பயிர்ச் செய்கையில் மண், மண்ணீர் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளங்குதல்.
மண்ணின் பௌதிக இயல்புகள்
- மண்ணின் இழையமைப்பு
- மண்ணின் கட்டமைப்பு
- மண்ணின் அடர்த்தி
- மண்ணின் நுண்துளை தன்மை
மண்ணின் இழையமைப்பு
- மண்ணில் அடங்கியுள்ள மணல், அடையல், களித் துணிக்கைகளின் சார்பு விகிதமே மண் இழையமைப்பு எனப்படும்.
- மண்ணில் நீர்பற்றல், நீர் வௌியேறும் திறன்கள் பற்றிய தகவல்களை பெற முடிதல்.
- மண்ணில் நீர் வடிப்பு செய்ய வேண்டுமா என தீர்மானித்தல்
- பயிருக்கு நீர் வழங்க வேண்டிய கால இடை வௌியை தீர்மானித்தல்
- யாதேனும் மண் பயிர்ச் செய்கைக்கு பொருத்தமானதா என்பதையும் அவ்வாறாயின் பயிர் செய்ய வேண்டிய பயிர் வகைகள் எவை என்பதையும் தீர்மானித்தல்.
- மண்னை பண்படுத்தத் தேவையான உபகரணங்களை தீர்மானித்தல்
- போசனை பொருட்கள் வழங்குவதற்குரிய கால இடைவௌியை தீர்மானித்தல்
- மட்காப்பு முறைகளை தீர்மானித்தல்.
மண்ணின் கட்டமைப்பு
மண்ணில் காணப்படும் மண், அடையல், களி துனிக்கைகளின் வெவ்வேறு பிணைப்புக் காரணிகள் மூலம் ஒன்றோடொன்று பிணைந்து உருவாகியுள்ள மண் திரளைகளின் வடிவமே மண் கட்டமைப்பு எனப்படும்.
- வட்டமான கட்டமைப்பு (மணியுருவான கட்டமைப்பு, துகல்களினாலான கட்டமைப்பு)
- தட்டமையான கட்டமைப்பு
- அரிய வடிவம் கொண்ட கட்டமைப்பு (விளிம்புள்ள அரியம், விளிம்பற்ற அரியம்)
- உபகோள வடிவ கட்டமைப்பு
- மண்ணின் ஈரலிப்பு மற்றும் இழையமைப்பு பற்றிய கருத்துக்களை பெற்றுக் கொள்வதில் உதவுகின்றது.
- மண் சேதனப் பொருட்கள் மாற்றமடைந்து மண் போசணைப் பதார்த்தங்களாதல் தொடர்பான கருத்தை பெறல்
- தாவர வேர்களின் செயற்பாடு தொடர்பாக அறிந்து கொள்ளல்.
- மண் வளம் தொடர்பான கருத்தை பெற்றுக் கொள்ளல்.
- மண்ணரிப்பு தொடர்பான தகவல்களை பெற்று அதற்கான தீர்வுகளை காணல்.
- மண் அங்கிகளின் செயற்பாடு பற்றிய கருத்தை பெற்றுக் கொள்ளல்.
மண்ணின் அடர்த்தி
- மண் அடர்த்தியானது தோற்ற அடர்த்தி, உண்மை அடர்த்தி என இரு வகைப்படும்.
- ஓரளவு கனவளவிலுள்ள மண்ணின் திணிவு மண் அடர்த்தி எனப்படும்.
மண்ணின் இயற்கையான அமைப்பு அவ்வாறே காணப்படும் நிலையில் மண்ணின் ஓரலகு கனவளவிலுள்ள திண்மப் பதார்த்தங்களின் திணிவு தோற்ற அடர்த்தி எனப்படும்.
- மண் இறுக்கமடைந்துள்ள தன்மை பற்றிய கருத்தை பெற்றுக் கொள்வதில் தோற்ற அடர்த்தி உதவுகின்றது.
- மண் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய நீரின் அளவு பற்றிய கருத்தை பெற்றுக் கொள்ள தோற்ற அடர்த்தி முக்கியமானதாகும்.
- மண்ணினுள் தாவர வேர்கள் வளர்வதற்காக காணப்படும் இடவசதி தொடர்பான கருத்தை பெற்றுக் கொள்ள தோற்ற அடர்த்தி உதவுகின்றது.
- மண்ணின் தின்மப் பதார்த்தங்களின் திணிவு, திண்மப் பதார்த்தங்களின் கனவளவு என்பவற்றுக்கிடையிலான விகிதம் உண்மை அடர்த்தி எனப்படும்.
- ஒரு குறித்த மண் வகையை உண்மை அடர்த்தி மாறாது, உண்மை அடர்த்தியானது எப்போதும் தோற்ற அடர்த்தியை விட அதிகமாகும்.
- உண்மை அடர்த்தியானது துணிக்கை வகை, துணிக்கை அளவு, மண் கட்டமைப்பு, மண்ணீரின் அளவு, மண்ணிலுள்ள நுன் துளைகளின் அளவு ஆகியவற்றில் தங்கியுள்ளது.
மண்ணின் நுண்துளை தன்மை
- மண்ணின் மொத்த கனவளவிற்கும் மண் வௌிக்கனவளவிற்கும் இடையிலான விகிதம் மண் நுண்துளை தன்மை எனப்படும்.
- மண்ணிலுள்ள துளை வௌிகளின் அளவு மண் துளை வௌித் தன்மை எனப்படும்.
- மண்ணிலுள்ள துளை வௌிகள் நுண்துளை வௌிகள், மா துளை வௌிகள் என 02 வகைப்படும்.
- மண்ணின் நுண்துளை தன்மை தோற்ற அடர்த்திக்கேற்ப வேறுபடும்.
- மண் துளை வௌிகளின் அளவு மண்ணங்கிகளின் நிலவுகைக்கு அவசியம்.
- குறிப்பிட்ட மண் மாதிரியின் இழையமைப்பை பற்றி அறிந்து கொள்ள மண்ணின் நுண்துளை தன்மை உதவுகிறது.
- மண்ணின் நீர் வடிந்தோடல் பற்றிய கருத்தை பெற்றுக் கொள்வதில் நுண்துளை தன்மை முக்கியமானதாக அமைகிறது.
- மண் மாதிரியின் நீர் அகத்துறிஞ்சல் பற்றிய கருத்தை பெற்றுக் கொள்வதில் மண் நுண் துளை தன்மை முக்கியத்துவம் பெறுகிறது.
மண்ணின் நீர்பற்றுக் கொள்ளளவு தொடர்பான தோற்றப்பாடுகளை ஆராய்தல்.
மண்ணீர் கொள்ளளவு
மண்ணீர் கொள்ளவின் முக்கியத்துவம்
- மண்ணீர் கொள்ளளவு தொடர்பான விளக்கம் இருப்பதன் காரணத்தால் மண் உலர்வதை தடுக்க முடியும்.
- மண்ணிற்கு இடப்படும் போசணை பதார்த்தங்கள் கழுவி எடுத்துச் செல்லப்படாது.
- மண்ணுக்கு இடப்பட்ட பீடைநாசினிகள் அகற்றப்படாது.
- மண் வளி
- மண் சேதனப்பதார்த்தங்கள்
- மண்ணில் காணப்படும் மேலதிக நீரை வடிப்புச் செய்யாததால் மண்ணீர் தேங்கி நிற்கும் போது மண்வளியின் அளவு குறைவடையும்.
- எனவே, மண்ணீரை வடிப்பு செய்ய மண்வளியின் அதிகரிக்கும்.
- மண்ணில் காணப்படும் சேதனப்பதார்த்தங்களின் அளவு அதிகரிக்கும் போது நீர் கொள்ளளவு அதகரிக்கும்.
- மண்வளி குறையும் போது சேதனப்பொருட்கள் அடைதல் பாதிப்படையும்.
- மண்ணீர் கொள்ளளவு உச்ச பெறுமானத்தை அடையும் சந்தர்ப்பமொன்று வயற்கொள்ளளவு நிலையாகும்.
- மண்ணீர் பற்றுந்திறன் மீது செல்வாக்கு செலுத்தும் 03 தோற்றப்பாடுகள் உண்டு
- ஒட்டற்பண்பு, பிணைவு விசை
- மேற்பரப்பு இழுவிசை
- நீரின் முனைவுத் தன்மை
மண் இழையமைப்பு முக்கோணி
- இழையமைப்பு முக்கோணி என்பது மண், களி, அடையல் துணிக்கைகளின் 0 - 100 % வரை குறிப்பிடப்பட்டிருக்கும் சமபக்க முக்கோனியாகும்.
- இம் முக்கோணியை பயன்படுத்தி மண் இழையமைப்பை துணியும் போது முதலில் பொறிமுறை பகுப்பாய்வு மூலம் மண்ணுலுள்ள துணிக்கைகளின் சதவீதத்தை அறிதல் வேண்டும்.
நில நீரின் முக்கியத்துவம்
- புவி மேற்பரப்புக்கு கீழாக மண் இடைவௌிகளில் பாறைகளுக்கிடையில், குழிகளினுள் நிரம்பிக் காணப்படும் நீர் நில நீர் எனப்படும்.
- மழைவீழ்ச்சி, மூடுபனி, உறைபனி என்பவை காரணமாக நிலநீர் கிடைக்கின்றது.
- இவை நீரேந்திகள், ஊற்றுக்கள், கிணறுகள் என்பவற்றின் மூலகங்களாகும்.
- நிலநீரின் உயர் எல்லை நிலநீர் மட்டமாக கருதப்படும்.
- விஷேடித்த நீர்
- குடிநீர் தன்மையை கொண்ட நீர்
- எல்லைப்படுத்தப்பட்ட பயன்பாட்டையுடைய நீர்
- உவர் நீர்
1. விஷேடித்த நீர்
- மொத்த திண்மப் பதார்த்தம் 1 L இற்கு 500 mg இலும் குறைவு. நில நீரின் தன்மையை மோசமடையச் செய்யக் கூடிய மாசுக்களை கொண்டிருத்தல்.
2. குடிநீரின் தன்மையை கொண்ட நீர்
- மொத்த திண்மப் பதார்த்தம் 500 mg/L எனும் அளவைக் கொண்டதும் நிலநீரின் தரத்தை பாதிக்காத அளவான மாசுக்களை கொண்டிராமை.
3. எல்லை படுத்தப்பட்ட பயன்பாட்டை உடைய நீர்
- மொத்த திண்மப் பதார்த்தம் 300 mg/L - 10,000 mg/L எனும் அளவில் கொண்டுள்ளது.
4. உவர் நீர்
- திண்மப் பதார்த்தத்தின் அளவு 10,000 mg/L ஐ விட அதிகம் கொண்டிருத்தல்.
நீரோந்திகள்
நிலத்திற்குக் கீழாக அமைந்துள்ளதும் , நீரை ஊடுபுகவிடத்தக்கதுமான பாறைப்படை நீரோந்திகள் ஆகும்.
வகைப்படுத்தல்
1. ஆட்டீசியன்
- இது அதிக ஆழத்தில் அமைந்திராத நீராகும்.
2. ஆட்டீசியன் அல்லாதது
- ஊடுபுகவிடாத சில பாறைப் படைகள் 02 இற்கு இடையே உள்ள நீர் அதிக அமுக்கத்தின் கீழ் மட்டும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
3. பகுதியாக மட்டுப்படுத்தப்பட்ட நிரப்பிகள்
- இந்த நிரப்பிகளின் மேல் / கீழான படைகள் பகுதியாக ஊடுபுகவிடக்கூடியது.
4. பேர்சட் நிரப்பிகள்
- நீர் மட்டுப்படுத்தப்பட்ட இடப்பரப்பில் பரந்து காணப்படும்.
நிலத்தடி நீரின் மீள் நிரம்பல்
- மேற்பரப்பு நீர் நிலைக்குத்தாக கீழ் நோக்கி பயணித்து நிலத்தடி நீருடன் சேரும் செயன்முறையாகும்.
- இச் செயற்பாடு இயற்கையாகவோ (மழை வீழ்ச்சி) செயற்கையாகவோ (மானிட செயற்பாடு) நடைபெறலாம்.
நிலத்தடி மீள் நிரம்பல் முறை
மழை நீர் ஊடுவடிதல் மூலம் நிலநீர் மட்டத்தை நோக்கி பெருமளவில் பரவலடையும். இதனை பிரதேச இடத்திற்குரிய அல்லது நேரடி மீள் நிரம்பல் என அறிமுகப்படுத்த முடியும்.
மேற்பரப்பு நீர் முறைகளின் (நீர் தெக்கங்கள், நீர் வீழ்ச்சி, ஆறுகள்) கீழாக காணப்படும். நீரேந்திகளை நோக்கி செல்லும் முறையாகும். இது நேரடியற்ற, நிரந்தரமற்ற மீள் நிரம்பல் எனப்படும்.
மீள் நிரம்பலை விருத்தி செய்ய எடுக்கக் கூடிய முக்கிய செயற்பாடுகள்.
- வடிகால்கள், பாத்திகள், குழிகள், கிணறுகள் ஆகியன அமைத்தல்.
- நீர் ஊடுவடிதலை அதிகரிப்பதற்கு உத்திகளை ஏற்படுத்திக் கொள்ளல்.
மண் வளங்குன்றல்
சீரற்ற விவசாய நடவடிக்கைகள் மற்றும் பலவேறு மனித நடவடிக்கைகள் காரணமாக மண் அரிப்புக்குள்ளாகி மண்ணின் இரசாயன, பௌதிக,உயிரியல் இயல்புகள் குன்றுவதனால் மண்ணின் உற்பத்தித்திறன் குறைவதே மண் வளங்குன்றல் எனப்படும்.
மண்ணரிப்பு காரணமாகவோ, மண்ணின் இயல்புகள் குன்றுவதனாலோ மண்வளம் குன்றல் நடைபெறும்.
மண் வளம் குன்றலால் பயிர்ச் செய்கையின் பலன் தரும் தன்மை குறைவடையும்.
மண் வளம் குன்றலுக்கு காரணமான காரணிகள்
- மண்ணரிப்பு
- பௌதிக செயன்முறைகள்
- இரசாயன செயன்முறைகள்
01. மண்ணரிப்பு
மண்ணரிப்பின் படிமுறைகள்
- இதில் மழை வீழ்ச்சி, மண் மேற்பரப்பில் நீர் செடிவடிதல் ஆகிய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
- இதில் ஓடும் நீரின் வேகம், காலநிலை காரணிகள் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன.
02. பௌதிக செயன்முறைகள்
- மண் இருக்கமடைதல்
- சீரற்ற நீர் வடிப்பு
- மண்ணில் சேதனப் பதார்த்தங்கள் குறைவடைதல்
- உவர் தன்மை
- மண்மாசடைதல்
- மண்ணின் ph பெறுமானம்
மற்காப்பு முறைகள்
- உயிரியல் முறை
- பொறிமுறை முறை
- பயிராக்கவியல் முறை
மண்ணின் பெறுமானத்தை திருத்தியமைக்கக் கூடிய முறைகள்.
- மண்ணின் அமிலத்தன்மையை திருத்தியமைத்தல்.
- மண்ணின் காரத்தன்மையை நீக்குதல்
- மண்ணின் உவர்தன்மையை நீக்குதல்.
மண் இறுக்கமடைவதை தடுக்கும் வழிமுறைகள்
- நவீன பயிர்ச் செய்கை கோலத்தை பயன்படுத்தல்
- மெல்லிய படையை உருவாக்குதல்
- மண் நிரம்பல் நிலையை அடையும் வரை நீரினால் நிரப்பி ஆழ்வடித்தலுக்கு உட்படுத்துதல்.
மண் இறுக்கமடைவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
- மண் இடைவௌிகளின் அளவு குறைவடைதல்.
- வேர் வளர்ச்சிக்கு தடங்கள் ஏற்படல்.
- நீர் வடிப்பு தன்மை குறைவடைதல்.
- விவசாய உபகரணங்களை பயன்படுத்துவது கடினமாதல்.
மண்ணீர் காப்பு முறைகள்
மண்ணிலிருந்து நீர் இழக்கப்படும் முறைகள்
- ஆவியாதல்
- ஆவியுயிர்ப்பு
- ஆழ் ஊடுவடிதல்
நீர் இழப்பு
- பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீரானது பயிர்களால் பயன்படுத்தப்பட முன்னர் வேறு முறைகள் மூலம் அகற்றப்படல் நீர் இழப்பாகும்.
- நீர் முதலிலிருந்து பயிர்ச் செய்கை நிலம் வரை பாசன நீரை கொண்டு செல்லும் போது ஏற்படும் நீரழப்பை குறைப்பதற்கு பினவரும் உத்திகள் மேற்கொள்ளப்படும்.
- கால்வாய்களுக்கு கொங்றீட் இடல்
- குழாயினூடு நீரை அனுப்புதல்
- கால்வாய்களில் தேவையற்ற தாவரங்கள் வளர்வதை தடுத்தல்
பயிரின் நீர்பயன்பாட்டு வினைத்திறன் உச்ச அளவாகும் வகையில் நீரிழப்பை இழிவாக்குவதற்கான உத்திகளை பயன்படுத்தல் நீர் காப்பு எனப்படும்.
பயிர்ச்செய்கை நிலத்தில் நீரிழப்பை தடுப்பதற்கான உத்திகள்
- மழை நீரை உச்ச அளவு பயன்படுத்தக் கூடியவாறு பயிர்ச் செய்கையை திட்டமிடல்.
- காலநிலை, பயிர் ஆகியவற்றுக்கு பொருத்தமானவாறு நீர்ப் பாசனத்தை மேற்கொள்ளல்.
- பயிரின் வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற வகையில் நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளுதல்.
- நீர்ப்பற்றாக்குறை நிலவும் காலத்தில் நீர்த் தேவை குறைந்த பயிர்களை தெரிவு செய்தல்.
- மண்ணின் நீர் பற்றும் திறனை அதிகரித்தல்.
- பயிர்ச் செய்கை நிலத்தை களைகளின்றி பராமரித்தல்.
- மண்ணிலிருந்து நீர் ஆவியாகும் வழிகளை தவிர்ப்பதற்கான உத்திகளை மேற்கொள்ளல்.
மண்ணீர் காப்பிற்கு உதவி பிரியும் செயற்பாடுகள்.
- மூடுபடை இடுதல்
- மூடுபயிர்ச் செய்கை
- சேதனப் பொருட்கள் சேர்த்தல்
நிலப்படுத்தல்
01. ஆரம்ப நிலை பண்படுத்தல்
02. இடைப் பண்படுத்தல்
ஆரம்ப நிலை பண்படுத்தலின் படிமுறைகள்
- முதல் பண்படுத்தல்
- துணைப் பண்படுத்தல்
- பாத்தி அமைத்தல்
முதல் பண்படுத்தல்
இறுக்கமாக உள்ள மண்ணை பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி வெட்டிப் புரட்டுதல் முதல் பண்படுத்தல் எனப்படும்.
துணைப் பண்படுத்தல்
ஆரம்ப பண்படுத்தலின் பின்னர் மண் மேற்பரப்பில் ஒப்பமான தன்மையை ஏற்படுத்தலே துணைப் பண்படுத்தலாகும்.
பாத்தி அமைத்தல்
நிலம் நன்கு பண்படுத்தப்பட்ட பின்னர் பாசண நீரை நன்கு பாயச் செய்வதற்காக / வித்து நாற்றை நடுவதற்கு உகந்தவாறு வயலை மாற்றியமைத்தல் பாத்தி அமைத்தல் எனப்படும்.
இழிவு நிலப் பண்படுத்தல்
விரைவில் வித்து முளைத்தல், வெற்றிகரமான பயிர் வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ற நிலமைகளை ஏற்படுத்துவதாகக் கொண்டு இழிவான அளவில் மண்ணை பண்படுத்தலாகும்.
வித்து / நாற்று நடும் வரிசை வலயத்திற்கு இடைப்பட்ட வரிசை வலயத்தை முன் போகத்தில் விளைச்சலை பெற்றுக் கொண்ட பின் மிகுதியாக காணப்படும் பயிர்க் கட்டைகள் உக்குவதன் மூலம் மண் இயல்புகள் விருத்தியடைவதுடன் அவ் வலயத்திலுள்ள மண்ணிலுள்ள வேர்கள் உக்குவதன் காரணமாக உருவாகும் துளைகள் வழியே நீர் வடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது.
பூச்சிய நிலப் பண்படுத்தல்
நிலத்தை பண்படுத்தாது வயலில் வித்துக்களை / நாற்றுக்களை நாட்டுவது பூச்சிய நிலப் பண்படுத்தல் எனப்படும்.
இடை வரிசை வலயத்தில் பயிர்களின் மீதிகள் மூடுபடையாக உள்ளதால் ஆவியாதல் குறைவதுடன் மண்ணங்கிகளின் செயற்பாடு அதிகரித்து மண்ணின் கட்டமைப்பு விருத்தியடைவதன் காரணமாக மண்ணினுள் நீர் கசிவு நிகழ்வது அதிகரிக்கிறது.
பரிசோதனைகளுக்கான தரவுகள் எதுவும் இப் பதிவில் வழங்கப்படவில்லை.
Superb brother
ReplyDelete