Skip to main content

History of computing (part 1) Tamil Note ICT (A/L)

 கணித்தலின் வரலாறு

கணக்கீட்டுச் சாதனங்கள் 

கணித்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முதலாவது இயந்திரம் எண்சட்டம் (Abacus) ஆகும்.

இயந்திர யுகம் (1450 - 1840)

1642 ஆம் ஆண்டு ப்லேயஸ் பஸ்கல் என்பவரினால் பஸ்கலைன் (Pascaline) இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைப்பயன்படுத்தி இரு என்களை மட்டும் கூட்டல், கழித்தல் செயற்பாட்டை செய்ய முடியுமாக இருந்தது.

1694 ல்ஜேர்மன் நாட்டு விஞ்ஞானியான Gottfried wilhem leibniz என்பவர் Stepped  rochoner எனும் கருவியை பூரணப்படுத்தினார். னக இக்கருவுயானது அடிப்படை கணித்தல் செயற்பாடுகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்படிருந்தது (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்)

1880 ஆம் ஆண்டு சார்லஸ் பாபேஜ் என்பவரால் முதலாவது இயந்திரக் கணினியான பகுப்பாய்வுப் பொறி உருவாக்கப்பட்டது. 

இவரே அடிப்படை எண்ணக்கருவான உள்ளீடு, செயல்முறை, வௌியீடு எனும் எண்ணக்கருவை உருவாகியவராவார், எனவே இவர் கணினியின் தந்தை எனக் அழைக்கப்படுகின்றார்.

மின் இயந்திர யுகம் (1840 - 1940)

1906 ஆம் ஆண்டில் மின்னணு வால்வு Forest என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1936 ஆம் ஆண்டில் பேராசிரியரான ஹோவார்ட் ஐக்கென் (Howard Aiken) எனபவரால் முதலாவது தன்னியக்கத் தெடரிக் கட்டுப்பாட்டுக் கணிப்பான் என்னும் இயந்திரம் உருவாக்கப்பட்டது. (இது மார்க் 01 (Mark 01) என அழைக்கப்படுகிறது)

இலத்திரனியல் யுகம் (1940 - 1956)

முதலாம் தலைமுறைக் கணினி (1940 - 1956)

முதலாம் தலைமுறைக் கணினிகளின் அடிப்படைக் கூறாக வெற்றிடக் குழாய்கள் (Vacuum tube) பயன்படுத்தப்பட்டன.

1946 ஆம் ஆண்டில் ஜேன் மௌக்லி (John Mauchly), J. presper Eckert என்பவர்களினால் வடிவமைக்கப்பட்ட முதலாவது முன்னணு இலக்கமுறைக் கணினி, மின்னணு எண்ணியல் ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பான் (ENIAC - Electronic Numerical Integrator and Calculator) ஆகும்.

1947 இல் Maurice wolkes என்வரால் மழு அளவில் சேமித்து வைக்கக்கூடிய செய்நிரல் கொண்ட முதலாவது கணினி, மின்னணு தாமதம் சேமிப்பு தானியங்கி கணிப்பான் (EDSAC - Electronic Delay Storage Automatic Calculator) ஆகும்.

1948 இல் உருவாக்கப்பட்ட மின்னணி தனி மாறி தானியக்கி கணினி  (EDVAC - Electronic Discrete Variable Automatic Computer)  ஆனது செய்நிரல்களை சேமிக்கக் கூடிய முதலாவது இலக்க முறைக் கணினியாகக் கருதப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான வெற்றிடக் குழாய்களையும் கொண்ட ,லத்திரனியல் கணினி UNIVAC ஆனது உள்ளீடு செய்வதற்குத் துளை அட்டைகளையும் ஆளிகளையும் பயன்படுத்துவதுடன் வௌியீட்டிற்கும் சேமிப்பதற்கும் துளை அட்டடைகள் மாத்திரம் பயன்படுத்தியது.

உதாரணம் -

  • UNIAC
  • EDVAC
  • IBM 701

இரண்டாம் தலைமுறைக் கணினி (1956 - 1963)

இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் மூவாயி (திரான்ஸிஸ்டர்கள்) பயன்படுத்தப்பட்டன.

உதாரணம் - 

  • IBM 1620 
  • IBM 7094
  • CDC 3600
  • UNIVAC 1108

மூன்றாம் தலைமுறைக் கணினிகள் (1964 - 1975)

மீன்றாம் தலைமுறைக் கணினிகளில் ஒருங்கிணைந்த சுற்றுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல மூவாயிகளை ஒன்றினைத்த சுற்றாகும்.

உதாரணம் -

  • IBM  360 series
  • PDP (Personal data processor)
  • TDC 316

நான்காம் தலைமுறைக் கணினி (1975 - 1989)

இத்தலைமுறைக் கணினிகளில் பெரிய அளவிலான ஒருங்கினைந்த சுற்றுக்கள் (VLSI - very large scale integrated)  பயன்படுத்தப்பட்டன.

உதாரணம் - 

  • DEC 10
  • Star 1000
  • PDP 11

ஐந்தாம் தலைமுறைக் கணினி (1989 - இன்றி வரை)

ஐந்தாம் தலைமுறைக் கணினிகளில் மிகப் பெரிய அளவிலான ஒருங்கினைந்த சுற்றுக்கள் (ULSI) பயன்படுத்தப்பட்டன.

உதாரணம் - 

  • மேசைக் கணினி
  • மடிக்கணினி
  • குறிப்பேட்டுக் கணினி
  • அல்ட்ராபுக் (Ultra book)

கணினி வகைப்படுத்தல்

கணினியானது 3 அடுப்படை விடயங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.
  1. பயன்படுத்தப்பட்டுள்ள தெழிநுட்பத்தின் அடுப்படையில்
  2. உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில்
  3. பருமனின் அடுப்படையில்

தொழிநுட்பத்தின் அடிப்படையில்

  1. ஒப்புமைக் கணினி
  2. எண்ணியல் கணினி

நோக்கத்தின் அடுப்படையில்

  1. விசேட தேவைக் கணினி
  2. பொதுத் தேவைக் கணினி

பருமனுன் அடிப்படையில்

  1. மீக் கணினி
  2. தலைமைக்கணினி
  3. சிறு கணினி
  4. நுண் கணினி

உள்ளீட்டுக் கருவுகள் 

உள்ளீட்டுக்கருவுகளானது கணினி முறைமைக்கு தரவு அல்லது அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்கள்/ கருவுகள் ஆகும்.



வௌியீட்டுக் கருவுகள்

கணினி ஒன்றில் இருந்து தகவல்களைப் பெரும் கருவுகள் வௌியீட்டுக் கருவிகள் எனப்படும்.

சில வௌியீட்டுக் கருவிகள்.

திரை
1. கதோட்டுக் கதிர் திரை
இலத்திரனியல் கறறை ஒன்று பொஸ்போரசென்ட் மேற்பரப்பில் கதோட்டுக் கதிர்த் தாக்குகையில், கதோட்டுக் கதிர்க் குழாய் திரையில் படங்கள் காட்சிப்படுத்துகின்றன.

2. திரவப் பளிங்குத் திரை
திரவப்பளிங்குத் திரையானது TFT தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் மடிக்கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும்.

3. ஔி காலும் இருவாயு திரை
தட்டைத் திரையானது கணினித்திரையாக அல்லது தொலைக்காட்சியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஔிகாலும் இருவாயு திரையின் அனுகூலங்கள்

  • விரை குறைவு
  • நம்பகத்தன்மையானது
  • குறைந்த வெப்பநிலையில் இயங்கக் கூடுயது, மற்றும் குறைந்த சக்திநுகர்வு கொண்டது.
  • நீண்ட வாழ்நாள் மற்றும் குறைந்த சூழல் தாக்கம்.

அச்சுப் பொறி

1. புள்ளி அமைவுரு அச்சுப் பொறி

  • மை தடவப்படும் பட்டிகளை தாளில் அழுத்துவதன் மூலம் அச்சு செய்யப்படும்.

2. மை பீச்சு அச்சுப் பொறி

  • இதில் ஜெட் எனப்படும் அமைப்பு காணப்படும். காகிதங்கள் அதனை நகர்ந்து செயல்லும் பொது அது காகிதத்தின் மேல் மையினை பீச்சுவதன் மூலம் அச்சுடப்படும்.

3. லேசர் அச்சுப் பொறி

  • கோப்புகள் அச்சுப் பொறிக்கு அச்சிடப்படுவதற்காக சென்றவுடன் லேசர் கதிரானது Selenium coated Drum இல் வரைவதன் ஊடாக இலத்திரனியல் ஏற்றம் ஏற்படுத்தப்படும். ஏற்றம் ஏற்றப்பட்ட Drum  ஆனது Toner ஊடாகச் சுழலும் போது காய்ந்த துணிக்ைககளாகக் காணப்படும் மை இதனுடன் ஒட்டும். இப்பொழுது மை ஏற்றப்பட்ட Drum ஆனது கடதாசியின் மீது மாற்றப்பட்டு வெப்ப அழுத்தம் கொடுப்பதன் ஊடாக உறுதியாக்கப்படும்.

4. Graphic ploter

  • கணினியில் இருந்த கட்டளைகள் கிடைக்கப்பட்ட உடன், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தன்னிச்சையான எழுத்துகருவுயினைப் பயன்படுத்திக் கோடுகளை Graphic ploter வரையும்.

மத்திய கட்டுப்பாட்டு அலகிற்கு பொருத்தமான தாய்ப்பலகையில் காணப்படவேண்டியவை.

  • தாய்ப்பலகைக்கு பொருத்தமான தாங்குழி (Socket) இசைவு
  • மத்திய செயற்பாட்டலகிற்கு பொருந்தக் கூடிய சில்லுத் தொகுதி (Chipset)
  • தாய்ப்பலகையின் வோற்அளவு தரப்பட்ட மத்திய செயற்பாட்டு அலகுனால் வழ்கப்பட்ட வெப்ப வடிவமைப்பு வலு (TDP) இற்கு இசைவுடையதாகக் காணப்படவேண்டும்.
  • அடிப்படை உள்ளீடு வௌியீட்டு முறைமையின் இசைவு
சேமிப்புச் சாதனங்கள்
1. வன்தட்டு

வன்தட்டு ஆனது நிலையான உள்ளக வன்தட்டு வௌியாகவன்தட்டு என 2 வகைப்படும். இவ்விரு வகை வன்தட்டுகளிலும் காந்தத் தட்டுகள் தரவு சேமிப்புக்காக பயன்படுத்தப்படும். நிலையான வன்தட்டு கணினியின் உள்அமைப்பிலும் வௌியக வன்தட்டு கணினிக்கு வௌியில் இருந்து USB மூலம் கணினிக்கு இனைக்கக் கூடுய வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.


2. காந்த நாடா

இது இலத்திரனியல் தரவுகளை ஒரு காந்த மேற்பரப்பில் சேமிப்பதற்குப் பயன்படும் ஒரு தொழிநுட்பம் ஆகும். இது தரவுகளை சேமிப்பதற்கும் காப்பெடுப்பதற்கும் பயன்படுத்தப்படும். எழுமாற்று அணுகல் முறை காணப்படததால் இதன் பயன்பாடு அதிகம் காணப்படுவதில்லை எனினும் இதன் செலவு குறைவு ஆகையால் அதிகமாக தரவு சேமிப்பு இடம் பெறும் இடங்களில் பயன்படுத்தப்படும். 


3. ஔியியல் வட்டுக்கள்

லேசர் கதிர்களைப் பயன்படுத்தித் தரவுகளை வாசிப்பதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் ஒரு ஔியியல் தேக்கச் சாதனம் இதுவாகும்.
ஔியியல் வட்டுக்களின் வகைகளும் கொள்ளளவும்


கணித்தலின் வகைகள்

  1. சமாந்தர கணிமை (Parallel computing)
  2. கோட்டுச்சட்டக் கணிமை (Grid computing)

சமாந்தரக் கணிமை

பல செயல்நிரல்கள் அல்லது முறைவழியாக்கங்கள் ஒரே தடவையில் நடைபெறும் கணிமை சமாந்தரக் கணிமை எனப்படும். சமாந்தரக் கணிமையில் கணித்தல் வேகமாக நடைபெறும். (உதாரணம் - 2 கணிகள் செய்யும் செயற்பாட்டை சமாந்தரக் கணிமை பயன்படுத்தி ஒரு கணினியைப் பயன்படுத்தி செய்ய முடியும்) 

எனினும் சில சந்தர்ப்பங்களில் இது நடைமுறை அற்றது.
  • பணியினைப் பிரிக்க முடியாத சந்தர்ப்பம்
  • பிரிக்கப்பட்ட பகுதிகள் சமனாகக் காணப்படாத சந்தர்ப்பத்
  • பணிகள் பிரிக்கப்பபட பின் தொடர்புபடுத்தப்டாமை

கோட்டுச் சட்டகக் கணிமை

சிக்கலான பிரச்சினை ஒன்றினைத் தீர்ப்பதற்காக இணைக்கப்படிருக்கும் பல எண்ணிக்கையிலான கணினிகளின் கட்டமைப்பு கோட்டுச் சட்டகக் கணிமை எனப்படும்.

இலக்கை அடையும் பொருட்டுத் தகவல்களையும் பணிகளையும் வலையமைப்புக் கணினிகளுக்கு விநியோகிப்பதற்காக இருக்கும் ஒரு பிரதான கணினியாகும் 

கோட்டுச் சட்டக கணிமையின் பிரயோகங்கள்
  • பிரச்சினையினைப் பொருத்தமான விதத்தில் பிரித்தல்
  • பணிகள் மற்றும் பணியிட்களைக் கண்டுபிடித்தல் மற்றும் திட்டமிடல்
  • தேவைப்படும் போது எப்போதும் வேண்டுமானாலும் சிக்கல் தரவை விநியோகிக்கும் தரவுத் தொடர்பாடல்
  • பயன்பாட்டுக் குறியீடுகள் குறிப்பிட்ட கணினி முனைகளில் வழங்குதல் மற்றும் விநியோகித்தல்.
  • சுற்றுச் சூழல் முடிவெடுக்கும் செயல்களில் உதவுதல் மற்றும் முடிவுகளின் முகாமை.
  • சுய கட்டமைப்பு, தன்னியக்கவாக்கம், சுய மீட்பு மற்றும் சுய முகாமை போன்ற தன்னியக்க அம்சங்கள்.

Comments

Popular posts from this blog

Tamil notes for Bio system technology Unit 06

உணவின் சுகாதாரத் தன்மை உணவு உட்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள் மனிதன் தனது போசணைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உணவை உட்கொள்ளும் போது மேற்படித் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உணவொன்று நுகர்வோனை திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வுணவில் சில இயல்புகள் காணப்பட வேண்டும் இவை உணவின் புலணுனர்வு இயல்பு எனப்படும். புலணுனர்வு இயல்புகள் உணவின் நிறம் மணம் சுவை இழையமைப்பு சகல போசாக்கும் தேவையான அளவு உள்ளடக்கப்பட்ட உணவு நிறையுணவு எனப்படும். ஆரோக்கியமான உணவொன்றை உட்கொண்ட பின்னர் வேறு நோய்களோ, உபாதைகளோ ஏற்படக்கூடாது. இந்நிலமை தரமான உணவினால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும். உணவின் தரம் குறிப்பிட்ட உணவொன்றிலுள்ள தனித்துவமான இயல்புகள் நுகர்வோரினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் காணப்படுவதே உணவின் தரம் ஆகும். உணவின் நிறம், சுவை, மணம், இழையமைப்பு, போசணை பதார்த்தங்கள் ஆகிய தனித்துவமான இயல்புகள் உணவின் தரத்தை தீர்மானிக்கின்றன. அதே வேளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், பீடை நாசினிகள், கழிவுப் பதார்த்தங்கள் அடங்கியிருத்தலானது உணவின் தரத்தை குறைக்கின்றது. உணவின் தரத்தை குறைக்கும் பௌதீக இயல்புகள் ...

Computer operating system (ICT Tamil Notes) 04

கணினி இயக்க முறைமை பல்நிரல்படுத்தல் (Multiprogramming) ஆரம்ப கால கணினிகளில் செயலியொன்றின் நேரம் பெறுமதிமிக்கதாக இருந்ததுடன் இந்நேரத்தை அதிகூடியளவில் பயன்படுத்திக் கொள்வது கடினமானதால் கணினிப் பாகங்களில் செயற்பாடு மிகவும் மந்தகதியாயிருந்தது. அவ்வாறு நடப்பதற்கு செயலியொன்று ஏதேனுமொரு ஏற்பட்ட உடனே இதுவரை செய்த கொண்டிருந்த வேலையை நிறு்திவிட்டு இடையூறு (Interupt) க்கு பதிலளிக்கப்படும். இது முழு முறைமைக்கும் ஏற்பட்ட பாரிய விரும்பத்தகாத நிகழ்வாகும். இந்நிலைக்கு தீர்வாக 1960 களில் பல பயனர்கள் (Multiprogramming) ஒரெ தடவையில் செயற்படுத்தக்கூடியதுமான முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்முறைமைகள் செயலியால் தொடர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் திருத்தியமைக்கப்பட்டன. எனவே இச்செயல் உயர் செயற்றிறனுடன் கூடியதென்பதை தௌிவுபடுத்தியது. இம்முறைமைகளில் ஒரே தடவையில் பல மென்பொருட்களை இயக்கக்கூடிய வசதி ஏற்பட்டது. நவீன கணினிகளில் ஏதேனும் மென்பெருட்களை இயக்கும்போது அம்மென்பொருளின் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை ஒரே தடவையில் பிரதான நினைவகத்திற்கு உட்செலுத்தக் கூடியதுடன் இதன் மூலம் ஒரே தடவையில் பலரால் அம்மென்...

Business Studies || வணிக அறிமுகம் (1.4) (Tamil Notes For Advanced Level)

 வணிக வளங்கள் / உற்பத்தி காரணிகள் வணிக செயற்பாடுகளின் போது உள்ளீடாக பயன்படுத்தபடும் அனைத்தும் வணிக வளங்கள் ஆகும். க.பொ.த உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தில் வணிக வளங்கள் 07 வகையாக வகைப்படுத்தபடும். ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றை அடிப்படையாக கொண்டு இதனை பார்க்களாம் 1. நிலம்   :  உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் இயற்கை வளங்கள் நிலம் ஆகும்.  உதாரணம் :  • கட்டடம் அமைந்துள்ள காணி  • கட்டடத்திற்குக் கிடைக்கும் காற்றோட்டம்  • சூரிய ஒளி (இயற்கையான வெளிச்சம்) 2. உழைப்பு : உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் ஊழியர்களின் உடல் இ உளரீதியான பங்களிப்பு   உழைப்பு ஆகும். உதாரணம் :  • ஆடை தைப்பவரின் உடல் , உளரீதியான உழைப்பு  • மேற்பார்வையாளர்களின் உடல், உளரீதியான உழைப்பு • முகாமையாளர்களின் உளரீதியான உழைப்பு • காவலாளிகளின் உழைப்பு 3. மூலதனம் : மனிதனால் உருவாக்கப்பட்டு மீண்டும் உற்பத்தியில் உள்ளீடாக் பயன்படுத்ததடும்  வளங்கள் மூலதனம் ஆகும்.  உதாரணம் :  • கட்டடம் • தையல் இயந்திரம், உபகரணங்கள...