கணினி இயக்க முறைமை 02
வட்டு துண்டாக்கல் (Disc Fragmentation)
- துண்டாக்கல் என்பது குறித்த தரவானது வட்டில் வெவ்வேறு இடங்களில் துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும்.
வட்டு துணிக்கை நீக்கல் (Disc DE-fragmentation)
- வெவேறு இடங்களில் காணப்படும் துண்டங்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடு வட்டு ஒருங்கமைத்தல் ஆகும்.
சேமிப்பு முகாமைத்துவம் (File Storage Management)
இடைவௌி ஒதுக்கீடு (Space allocation)
- அடுத்தடுத்தான ஒதுக்கீடு (Contiguous allocation)
- இணைப்பு ஒதுக்கீடு (Linked allocation)
- சுட்டி ஒதுக்கீடு (Indexed allocation)
அடுத்தடுத்தான ஒதுக்கீடு
- இலகுவானது.
- அனுகல் இலகுவானது.
- கோப்பின் கொள்ளளவு கோப்பு உருவாக்கத்தின் பொது தெரிய வேண்டியதில்லை.
- ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கோப்பின் கொள்ளளவினைத் தீர்மானிப்பது கடினம்.
- வௌிப்புற துண்டாக்கல்.
- பயன்படுத்தப்படாத இடங்களின் இடைவௌிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இணைக்கப்பட்ட ஒதுக்கீடு
- வௌிப்புள துண்டாக்கல் இல்லை
- கோப்புக்களை எளிதில் ஒன்று சேர்க்கலாம்.
- பலதேடுதல் நுட்பங்கள் கோப்புக்களின் தரவுகளைப் பெறப் பயன்படும்.
சுட்டி ஒதுக்கீடு
- வௌிப்புறத் துண்டாக்கல் இல்லை.
- ஒவ்வொரு தொகுதியும் அடுத்த தொகுதிக்கு உரிய சுட்டிக்காட்டியினைக் கொண்டுள்ளது.
- நெருக்கமாக்கல் இல்லை
துணைச்சேமிப்புச் சாதனங்கள்
- மூல நிரல்
- இயங்கக் கூடிய செய்நிரல்கள்
- செய்நிரலுக்கான தரவு
- தற்காலிக தரவு
வட்டு வடிவமைத்தல் (Disk Formatting)
வட்டு வடிவமைத்தல் என்பது தரவு சேமிப்புச் சாதனத்தை அதன் ஆரம்ப பயன்பாட்டிற்காக தயாரிப்பதாகும். இதுஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய கோப்பு முறைமைகளை உருவாக்கலாம். வடிவமைப்பின் முதல் பகுதி அடிப்படை, நடுத்தர தயாரிப்பைச் செய்யும் ஒது குறை நிலை வடிவமைப்பு
எனக் குறிக்கப்படும். இதன் இரண்டாவது செயற்பாடாக பிரிவிடல் காணப்படுகின்றது. இது குறுத்த சேமிப்புச் சாதனத்தில் காணப்படும் தரவுகள் இயங்கதளத்தினால் அடையாளங்காணக்கூடியதாக வட்டு பிரிவிடப்படுகின்றது. இதன் மூன்றாவது செயன்முறையானது உயர் நிலை வடிவமைப்பு என அழைக்கப்படுகின்றது.
வடிவமைக்கப்பட்ட வட்டின் தரலை மீட்டெடுத்தல் (Recovery of data from a formatted disk)
இயக்கமுறைமையினால் கோப்பு நீக்கம் செய்யப்படுவதால் ஒவ்வொரு உயர் மட்ட வடிவமைப்பின் போதும் வட்டிலுள்ள தரவுகள் முற்றிலும் அழிக்கப்படாது. இதற்குப் பதிலாக கோப்புகளின் இணைப்புக்கள் அழிக்கப்படும், கோப்புக்கள் இருக்கும் இடத்தில் இன்னுமொரு கோப்புச் சேமிக்கப்படும் வரை குறித்த இடத்திலேயே இத்தரவு இருக்கும்.
செயல் (Process)
- செயல் எனப்படுவது செயற்பாட்டில் உள்ள ஒரு செயலை குறிக்கும்.
- ஒரு செய்நிரல் ஆனது பல செயல்களைக் கொண்டு காணப்படும்.
செயல்களின் வகைள்
- உள்ளீட்டு/ வௌியீட்டு பினைப்புச் செயல்கள்
- நுண் செயலி பிணைப்புச் செயல்கள்
- அடையாளக் குறி
- இயக்கக்கூடிய குறியீடு
- செயற்படும் நிலைக்குத் தேவையான தரவு
- செயற்படும் சந்தர்ப்பம்
- பயனர் செயல்நிரலை தொடங்குதல்
- இயக்க முறையானது ஒரு சேவையினை வழங்க ஒரு செயலினை உருவாக்கின்றது.
- இயங்கும் செயல்நிரலானது மற்றொரு செயலினைத் தொடங்குதல்
செயல் முடிவடைந்தவுடன் இயக்க முறையானது குறித்த செயலுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் மீளப் பெற்றுக்கொள்ளும்.
செயல் முடிவுறுத்தப்படுவதற்கான காரணங்கள்
- இயல்பான முடிவு
- செயற்பாட்டிற்கான நேரம் முடிவடைந்தல்
- செயற்பாட்டிற்கு தேவையான வளங்கள் கிடைக்கப்பெறாமை
- செயற்பாடுத்தல் வழு
- நினைவக அணுகள் மீறல்
- இயக்கமுறைமையின் அல்லது அடிப்படைச் செயலின் கோரிக்கைகள்
- அடிப்படை செயல் முடிவுறுத்தப்படல்
இடையூறுகள் (Interruption)
- செயற்பாடுத்தப்படும் செயல்களின் வரிசைமுறையினை மாற்றியமைக்கும் நிகழ்வு இடையூறு எனப்படும்.
- இயக்க முறைமையினால் கோரப்படும் உள்ளீடு/ வௌியீட்டிற்கான நேரம் முடிவடையும் போது இடையூறு ஏற்படலாம்.
செயல் நிலைகள்
எழு நிலை செயல்மாற்றல்

- செயலியின் தற்போதைய நிலை
- உதாரணம் - தயார் நிலை, இயங்கு நிலை, காத்திருத்தல்
- இயக்க முறைமையினால் ஒவ்வொரு செயலினையும் தனித்துவமாக அடையாளப்படுத்தக் கூடியதான தனிப்பட்ட அடையாளங்கள்.
- இது அடுத்ததாக முறைவழியாக்கப்பட வேண்டிய அறிவுறுத்தலின் முகவரியினைக் குறித்துக்காட்டும்.
செயல் நிலைமாற்றல்
இயக்க முறைமையானது செயல் நிலையின் உருவாக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையில் காணப்படும் செயற்பாடுகளை நிர்வகிக்கும் செயலைச் செய்கின்றது. தற்கால இயக்க முறைமையானது செயலற்ற நிலையில் காணப்படும் செயல்களை ஆரம்பமாதல் நிலையில் இருந்து செயற்படு நிலை வரைக்கும் ஆதரவு வழங்கும், அத்துடன் இது ஒரு போதும் முடிவுறுத்தாது. புதிதாக உருவாகிய செயலானது செயலுக்கு உட்படுத்தப்படுவதற்காக வரிசையில் தயார் நிலையிலிருக்கும்.
செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயல் முடிவுறுத்தப்பட்டு அல்லது தடுக்கப்படும் போது அடுத்த செயலானது தயார் நிலைக்குச் செல்லும்.
இங்கு இயக்கமுறைமை அனுப்புனராகத் தொழிற்படுகிறது. அதாவது வரையறுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக நேர்மை, முன்னுரிமை, வௌிப்படை, இடைவினை போன்றவற்றிற்கு அமையச் செல்களை அனுப்புதல். அது பிரதான நினைவகத்திற்குக் கொண்டுவரப்படுவதால் அந்நிலை இயக்கநிலைக்கு உட்படுத்தப்பட்டுச் செலிக்கு கொண்டு செல்லப்படுகின்றது அல்லது மறைமுக நினைவகத்திற்குச் சென்று காத்திருக்கின்றது.
இயக்க நிலைக்கு உட்படுமாயின் அந்நிலை நிறைவு செய்யப்பட்டு பிரதாக நினைவகத்திலிருந்து நீக்கப்பட்டு முடிவுற்ற நிலைக்கு உட்படுகின்றது. அல்லது இடைநிறுத்தப்பட்டு மறைமுக நினைவகத்திற்கு மாற்றப்பட்டுத் தடுக்கப்பட்ட நிலையில் வைத்திருக்கும்.
செயல் கட்டுப்பாட்டுத் தொகுதி
செயல் கட்டுப்பாட்டுத் தொகுதி என்பது ஒவ்வொரு செயல்பாட்டிற்காகவும் இயக்க முறைமையினால் நிர்வகிக்கப்படும் தரவு கட்டமைப்பு ஆகும். செயல் கட்டுப்பாட்டுத் தொகுதி ஆனது செல்முறை குறியீட்டினால் வகைகுறிக்கப்படுகின்றது. செயல் கட்டுப்பாட்டுத் தொகுதியானது ஒரு செயல்முறையினை நிர்வகிக்கத் தேவையான கீழ் காட்டப்பட்ட அனைத்து விடயங்களையும் கொண்டிருக்கும்.

சந்தர்ப்ப நிலைமாற்றல்
சந்தர்ப்ப நிலைமாற்றம் என்பது செயல் கட்டுப்பாட்டுத் தொகுதியில் (CPU) இனுடைய நிலையினை சேமிக்க அல்லது மீளப்பெறப் பயன்படும். பொறிமுறை ஆகும். இதன் மூலம் எந்நேரத்திலும் ஒரு செயன்முறையினை நிறுத்திய நிலையிலிருந்து மீண்டும் செயற்படுத்த முடியும்.
இத்தொழினுட்பத்தினைப் பயன்படுத்தியே ஒரு (CPU) ஆனது பல செயல்களைச் செயற்படுத்துகின்றது. இது பல்பணி இயக்க முறையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
ஒரு செயலில் இருந்து வேறொரு செயலைச் செயற்படுத்தும் போது (CPU) இனை அட்டவணைப்படுத்தியானது ஆரம்பிக்கும், இதன் போது மைய முறைவழியாக்கியினது செயல் கட்டுப்பாட்டுத் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட செயல்களுக்கான செயலியினது உள்ளடக்கங்களை சந்தர்ப்ப ஆளியானது சேமிக்கும்.
சந்தர்ப்ப நிலைமாற்றல் ஒரு ஒழுங்குமுறையான சுழற்சிமுறையாகும்.
நவீன கணினிகளில் பொதுவான மற்றும் நிலை பதிவுகள் அதிகளவில் காணப்படவதால் அவற்றின் செயற்பாடுகளில் குறித்தளவு பாதிப்பினைச் சந்தர்ப்பநிலைமாற்றமானது ஏற்படுத்தலாம்.
அட்டவணைப்படுத்தி வகைகள்
- நீண்ட கால அட்டவணைப்படுத்தி
- நடுத்தர கால அட்டவணைப்படுத்தி
- குறிகிய கால அட்டவணைப்படுத்தி
நீண்ட கால அட்டவணைப்படுத்தி
- முறைவழியாக்கத்திற்காகச் செயலி எந்தச் செயலினை அனுமதிக்கின்றது என்பதைத் தீஶ்மானிக்கின்றது.
- பல்நிரலுக்கான படிநிலையினைக் கட்டுப்படுத்துகின்றது.
நடுத்தர கால அட்டவணைப்படுத்தி
- பல்நிரலாக்கம் நிர்வகிக்க வேண்டியதன் அடிப்படையிலான மாற்றங்களைப் பரிமாற்றுவது
- நினைவக முகாமை மென்பொருள் ஊடாக இது மேற்கொள்ளப்படுகின்றது.
குறுகிய கால அட்டவணைப்படுத்தி
- இந்தச் செயல் அட்டுத்து இயங்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கின்றது.
- ஒரு செயல் நிறுத்தப்பட்டு வேறொரு செயலை மத்திய செயற்பாட்டு அலகிற்கு அனுப்பி வைக்கின்றது.
Comments
Post a Comment