வொன் நியுமன் கட்டமைப்பு

பிரதான கூறுகள்
- கட்டுப்பாட்டு அலகு - இது கணினி அமைப்பின் அனைத்துப் பாகங்களையும் சமிஞ்சை மூலமாகக் கட்டுப்படுத்தும்.
- எண்கணித மற்றும் தர்க்க அலகு - இது கணித மற்றும் தர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
- நினைவுப் பதிவகம் - கணினி நுண்செயலியின் ஒரு பகுதியான நினைவகப் பதிவகம் என்பது தரவுகளைச் சேமித்து வைக்கப்பயன்படும் ஒரு மிகச் சிறிய சேமிப்பு இடமாகும். (நினைவகப்பதிவானது அறிவுறுத்தல், சேமிப்பக முகவரி அல்லது தரவு என்பனவற்றினைச் சேமிப்பில் வைத்திருக்கலாம்)
- முதன்மை நினைவகம்
- துணை நினைவகம்
தரவுப்பாட்டடை
கணினி அல்லது சாதனம் ஒன்றிகுள் இணைப்பிகள் / வடத்தொகுதிகள் என்பனவற்றினைக் கொண்டுள்ள தரவு பரிமாற்றத்திற்கு வசதியளிக்கும் ஒரு முறைமையாகும்.
கட்டுப்பாட்டுப் பட்டை
சாதனங்களுக்கும் கூறுகளுக்கும் பலவகையான கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
இயக்க சுழற்சி எடு

பல மைய செயலிகள்
பல மைய செலியானது இரண்டு / அதற்கு மேற்பட்ட பல செயற்பாடுகளை வெவ்வேறாகவும் சுயாதீனமாகவும் நிறைவேற்றும் அலகுகளாகும். இவை செய்நிரல் அறிவுறுத்தல்களை வாசித்து நிறைவேற்றுகின்றன. ஆகவே ஒரு செயலியானது வெவ்வேறு அறிவுறுத்தல்களை வெவ்வேறு அறிவுறுத்தல்களை வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் செயற்படுத்தும்.
- சிறிய பகுதிகயாகப் பிரிப்பதால் ஒரு செய்நிரல் இயக்கமானது விரைவாக நிறைவேற்றப்படுகிறது.
- இது சமாந்தர செய்நிரலாக்கலை இயலுமைப்படுத்துகின்றது.
- ஒரு தனிக் கணினியில் இருந்து அதிக செயற்றிறனைப் பெறுதல்.
நினைவக வரிசை

- அழிதகு நினைவகம்
- அழிதகா நினைவகம்
அழிதகு நினைவகம்
- இவ் வகை நினைவகம் ஆனது மின் இணைப்பு இருக்கும் வரை மட்டும் அதில் காணப்படும் தரவுகளை வைத்திருக்கும்.
அழிதகா நினைவகம்
- இவ்வகையான நினைவகங்கள் தனக்குள் சேமித்த தரவுகளை மின்சாரம் இல்லாத போதும் வைத்திருக்கும்.
பதுக்கு நினைவகம் (அழிதகு நினைவகம்)
செயற்படு நிலையில் இருக்கும் மென்பொருளினால் அடிக்கடி அணுகப்படுகின்ற செய்நிரல், அறிவுறுத்தல்களைச் சேமித்து வைப்பதற்கு இந்நினைவகம் பயன்படுகின்றது.
- மட்டம் 1 (L1) - இது நுண் செயலியினுள் உட்பொதிந்து மிகவும் வேகமானதும் ஒப்பீட்டளவில் சிறியதும் ஆகும்.
- மடடம் 2 (L2) - இது அனேகமாக மட்டம் 1 (L1) இணை விடவும் கொள்ளளவில் கூடியது மேலும் இது நுண் செயலியினுள் அல்லது வேறு இடத்தில் காணப்படலாம்.
- மடடம் 3 (L3) - சாதாரணமாக இது L1, L2 ஆகிய இரு வகை பதுக்கு நினைவகங்களினதும் செயற்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுகின்றது. இது L1, L2 இனைக் காட்டிலும் குறைந்த வேகம் கொண்டதுடன் பிரதான நினைவகத்தினை விட இரு மடங்கு வேகம் கூடியது.
தற்போக்கு பெறுவழி நினைவகம் (அழிதகு நினைவகம்)
கணினியின் பிரதான நினைவகமான இது மென்பொருளினைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தரவுகவளையும் கணினி செயற்படுவதற்குத் தேவையான தரவுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும்.
- SRAM இல் பதுக்கு நினைவகம் மற்றும் பதியிகள் பயன்படுத்தப்படும்.
- DRAM இல் காணப்படும் தரவுகளை வைத்திருப்பதற்காக இவை தொடர்ச்சியாக புத்துயிர்ப்புச் செய்யப்படுகின்றது. இவ்வாறு இல்லாது விடின் இதில் காணப்படும் தரவுகள் இழக்கப்படும்.
- SDRAM கணினி முறைமையின் கடிகாரத்துடன் ஒத்திசையாகும் ஒரு வகை நினைவகமாகும்.
வாசிப்பு மட்டும் நினைவகம் (அழிதகா நினைவகம்)
இதில் உள்ளடக்கப்பட்ட அனைத்து விடயங்களும் கணினி நிறுத்தப்பட்டாலும் சேமிக்கப்பட்டிருக்கும். இதில் கணினியை ஆரம்பிப்பதற்கான அடிப்படை அறிவுறுத்தற் செய்நிரல்கள் போன்ற அத்தியாவசிய தரவுகளைக் கொண்டிருக்கும்.
- இதில் தரவை ஒருமுறை மட்டும் எழுதமுடியும். இதில் பதியப்பட்ட தரவு நிலையானதாகக் காணப்படும்.
- இது ஒரு விசேட வகை நினைவகம் ஆகும். இது புற ஊதாக்கதிர் படும் வரை அதன் உள்ளடக்கத்தை வைத்திருக்கும். புற ஊதாக்கதிர் நினைவகத்தில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கும் இதன் மூலம் இந்நினைவகம் மீள் நிரப்பம் செய்யமுடியும்.
- இதில் உள்ள தரவை மின்னேற்றல் மூலம் அழிக்கமுடியும்.
துனை நினைவகங்கள் (அழிதகா நினைவகம்)
- இவ் வகை சேமிப்பகங்களில் தரவுகளை பதிவு செய்வதற்காக ஒரு நடுத்தர காந்தப்புலத்தை கையாளும்.
- தரவுகளை சேமிப்பதற்காக லேசர் கதிர்களை பயன்படுத்தும்.
- சிலிக்கன் நுன்சில்லிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இச்சாதனங்கள் கணினி சேமிப்பக வகையொன்றாகும். இது வண்தட்டுகள் அல்லது காந்த நாடாக்கள் என்பவற்றின் காந்த அடிப்படையிலான சேமிப்புக்குப் பதிலாக இலத்திரனியலினைப் பயன்படுத்தித் தரவுகளை சேமிக்கும்.
- Solid state drive (SSD)
- Solid state card (SSC)
- Solid state modules (SSM)

- ஆரம்ப கட்டத்தில் இருந்து வரிசையாக தரவுகளை வாசிக்கும் முறை வரிசை முறை அனுகல் எனப்படும்.

- தரவு ஒன்றின் தனிப்பட்ட முகவரியை அடையாலம் கண்டு தரவுகளை நேரடியாக அனுகல் தற்போக்கு அனுகல் எனப்படும்.
Comments
Post a Comment