பயிர்ச் செய்கையில் மண், மண்ணீர் ஆகியவற்றின் முக்கியத்துவம்
மண்ணின் அடிப்படை கூறுகள்
மண்
மண் என்பது கனியப் பொருள், சேதனப்பதார்த்தம், வளி, நீர் மற்றும் பல்வேறு அங்கிகள் ஆகியவற்றை கொண்டதும், புவியின் மேற்பரப்பில் உள்ளதும், தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊடகத்தை வழங்குங்குவதும் மற்றும் மாற்றமடையக் கூடியதுமான உடலாகும்.
பாறைகள் வானிலையால் அழிதல்
கற்பாறைகள் சிதைவு காரணிகளால் சிதைவடைந்து தாய்ப்பாறைப் பொருளாக மாறும் செயற்பாடு பாறை வானிலையால் அழிதல் எனப்படும்.
கற்பாறை வானிலையாலழிதல் செயன்முறை

இப்பாறைகள் மூன்று வகைப்படும்
- தீப்பாறை (கருங்கல், பெக்மடைற்று)
- அடையல் பாறை (சுண்ணாம்புக் கல், முருகைக்கல்)
- உருமாறிய பாறை (மாபில், காரீயம்)
பிரதான பாறை கனிப்பொருட்கள்
- குவாட்ஸ்
- பெல்ஸபார்
- மைக்கா
மண் உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் காரணிகள்
உயிர்ப்பற்ற காரணிகள்
- தாய்ப்பாறைப் பொருள்
- காலம் / வயது
- இடவிளக்கக் காரணி
தரையின் ஏற்றம்
நோக்கியுள்ள திசை
சரிவு
உயிர்ப்பான காரணிகள்
- காலநிலை காரணிகள்
2. உயிர்க் கோளக் காரணிகள்வெப்பநிலைமழைவீழ்ச்சிசாரீரப்பதன்
தாவரங்கள்விலங்குகள்
மண்ணில் அடங்கியுள்ள அடிப்படை கூறுகள்
- மண் திண்ம பொருட்கள் (மண் சேதனப் பதார்த்தங்கள், மண் கனியுப்புக்கள்)
- மண் வளி
- மண் நீர்
- மண் அங்கிகள் (பேரங்கி, இடைநிலை அங்கி, நுண்ணங்கி)
மண் கனிப்பொருட்கள்
- மணல்
- அடையல்
- களித் துணிக்கைகள்
மண் கனிப்பொருட்களின் முக்கியத்துவம்
மணலும், அடையலும்
இவை மண்ணின் பௌதீக இயல்புகள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
களி
இது இரசாயன இயல்புகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்றது.
களிமண்ணுக்கு நீரை அகத்துறிஞ்சும் ஆற்றல் அதிகமாகும்.
மண்ணுடன் சேரும் வெவ்வேறு நச்சுத்தன்மையான அயன்களை அகத்துறிஞ்சி அவற்றினால் ஏற்படும் தீய விளைவுகளை இழிவாக்கும்.
மேலும் கற்றயன் பரிமாற்றக் கொள்ளலவை உயர்வாக கொண்டது.
மண் கனிப்பொருட்கள் அதன் விட்டத்துக்கமைய சர்வதேச மண் விஞ்ஞானச் சசங்கம் (ISSS) மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- பரல்/சிறுகல் - 2 mm இலும் அதிகம்
- பெருமணல் - 2 mm - 0.2 mm வரை
- சிறு மணல் - 0.2 mm - 0.02 mm வரை
- அடையல் - 0.02 mm - 0.002 mm வரை
- களி - 0.002 mm இலும் குறைவு
மண்ணிலுள்ள பிரதான கனிப்பொருட்களை இணங்கண்டு அறிந்து கொள்ளல்.
பரிசோதனை -
- பரல்
- பெருமணல்
- சிறு மணல்
- அடையல்
- களி
- உக்கல்/ வண்டல்

கற்றயன் பரிமாற்றம்
கற்றயன் பரிமாற்றம் என்பது மண் கரைசலிலுள்ள கற்றயன்கள், மண் மேற்பரப்பிலுள்ள கற்றயன்கள் மாற்றீடு செய்யப்படலாகும்.
மண் சேதனப் பதார்த்தங்கள்
- தாவர, விலங்குப் பகுதிகள் பிரிந்தழிவதன் மூலம் உருவாகி மண்ணுடன் சேர்க்கும் பதார்த்தங்கள் மண் சேதனப் பதார்த்தங்கள் எனப்படும்.
- பயிர்ச் செய்கை நிலத்தை விட இயற்கை காடுகளிலுள்ள மண் அதிக சேதனப் பொருட்களை கொண்டதாக காணப்படும்.
மண் சேதனப் பதார்த்தங்களின் முக்கியத்துவம்
- இரசாயன இயல்புகள் விருத்தியடைகின்றன.
- மண்ணின் அமிலத்தன்மை
- மண்ணின் காரத்தன்மை
- மண்ணின் உவர்ப்புத்தன்மை
- மண்ணின் கற்றயன் பரிமாற்ற தன்மை
- கற்றயன் பரிமாற்றக் கொள்ளளவு உயர்தல்
- மண்ணின் பௌதீக இயல்புகள் விருத்தியடையும்
- மண்ணின் அமைப்பு
- மண்ணின் நிறம்
- மண்ணின் அடர்த்தி
- மண்ணின் ஆழம்
- மண்ணின் வளியூட்டம்
- மண்ணின் கட்டமைப்பு விருத்தியடையும்
- உபகோண கட்டமைப்பு
- மணியுருவான கட்டமைப்பு
- திரள்வடிவான கட்டமைப்பு
- நிரல் வடிவான கட்டமைப்பு
- மண் நுண்ணங்கிகளின் செயற்பாடு அதிகரிக்கும்.
- மண்ணின் பொறிமுறை தடை அகற்றப்படும்
- மண்ணின் வடிப்புத்திறன் அதிகரிக்கும்
- மண்ணின் வளியூட்டம் அதிகரிக்கும்
- மண்ணின் நிறம் பேணப்படும்
- மண்ணங்கிகளின் குடித்தொகை அதிகரிக்கும்
- மண்ணின் தோற்ற அடர்த்தி குறைவடையும்

மண்ணீர்

ஈர்ப்பு நீர்
மண்ணில் நிரம்பிய நிலையில் நீர் காணப்படும் போது மண்ணின் நுண்துளை, பெரும் துளை ஆகியவற்றில் காணப்படும் நீர் ஈர்ப்பு நீர் எனப்படும்.
இந்நீர் புவியிர்ப்பு விசை காரணமாக இலகுவில் வடிந்து செல்லக்கூடியது. எனவே இது தாவரங்களுக்கு பயன்படாத நீராகும்.
மயிர்த்துளை நீர்
மண்ணின் நுண் துளைகளுள்ளே நிலைக்குத்தாகவும், கிடையாகுவும் அசையும் நீராகும் இந்நீரை மண் துணிக்ைககள் மிகக் குறைந்தளவு இழுவிசையுடன் பிடித்து வைத்திருக்கும் இந்நீரை மட்டுமே தாவரங்கள் பயன்படுத்துகின்றன. எனவே, மண்ணில் காணப்படும் நீரில் தாவரங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே ஒரு நீர் மயிர்த்துளை நீராகும்.
மண் துணிக்கைகளுக்கிடையிலான நுண் துளை இடைவௌிகள் அதிகரிக்கும் போது மயிர்த்துளை நீரும், மயிர்த்துளை நீரின் அளவும் அதிகரிக்கும்.
இதன் மூலம் மண்ணின் நீர் பற்றுத்திறன் அதிகரிக்கும்.
பருகு நீர்
பருகு நீரானது மண் துணிக்கைகளுடன் மிக இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும். இதனால் தாவரவங்களால் இந்நீரை உறிஞ்ச முடியாது ஆகையால், தாவரங்களுக்கு பயன்படாத நீராகும்.
பருகு நீரானது மண் திண்மத்தினால் மிகக் கூடிய இழுவிசையுடன் பிடித்து வைத்திருக்கும்.
24 மணி நேரம் ஏறத்தாள 105 பாகை செல்சியஸ் இல் கனவடுப்பில் மண்ணை உலர்த்தும் போது மட்டுமே இந் நீரை அகற்றலாம்.
நிரம்பல் நிலை
போதியளவு மழை பெய்தபோது அல்லது நீர்ப்பாசனம் செய்யப்பட்டவுடன் மண் துளைவௌிகள் அனைத்தும் நீரால் நிரம்பிக் காணப்படும். இந் நிலை நிரம்பல் நிலை எனப்படும்.
வயற் கொள்ளளவு நிலை
புவியீர்ப்பு நீர் வடிந்து சென்ற பின்னர் எஞ்சியுள்ள நீர் அதாவது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக பற்றி வைத்திருக்கக் கூடிய நீரே மண்ணில் எஞ்சியிருக்கும். இந்த நிலையில் மண் வயற் கொள்ளளவு நிலை யில் உள்ளது எனப்படும்.
பருகு நீர் - நன்றாக வாடும்
மயிர்த்துளை நீர் - வாடல் நிலை
புவியீர்ப்பு நீர் - வடிந்து செல்லும்
மண்ணீரின் முக்கியத்துவம்
- தாவர வளர்ச்சியில் உதவும்.
- மண் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டிற்கு உதவும்.
- மண் சேதனப் பொருட்களின் பிரிகையில் மண்ணீர் துணை புரியும்.
- மேலும் மண்ணில் இரசாயன தாக்கங்கள் நடை வெறுவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் மண்ணீர் அவசியமாகும்.
மண் வளி

மண்வளியில் காபனீரொட்சைட்டு அதிகம் காணப்படுவதற்கான காரணங்கள்.
- தாவர வேர்களின் சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டு வௌிவிடப்படல்.
- மண்ணங்கிகளின் சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டு வௌிவிடப்படல்.
- சேதனப் பொருட்களின் பிரிகையின் போதும் சேதன அமிலங்களுடன் காபனீரொட்சைட்டு வௌியிடப்படுல்.
மண் வளியின் முக்கியத்துவம்
- தாவர வேர் சுவாசத்தில் இது உதவுகிறது.
- மண் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டிற்கு மண் வளி அவசியமாகும்.
- மண் சேதனப் பொருட்களின் பிரிகை செயற்பாட்டிற்கு மண்வளி அத்தியவசியமாகும்.
- பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காற்றின் வாழ் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டை குறைக்கவும் மண் வளி அவசியம்.
மண் வளியூட்டத்தை பின்வரும் முறைகளில் அதிகரிக்கச் செய்யலாம்.
- விவசாய நிலத்தை நன்கு உழுது பண்படுத்தல்.
- மண்ணுக்கு அதிகளவு சேதனப்பசளை இடல்
- மண்ணின் மேற்படையை மென்மையாக்கல்
- மண்ணில் காணப்படும் மேலதிக நீரை வடிப்புச் செய்வதால் மண்ணில் தேங்கி நிற்கும் மண் நீர் குறையும் எனவே, மண்ணீரை வடிப்பு செய்யும் போது மண் வளி அதிகரிக்கும்.
- மண் கட்டமைப்பை விருத்தி செய்தல்
மண் வளியின் சதவீதம் குறைவடையும் போது விவசயாத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்.
- தாவர வேர் சுவாசம் பாதிக்கப்படும்.
- தாவர வேர் சுவாசம் பாதிக்கப்படுவதால் தாவர வேர் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
- தீங்கு விளைவிக்கக் கூடிய தாற்றின்றி வாழ் நுண்ணங்கிகளின் குடித்தொகை பெருகி பயிர்களுக்கு நோய் விளைவிக்கும்.
- சேதனப் பொருட்களின் பிரிகை பாதிப்படையும்.
- மண் கனிப்பொருட்களின் அளவு குறைவடைவதால் பயிர்களுக்கு கிடைக்கும் கனிப்பொருட்களின் அளவு குறைவடையும்.
மண் அங்கிகள்

Comments
Post a Comment