கணினி இயக்க முறைமை 03
நினைவக முகாமைத்துவம் (Memory Management)
நினைவக முகாமைத்துவம் என்பது இயக்க முறைமையின் ஒரு செயற்பாடாகும். இது பிரதான நினைவகத்தைக் கையாளுகிறது அல்லது நிர்வகிக்கின்றது. அத்துடன் செயல்பாட்டின் முக்கிய நினைவகம் மற்றும் வட்டுக்கு இடையில் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளும்.
நினைவக முகாமைத்துவம் ஒவ்வொரு நினைவக இருப்புடத்தினையும் அவசையல்களைக் கொண்டுள்ளனவா அல்லது வெற்றிடமாக இருக்கின்றனவா என்பதனைக் கண்காணிக்கும். செயல் முறைகளுக்கு எவ்வளவு நினைவகம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை இது சரிபார்க்கின்றது. இது எந்நேரத்தில் எந்த நினைவகத்தின் தரவுகளைப் பெறிகின்றது என்பதனை முடிவுசெய்கின்றது. சில நினைவக இடங்கள் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுக்கப்படாமலோ இருக்கும் போது அந்த நிலைமை பற்றிய விடயத்தினை மேம்படுத்துகின்றது.
நினைவக முகாமைத்துவத்தில் இயக்க முறைமையின் பங்களிப்பு
- முதன்மை நினவகம் தடங்கள் பற்றிய விடயங்களைக் கொண்டிருக்கும்.
- பல்நிரலாக்கத்தில் எந்தச் செயல் எப்போது எவ்வளவு பயன்படுத்துகின்றது என்பது தொடர்பாக இயக்க முறைமையே தீர்மானிக்கின்றது.
- எப்பொழுது ஒரு செயல், செயற்படுவதற்கான கோரிக்ைக விடுக்கின்றதோ அதற்குரிய இடத்தை ஒதுக்கீடு செய்கின்றது.
- இரு செயல் இனித் தேவைப்படாது அல்லது முடிவுறுத்தப்பட்டுவிட்டது எனில் அதற்குரிய நினைவக இடத்தினை மீள ஒதுக்கீடு செய்கின்றது.

உள்ளீட்டு, வௌியீட்டு கருவிகளின் முகாமை
சாதனச் செலுத்தி (Device driver)
- சாதனச் செலுத்திகள் மென்பொருளாகும்.
- கணினிகள் சாதனச்செலுத்திகள் ஊடாகச் சாதனங்களுடன் தொடர்புபடுகின்றன.
- ஒரு செலு்தியானது மென்பொருள் இடைமுகத்தினை, வன்பொருள் மற்றும் இயக்கமுறைமைக்கு வழங்குவதனால் வேறு கணினி மென்பொருட்கள் குறித்த வன்பொருள் தொடர்பான விடயம் அறியாமலேயே குறித்த வன்பொருளினைப் பயன்படுத்தலாம்.
- செலுத்தியானது வன்பொருள் மற்றும் கணினியில் காணப்படும் இயக்கமுறைமை ஆகிய இரண்டின் மீதும் தங்கியிருக்கும்.
SPOOLING (Simultaneous Peripheral Operations On Line)
- இது தரவுகள் வேவ்வேறான உள்ளீடு, வௌியீடு வேலைகளின் தங்கலில் காணப்படுவதினைக் குறிக்கும்.
- தங்கல் ஆனது முதன்மை நினைவகத்தில் அல்லது வன்தட்டில் உள்ளீட்டு, வௌியீட்டு செலுத்திக்காகக் காணப்படும் சிறப்பான நினைவகமாகும்.
ஒரு இயக்க முறைமையானது விநியோகிக்கும் முறைக்காகக் கீழ்காட்டப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
- SPOOLING, உள்ளீட்டு வௌியீட்டு சாதனங்களை வெவ்வேறு தரவு அணுகல் வீதங்களைக் கொண்டு கையாளுகின்றது.
- SPOOLING தங்கலின்பராமரிப்பானது, வேகம் குறைந்த சாதனங்கள் தரவுகளை எடுப்பதற்கு ஏற்றவிதமான இடைந்தங்கலுக்கு ஏதுவாக உள்ளது.
- இது சமாந்தர கணிப்பினை பராமரிக்கின்றது ஏனெனின் SPOOLING செய்ற்பாடானது ஒரு கணினியாக காணப்பட்டு உள்ளீட்டு, வௌியீட்டு சமாந்தர செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இதனால் கணினி நாடாக்களில் இருந்து தரவுகளை பெறுவது சாத்தியமாகின்றது மற்றும் வட்டு, நாடா என்பனவற்றில் தரவுகளைப் பதிதல் மற்றும் அச்சிடுதல் போன்ற முறைவழியாக்கல் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாய் உள்ளது.

Comments
Post a Comment