மூலம் மொத்த தூரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கவடுகளை படிவகுக்கை செய்தல்
- கவடுகளின் நீளத்தின் சராசரியை பெறுதல்.
- கவட்டின் தெரிந்த நீளத்தை கருத்திற் கொள்ளல். (இம் முறையின் செம்மை 1/50 ஆகும்)
தூரமானி முறை
இதற்கென தூரமானி எனும் உபகரணம், அதற்குரிய அட்டவணை, சமன்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி கிடைத்தூரத்தை அளவிடலாம். இது செம்மை குறைவான ஒரு முறையாகும்.
அளவு நாடா முறை
இதுவே அதிகளவில் பயன்படுத்தப்படும் முறையாகும், இதற்கு மேலதிகமாக கவைத் தூக்கு குண்டு, கவர் உள்ள தூக்கு குண்டு, வரிசைப்பாட்டுக் கம்பங்கள், கைமட்டக் காணி (Hand level), Taping pin போன்ற உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.
இதனை பயன்படுத்தி தூரத்தை அளவிடும் போது அளவுநாடா
- இழுபடுதல்
- தயாரிப்பின்
போதான குறைகள் ஆகியன காரணமாக பெறப்படும் வாசிப்பின் செம்மை குறைவடையக் கூடும். இதனை நிவர்த்தி செய்வதற்காக பின்வரும் சமன்பாட பயன்படுத்தப்படும்.

அளக்கும் சில்லு
இது கைப்பிடியும், பதியும் கொண்ட உருட்டிச் செல்லத்தக்க வட்டவடிவ சில்லாகும். இதனை நிலத்தின் மீது உருட்டிச் செல்லும் போது சென்ற தூரம் பதிவாகும்.
இலத்திரனியல் முறையில் தூரம் அளவிடல்
இரண்டு புள்ளிகளுக்கிடையிலான தூரத்தின் நேரடி வாசிப்பை இதனை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த உபகரணத்தை முக்காலி மீது இணைத்து தொலைகாட்டி மூலமாக அவதானித்து உரிய புள்ளியின் தூரத்தை மீற்றரில் / அடியில் அளவிட முடியும்.
இதன் செம்மை 1/25,000 ஆகும்.
நிலைக்குத்துத்தூரத்தை அளக்கப் பயன்படும் உபகரணங்கள்.
- அளவு நாடா (Tape)
- நீர் மட்டம் (Sprite level)
- குறுமட்ட மானி (Dumpy level)
- எண் மட்டம் (Digital level)
- தன்னியக்க மட்டம் (Automatic level)
- லேசர் மட்டம் (Laser level)
- தியோடலைற்று (Theodolite)
தலப்பீட நில அளவை
- சிறிய காணிகளின் அளவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
- இம் முறையை பயன்படுத்தி காணியின் படமொன்றினை அலகுவாக வரைந்து கொள்ள முடியும்.
- இது சிறிய காணி ஒன்றின் படத்தை அளவுத்திட்டம் படி வரைவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உபகரணமாகும்.
தலப்பீட அளவை முறையின் முக்கியத்துவம்
- சிறிய காணி ஒன்றின் பரப்பளவை இலகுவாக அளந்து கொள்ளலாம்.
- களக் குறிப்பு தேவைப்படாமை.
- வாசிப்புக்களின் செம்மைத் தன்மை.
- செலவு குறைவாக இருத்தல்.
- காந்தப் புலங்களின் தாக்கத்திற்கு உள்ளாகாத தாக்க அரிய திசைகாட்டிகளை பயன்படுத்த முடியாத பிரதேசங்களிலும் இதனை பயன்படுத்த முடியுமாக இருத்தல்.
இது பிரதானமாக 2 பகுதிகளைக் கொண்டது
- முக்காளி மீது ஏற்றப்பட்ட வரைப்பலகை
- வட்டச் சுற்றாறயம் (Alidade)
முக்காளி மீது ஏற்றப்பட்ட வரைபலகை
- இவ்வரைபலகை மீது வரைதல் தாள் ஒன்றினை பொறுத்திக் கொள்ள வேண்டும்.
- இவ்வரைவலகை நன்கு பதப்படுத்திய அரிமரத்தினால் ஆக்கப்பட்டதாகும்.
- இது மட்டம் காணக்கூடியவாறு முக்காலி மீது நிறுத்தப்பட்டுள்ளது.
- முக்காளியின் பாதத்தை செப்பம் செய்வதன் மூலம் மட்டம் காணலாம்.
- சில முக்காளில் மட்டமாக்கும் திருகு காணப்படும்.
வட்டச் சுற்றாறயம்
- வாசிப்பை பெறும் சந்தர்ப்பத்தில் சுற்றாயத்தின் ஊடாக பார்த்தே வாசிப்புகள் பெறப்படும்.
ஏனைய உபகரணஙகள்
- அரிய திசைகாட்டி (Trough compass)
- நீர் மட்டம் (Sprit level)
- கவைத் தூக்கு குண்டு (Forked plum bob)
- நீர்ப்புகா மறைப்பு
- பென்சில், அடிகோல், வரைதல் ஊசி (Drawing Pins)
- வரிசைப்பாட்டுக் கோல் (Ranging poles)
- மரச்சுத்தியல், அரிமர முளைகள் (Peds)
- மீற்றர் முறை சங்கிலி (Metric chain)
அறைய அளவை முறை
- காணியின் எல்லை வழியே வரிசைப்பாட்டுக் கோல்களை தாபித்தல்.
- காணியின் / களத்தின் நடுப்பகுதியில் ஒரு புள்ளியை தெரிவு செய்து அடையாளம் இட்டுக் கொள்ளல்.
- தலபீடத்தின் வரைதல் பலகையில் கடதாசியை வைத்து வரைதல், ஊசிமூலம் பொருத்திக் கொள்ளல்.
- மேலே காணியின் நடுப்பகுதியில் அடையாளமிட்ட இடத்தில் முக்காலியை உறுதியாக நிறுத்துதல்.
- தலபீடத்தை மட்டுப்புத்தல்.
- கடதாசியின் மீது குண்டூசி ஒன்றை குத்துதல்
- திசைகாட்டியை பயன்படுத்தி திசைமுகத்தை அமைத்துக் கொள்ளல்.
- கடதாசியின் மையப்புள்ளி 0 ஆனது நிலத்திலுள்ள புள்ளியுடன் ஒரு நிலைக்குத்துக் கோட்டின் அமையுமாறு கவர்த்தூக்கு குண்டின் துணையுடன் அடையாளமிடுதல்.
- நட்டுள்ள வரிசைப்பாட்டுக் கோல்களின் பால் Alidade மூலம் நோக்கி அந்தந்தப் புள்ளிக்கு கோடு வரைதல்.
- களப்புள்ளியிலிருந்து அந்தந்த வரிசைப்பாட்டுக் கோலுக்குரிய கிடைத்தூரத்தை அளக்கும் நாடாவினால் அளந்து கொள்ளல்
- அத்தூரங்களை மையப்புள்ளிலிருந்து கோடுகளின் வழியே அளவிடைப்படி அடையாளமிடுதல்.
- தல பீடம் மட்டமாக இருத்தல்
- குமிழி மையத்தில் அமைந்திருத்தல்
- இரு புள்ளிகளும் ஒரே நிலைக்குத்து கோட்டில் இருத்தல்
வரைந்த படத்தின் துணையுடன் காணியின் பரப்பளவை கணிப்பதற்கான முறைகள்
- படத்தை முக்கோணிகளாக பிரித்து பரப்பளவை கணித்தல்.
- தலமானியை பயன்படுத்தல்
- படத்தை சதுரக் கோட்டுத் தாளில்/ வரைபுத்தாளில் வரைந்து சதுரங்களின் பரப்பளவை காண்பதன் மூலம் பரப்பளவை காணலாம்.
- முக்ேகாணவாக்கல் / இடைவெட்டல்.
நகர்த்தும் அளவை முறை
காணியில் தடைகள் காணப்படுகின்றதெனின் அவற்றை தவிர்தவாறு காணியை அளக்கத்தக்க ஒரு முறை இதுவாகும்.
சங்கிலி அளவை முறை
மீற்றர் முறை சங்கிலியை / எந்திரியின் சங்கிலி பயன்படுத்தி ஏகபரிமான அளவீகளை மாத்திரம் பெற்று காணியொன்றின் பரப்பளவை காணும் செயன்முறையாகும்.
சங்கிலி அளவையின் முக்கியத்துவம்
- இதனை எளிமையான மற்றும் வேற எந்தவகையான காணியையைும் அளப்பதற்கு பயன்படுத்தலாம்.
- தேவையான உபகரணங்கள் மிகக் குறைவு.
- 02 சங்கிலிகள் மாத்திரம் இருந்தாலே போதுமானது.
- தூரங்கள் மாத்திரமே அளக்கப்படும் (கோணங்கள், திசைகோள்கள் அளக்கப்படுவதில்லை)
- ஏகபரிமான அளவீடுகள் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
- அளவீடுகளை பெறும் வேலை களத்தில் செய்யப்படும்.
- கணித்தல்களை அலுவலகத்திற்கு சென்று மேற்கொள்ளலாம்.
- சிறிய தட்டையான காணிகளுக்கு மிகப் பொருத்தமானது
- பெறுபேறுகள் அதிகம்
சங்கிலி அளவைக்காக பயன்படும் உபகரணங்கள்
- மீற்றர் முறை சங்கிலி / எந்திரியின் சங்கிலி
- உலோக அளக்கும் நாடா
- பார்வை மூளை மட்டம்
- அரிய திசைகாட்டி
- குத்தூசிகள்
- அரிமர முளைகள்
- தட்டுப் பொல்லு
- களப்பதிவேடு
- பென்சில்
குத்தளவு தூரங்களை அளக்கும் முறைகள்
- பார்வை மூளை மட்டத்தை பயன்படுத்தல்
- அளக்கும் நாடாவை பயன்படுத்தல்
சங்கிலி அளவையின் போது களத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.
- சாய்வான இடங்களில் அளத்தல் சிரமமானது
- தடைகள் காரணமாக சங்கிலியை உபயோகித்து அளப்பது சிரமமானது.
- காலநிலை காரணிகளின் பாதிப்புகளினால் சரியான அளவீடுகளை எடுத்தல் கடினமானது.
நில மட்டம் காணல்
நிலமட்டங்காணலின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.
- நிலத்தில் 02 புள்ளிகளை தெரிவு செய்து கொள்ளல்.
- கடல் மட்டத்திலிருந்து உயரம் தெரிந்த புள்ளி / பெறுமானம் தெரிந்த ஏதாவது அடையாள மட்டத்தில் இருந்து மட்டம் பெறுதலை ஆரம்பித்தல்.
- பீடக்குறி உள்ள இடத்தில் அளவு கோலை நிறுத்துதல்.
- மட்டத்தை பெற எதிர்பார்க்கப்படும் 02 புள்ளிகளுக்கிடையே குறுமட்டமானியை வைத்து வாசிப்பை பெறும் முறையில் தயார்ப்படுத்தல்.
- முதலில் குறுமட்டமானியை தரையில் நிறுத்துதல்.
- குறுமட்டமானியின் உயரத்தை, அவ்வுபகரணத்தை பயன்படுத்துபவருக்கு ஏற்ப தயார்படுத்தல்.
- திருகை சுழற்றுவதன் மூலம் குமிழி மத்திய பகுதி வரை செப்பம் செய்தல்.
- முதலில் பீடக்குறி மீது நடப்பட்ட மீள்பார்வை அளவிடப்படும் வாசிப்பை குறுமட்டமானியின் துணையுடன் பெற்றுக் கொள்ளுதல் (BS).
- பின் குறுமட்டமானியின் தொலைகாட்டியை அரை வட்டம் திருப்பி முன் புள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள மட்டக் கோலின் நிலைக்குத்து உயர வாசிப்பை பெற்றுக் கொள்ளுதல் (FS).
- குத்துயர வித்தியாசத்தை கணித்தல்


Comments
Post a Comment