Skip to main content

Computer operating system (ICT Tamil notes) part 01

கணினி இயக்க முறைமை

இயக்க முறைமை என்பது ஒரு முறைமை மென்பொருளாகும். இது ஒரு மெய்நிகர் இயந்திரம் (Virtual machine) அதாவது வன்பொருள் தகவல்களை மறைத்துப் பிரயோகங்களுக்கும் பயனருக்குமான இடைமுகத்தினை வழங்குகின்றது. இயக்க முறைமையானது வளப்பயன்பாடு, வளங்களை அனுமதித்தல், தவிர்த்தல் மற்றும் பிரயோக மொன்பொருட்களை முன்னெடுத்துச் செல்லல் போன்றவற்றைக் காண்காணிக்கின்றது.


இயக்க முறைமையின் பரிமான வளர்ச்சி

01. இயக்க முறைமை இல்லாத காலப்பகுதி (1940 - 1950)

  • இதில் செயல்களை ஒன்றின் பின் ஒன்றாக மேற்கொள்ளும் தொடர் முறைவழியாக்கம் காணப்பட்டது.
  • இதில் தனிப்பயனர் முறை (Single user)  காணப்பட்டது. 
  • கணினி செயல்நிரலாளர்கள் அல்லது பயன்படுத்தபவர்கள் நேரடியாகவே வன்பொருளுடன் தொடர்புபட்டு அறிவுறுத்தல்களை கணினிக்கு வழங்குவர்.
  • இங்கு இயக்க முறைமை இல்லை.
  • செய்நிரல்கள் நேரடியாகக் கணினியால் உள்வாங்கப்படும்.
  • கணினியானது Display light, Toggle switch இன் மூலம் செயற்படும்.

02. எளிய தொகுதி முறைமை (Simple batch system)

  • செயலியின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • குறைந்த செலவிலான இயந்திரத்துடன் செய்நிரல்கள் காந்த நாடாவில் பதியப்படும்.
  • பணிசெயல்முறைமையானது நாடாவில் இருந்து ஒரு நேரத்தில் ஒரு செய்நிரலை மட்டுமே முறைவழியாக்கத்திற்காகக் கொண்டுசெல்லப்பட்டுச் செயற்படுத்தப்படும்.
  • குறித்த செயன்முறையின் செயற்பாடு நிறவடைந்த பின், இதனுடைய வௌியீடு பிறிதொரு காந்தநாடாவில் சேமிக்கப்படும், பின்னர் அடுத்த செயன்முறை முறைவழியாக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும்.
  • முழுத் தொகுதி முறைமையின் முடிவில் வௌியீடானது செலவு குறைந்த இயந்திரத்தினால் அச்சிடப்படும்.

03. பல்நிரல்படுத்தல் தொகுதி முறைமை (Multi programmed batch system)

  • தற்கால இயக்க முறைமையின் பிரதானமான எண்ணக்கரு இதுவாகும்.
  • உள்ளீட்டு வௌியீட்டு செயற்பாட்டின் போது செயலியானது செயலற்று இருக்கும் நேரத்தினைக் குறைப்பதற்காக 3 ஆம் தலைமுறையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பல்வேறு செய்நிரல்களை சேமித்து வைத்திருப்பதற்கு நினைவகமானது பிரிவிடப்படுகின்றது.
  • குறித்த செய்நிரல்களை உள்ளீட்டு, வௌியீட்டிற்காக காத்திருக்கும் போது, நினைவகத்தில் வேறொரு செய்நிரல் செயற்படுத்தவதற்கு இயக்க முறைமையானது செலியினை வழிப்படுத்தும்.
  • நனைவகமானது பல செய்நிரல்களை வைத்துக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும்பொழுது செயலியானது 100% செயற்பாடும்.

04. நேரப்பகிர்வு முறை (time sharing system)

  • செய்நிரலை செயற்படுத்தும் போது பயனருடனான இடைத்தொடர்பினை அதிகரிக்கவும் பதிலளிக்கும் நேரத்தினைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சந்தர்ப்ப ஆளியினைப் (Context switch) பயன்படுத்துகின்றது.
  • பல்நிரல்படுத்தப்பட்ட செய்நிரல்களுக்கு இடையில் செயலியின் நேரத்தினைப் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
  • பல்நிரற்படுத்தப்பட்ட செய்நிரல்களுக்கு இடையில் செயலியின் நேரத்தினைப் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது.
  • பல்நிரற்படுத்தப்பட்ட செய்நிரல்கள் ஒரே நேரத்தில் செயன்முறைப்படுத்தப்படும் போது அவற்றை மதிப்பீடு செய்து அச்செய்நிரல்களுக்கிடையில் விரைவாக மாறும்.

இயக்க முறைமையின் பிரதாக செயற்பாடுகள்

  • செயற்பாட்டு முகாமைத்துவம்
  • வளமுகாமைத்துவம்
  • பயனர் இடைமுகத்தினை வளங்குதல்
  • காப்பு முகாமைத்துவம்

இயக்க முறைமையின் வகைகள்

  • பயனர் அடிப்படையில்
  1. தனிப்பயனர் (Single user) - ஒரு நேரத்தில் ஒரு பயனரே குறித்த கணினி முறைமையினை பயன்படுத்தக் கூடியதாக இருத்தல்
  2. பற்பயனர் (Multi user) - ஒரு நேரத்தில் பல பயனர்கள் குறித்த கணினிமுறைமையினைப் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல்.
  • பணி அடிப்படையில்
  1. தனிப்பணி (Single task)  - ஒரு நேரத்தில் ஒரு பணியினை மட்டும் மேற்கொள்ளும்.
  2. பல்பணி (Multi task) - ஒரு நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் 

கோப்புகள் (Files)

ஒன்றோடொன்று தொடர்பு பட்ட தகவல்களின் தொகுப்பு கோப்பு எனப்படுகின்றது. இது பொதுவாக பைட்டுக்களின் வரிசை எனப்படும்.

கோப்பு ஒன்றினை இரண்டு வழிகளில் பார்க்க முடியும்.
  1. தர்க்கரீதியான/ செயல்நிரலாளர் நோக்கு 
  2. பௌதீக அடிப்படையிலான நோக்கு

கோப்புகளின் பண்புகள் (File Attributes)

  • கோப்பின் பெயர்
  • கோப்பின் வகை
  • உரிமையாளர்
  • இரண்டாம் நிலைச் சேமிப்பகத்தில் உள்ள இடம்
  • கோப்பின் அமைப்பு
  • பயன்படுத்துவதற்கான அனுமதிகள்
  • கோப்பின் அளவு

கோப்பு வகைகள்

கோப்பு வகையினைத் தீர்மானிக்கும் ஒரு சாத்தியக்கூறான நடைமுறை நுட்பமாக, கோப்பு நீட்சி பயன்படுத்தப்படுகின்றது.

  • இயங்கக் கூடியவை (.exe)
  • வாசகம் (.txt, .docx)
  • படிமம் (.bmp, .png, .jpeg)
  • காணொளி (.vod, .flv, .swf)
  • ஒலி அமைப்பு (.wav, .mp3)
  • நெருக்கப்பட்ட (.rar, .zip)

கோப்பு அமைப்பு

  • ஒரு கோப்பினது அமைப்பானது இயக்க முறைமையினால் விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் அமையும்.
  • ஒரு கோப்பானது அதன் வகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
  • ஒரு வாசகக் கோப்பானது வரிகளாக ஒழுங்கமைக்கப்பட்ட எழுத்துக்களின் ஒரு வரிசையாக காணப்படும்.
  • ஒரு பொருட்கோப்பு இயந்திரத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய தொகுதிகளில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட பைட்டுக்களின் ஒரு வரிசையாகும்.
தரவு எவ்வாறு சேமிக்கப்பட்டு மீட்டெடுக்கப்படுகின்றது என்பதைக் கட்டுப்படுத்த, கோப்பு முறைமை பயன்படுத்தப்படுகின்றது.

கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை (FAT)

  • FAT ஆனது Microsoft Disk Operating System (MS - DOS) இனால் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பு முறைமைகள் ஆகும்.
  • தேக்கச்சாதனங்களில் கோப்புக்களின் பாதையினைச் செமித்து வைத்திருக்க FAT பயன்படுத்தப்படும்.
  • FAT மற்றும் Root Directory என்பன வட்டின் நிலையான இடத்தில் அமைவதனால் கணினி முறைமையின் தொடக்கக் கோப்புகள் சரியான இடத்தில் நிலைப்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய தொழில் நுட்பக் கோப்பு முறைமை (NTFS)

  • புதிய தொழிநுட்பக் கோப்பு முறைமையானது Microsoft நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட FAT இலும் சிறந்த ஒரு கோப்பு முறைமையாகும்.
  • புதிய தொழிநுட்ப கோப்பு முறைமையின் அனுகூலங்கள்
  • வட்டு தொடர்பான பிழைகளிலிருந்து தன்னியக்கமாக மீட்டுக்கொள்ளும் திறன் கொண்டது.
  • யுனிக்கோட்டு குறிமுறை பயன்படுத்தப்பட கூடியதாக உள்ளது.
  • கூடிய கொள்ளளவினைக் கொண்ட வன்வட்டுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய தன்மை அதிகமாயுள்ளது.
  • அனுமதியளிக்கப்பட்ட பயனர்கள் குறித்த கோப்பினை அணுகுவதற்கு அனுமதிகள் மற்றும் மறைகுறியாக்கங்கள் போன்ற பாதுகாப்பு நுட்பத்தினைப் பயன்படுத்துதல்.

கோப்பு பாதுகாப்பு

  1. கடவுச் சொல்
  2. அணுகல் உரிமை
போன்ற பாதுகாப்பு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

Comments

Popular posts from this blog

Tamil notes for Bio system technology Unit 06

உணவின் சுகாதாரத் தன்மை உணவு உட்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள் மனிதன் தனது போசணைத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உணவை உட்கொள்ளும் போது மேற்படித் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. உணவொன்று நுகர்வோனை திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வுணவில் சில இயல்புகள் காணப்பட வேண்டும் இவை உணவின் புலணுனர்வு இயல்பு எனப்படும். புலணுனர்வு இயல்புகள் உணவின் நிறம் மணம் சுவை இழையமைப்பு சகல போசாக்கும் தேவையான அளவு உள்ளடக்கப்பட்ட உணவு நிறையுணவு எனப்படும். ஆரோக்கியமான உணவொன்றை உட்கொண்ட பின்னர் வேறு நோய்களோ, உபாதைகளோ ஏற்படக்கூடாது. இந்நிலமை தரமான உணவினால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும். உணவின் தரம் குறிப்பிட்ட உணவொன்றிலுள்ள தனித்துவமான இயல்புகள் நுகர்வோரினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் காணப்படுவதே உணவின் தரம் ஆகும். உணவின் நிறம், சுவை, மணம், இழையமைப்பு, போசணை பதார்த்தங்கள் ஆகிய தனித்துவமான இயல்புகள் உணவின் தரத்தை தீர்மானிக்கின்றன. அதே வேளை பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள், பீடை நாசினிகள், கழிவுப் பதார்த்தங்கள் அடங்கியிருத்தலானது உணவின் தரத்தை குறைக்கின்றது. உணவின் தரத்தை குறைக்கும் பௌதீக இயல்புகள் ...

Computer operating system (ICT Tamil Notes) 04

கணினி இயக்க முறைமை பல்நிரல்படுத்தல் (Multiprogramming) ஆரம்ப கால கணினிகளில் செயலியொன்றின் நேரம் பெறுமதிமிக்கதாக இருந்ததுடன் இந்நேரத்தை அதிகூடியளவில் பயன்படுத்திக் கொள்வது கடினமானதால் கணினிப் பாகங்களில் செயற்பாடு மிகவும் மந்தகதியாயிருந்தது. அவ்வாறு நடப்பதற்கு செயலியொன்று ஏதேனுமொரு ஏற்பட்ட உடனே இதுவரை செய்த கொண்டிருந்த வேலையை நிறு்திவிட்டு இடையூறு (Interupt) க்கு பதிலளிக்கப்படும். இது முழு முறைமைக்கும் ஏற்பட்ட பாரிய விரும்பத்தகாத நிகழ்வாகும். இந்நிலைக்கு தீர்வாக 1960 களில் பல பயனர்கள் (Multiprogramming) ஒரெ தடவையில் செயற்படுத்தக்கூடியதுமான முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம்முறைமைகள் செயலியால் தொடர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் திருத்தியமைக்கப்பட்டன. எனவே இச்செயல் உயர் செயற்றிறனுடன் கூடியதென்பதை தௌிவுபடுத்தியது. இம்முறைமைகளில் ஒரே தடவையில் பல மென்பொருட்களை இயக்கக்கூடிய வசதி ஏற்பட்டது. நவீன கணினிகளில் ஏதேனும் மென்பெருட்களை இயக்கும்போது அம்மென்பொருளின் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை ஒரே தடவையில் பிரதான நினைவகத்திற்கு உட்செலுத்தக் கூடியதுடன் இதன் மூலம் ஒரே தடவையில் பலரால் அம்மென்...

Business Studies || வணிக அறிமுகம் (1.4) (Tamil Notes For Advanced Level)

 வணிக வளங்கள் / உற்பத்தி காரணிகள் வணிக செயற்பாடுகளின் போது உள்ளீடாக பயன்படுத்தபடும் அனைத்தும் வணிக வளங்கள் ஆகும். க.பொ.த உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தில் வணிக வளங்கள் 07 வகையாக வகைப்படுத்தபடும். ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றை அடிப்படையாக கொண்டு இதனை பார்க்களாம் 1. நிலம்   :  உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் இயற்கை வளங்கள் நிலம் ஆகும்.  உதாரணம் :  • கட்டடம் அமைந்துள்ள காணி  • கட்டடத்திற்குக் கிடைக்கும் காற்றோட்டம்  • சூரிய ஒளி (இயற்கையான வெளிச்சம்) 2. உழைப்பு : உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் ஊழியர்களின் உடல் இ உளரீதியான பங்களிப்பு   உழைப்பு ஆகும். உதாரணம் :  • ஆடை தைப்பவரின் உடல் , உளரீதியான உழைப்பு  • மேற்பார்வையாளர்களின் உடல், உளரீதியான உழைப்பு • முகாமையாளர்களின் உளரீதியான உழைப்பு • காவலாளிகளின் உழைப்பு 3. மூலதனம் : மனிதனால் உருவாக்கப்பட்டு மீண்டும் உற்பத்தியில் உள்ளீடாக் பயன்படுத்ததடும்  வளங்கள் மூலதனம் ஆகும்.  உதாரணம் :  • கட்டடம் • தையல் இயந்திரம், உபகரணங்கள...