கொங்ரீட்டு
கொங்ரீட்டு எனப்படுவது பினைப்புப் பொருள் , நுன் மணல், சிறு கல் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு செயற்கை பாறையாகும்.
கொங்ரீட்டின் கூறுகள்
- பினைப்புப் பொருள் - பினைப்புப் பொருள் எனப்படுவது கொங்ரீட்டில் பயன்படுத்தப்படும் கூறுகளை பினைக்கும் பொருள் ஆகும். கொங்ரீட்டில் சீமேந்து பினைப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.
- நுண் மணல் - இதற்காக ஆற்று மணல் பயன்படுத்தப்படும். மணல் துணிக்ணை ஒன்றின் விட்டத்தை அடிப்படையாக வைத்து மணல் தரம் பிரிக்கப்படுகின்றது.
- சிறுகல் - சிறு கற்கள் பெரிய பாறைகளை உடைப்பதன் மூலம் பெறப்படும். சிறுகல் அதன் அளவைக் கொண்டு தரம் பிரிக்கப்படும்.
- நீர் - கொங்ரீட்டுக்காக பயன்படுத்தப்படும் நீர் ஆனது சுத்தமாக காணப்படுதல் வேண்டும்.
கொங்ரீட்டு பயன்படுத்துவதன் அணுகூலம்
- இழுவை வழு மற்றும் நெருக்கல் வலுவைத் தாங்கக் கூடியதாக காணப்படுதல்.
- நீடித்த உழைப்பு
- எந்த இடத்திலும் பயன்படுத்த முடியுமானதாக காணப்படுதல்
- சூழல் காரணிகளுக்கு ஈடு கொடுத்தல்
கொங்ரீட் இடும் செயன்முறை
- பொருற்களை அளத்தல்
- பொருற்களை கலத்தல்
- கொண்டு செல்லல்
- இடுதல்
- இருக்குதல்
- பதப்படுத்தல்
பொருட்களை அளத்தல்
- கொங்ரீட் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருற்களை அளத்தல் ஆனது கொங்ரீட்டு உற்பத்தியின் முதல் படியாகும்.
- கொங்ரீட் கலக்கப்பட வேண்டிய விகிதம் மற்றும் தேவைப்படும் கொங்ரீட்டின் அளவானது இதன் போது கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
- மூலப் பொருற்களை அளப்பதற்காக மானிப் பெட்டிகள் பயனப்படுத்தப்படுதல் வேண்டும்.
- மேலும் இம் மானிப் பெட்டிகள் நியம அளவில் இருப்பது அவசியமாகும்
பொருட்களை கலத்தல்
- விகிதத்திற்கேற்ப அளந்து கொள்ளப்பட்ட மூலப்பொருற்கள் ஆனது மேடை ஒன்றில் கலக்கப்படும்.
- கலத்தல் செயற்பாடு ஆனது கைமுறையிலும், இயந்திர முறையிலும் மேற்கொள்ளப்படும்.
- கைமுறையில் கலக்கப்படும் போது நீர் புகா மேடை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டு கலக்கப்படும்.
கொண்டு செல்லல்
- மூலப்பொருற்கள் கலந்து தயார் செய்யப்பட்ட கொங்ரீட் கலவையானது கொங்ரீட் இடப்படவேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
- கொங்ரீட் கலவை கொண்டு செயல்லப்படும் போது நீர் கசியாமல் கொண்டு செல்வது அவசியமாகும்.
- கலவை யானது இருக்கமடையும் காலம் முடிவடைய முன்னர் கொண்டு செல்லப்படுதல அவசியமாகும்.
கொங்ரீட்டை இடுதல்
- கொங்ரீட்டை இடும் போது அதற்காக தயார் செய்யப்பட்ட சட்டகத்தினுல் முறையாக இடுதல் அவசியமாகும்.
- மேலும் தூரத்தில் இருந்து கொட்டும் போது கொங்ரீட்டின் மூலப் பொருற்களின் நிலை மாறுவதால் (சிதறுதல்) குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இடுதல் அவசியமாகும்.
இருக்குதல்
- கொங்ரீட்டானது முறையாக அமைக்கப்பட்ட சட்டகத்தினுள் இடப்பட்ட பின் கொங்ரீட்டினுள் சிறிய காற்றுக் குமிழிகள் காணப்படும்.
- இதனால் கொங்ரீட்டில் தேன்கூட்டுத் துளைகள் ஏற்படும்.
- இக் குமிழிகளை அகற்குவதற்காக இருக்குதல் செயன்முறையானது மேற்கொள்ளப்படும்.
- இது கைமுறையிலும் இயந்திரங்களைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளப்படுகின்றது.
பதப்படுத்தல்
- கொங்ரீட் இட்டு இருக்கப்பட்ட பின் அதில் காணப்படும் நீர் விரைவாக வௌியாகும் சந்தர்ப்பத்தில் கொங்ரீட்டின் வளிமை குறைவடையும்.
- எனவே நீர் ஊற்றி அல்லது ஈர சாக்கினால் மூடி பதப்படுத்தப்படுவதன் மூலம் கொங்ரீட்டின் வளிமை பாதுகாக்கப்படும்.
கொங்ரீட் பகுதிகளில் சுமை தௌிட்படும் விதம்.
பொதுவாக கொங்ரீட் ஆனது இழுவை , நெருக்கல் சுமையை தாங்கக் கூடியவாராக காணப்படும்.

கொங்ரீட்டு வலுவூட்டல்
- கொங்ரீட்டு மீது நெருக்கல் மற்றிம் இழுவை சுமைகள் ஆனது தாக்கும். என்னினும் கொங்ரீட்டு ஆனது இழுவை வலுவை தாங்கும் திறன் குறைவானதாகும்.
- எனவே இழுவை சுமை ஏற்படும் இடத்தில் வலுவூட்டல் அவசியமாகும்.
- இழுவை சுமை ஏற்படும் இடம் ஆனது இழுவை வலையம் எனப்படும்.



கொங்ரீட்டின் வகைப்பாடு
வகை 01
- முன் வார்ப்பு
- ஓரிட வார்ப்பு
முன் வார்ப்பு
முன் வார்ப்பு எனப்புவது கொங்ரீட் இடப்படவேண்டிய பகுதியை வேறு ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்ட பின் அதனை கொங்ரீட் இடப்படவேண்டிய பகுதிக்கு இடுதல் ஆகும்.
முன் வார்ப்பின் அணுகூலம்
- தயாரித்தல் நேரம் சேமிக்கப்படும்.
- தயாரித்தலின் போது சூழல் காரனிகளால் ஏற்படும் தாக்கம் இல்லை
முன் வார்ப்பின் பிரதிகூலம்
- தயாரித்த பகுதியினை இடமாற்றும் போது ஏற்படும் சிறமம்/ செலவு.
- தயாரித்த பகுதியினைப் பொருத்தும் போது பாதிப்பு ஏற்படலாம்.
ஓரிட வார்ப்பு
ஓரிட வார்ப்பு எனப்புவது கொங்ரீட் இடப்படவேண்டிய பகுதியிலேயே கொங்ரிட் கலவை தயாரிக்கப்பட்டு சட்டகத்தில் இடப்படுதல் ஆகும்.
ஓரிட வார்ப்பின் அணுகூலம்
- செலவு குறைவு
- இடம் மாற்றும் போது ஏற்படும் சேதம் இல்லை
ஓரிட வார்ப்பின் பிரதிகூலம்
- சூழல் காரணிகளால் பாதிப்பு ஏற்படலாம்.
- முன் வார்ப்புடன் ஒப்பிடும் போது நேரம் அதிகம்.
வகை 02
- சதாரன கொங்ரிட்
- வலுவூட்டப்பட்ட கொங்ரிட்
சாதாரன கொங்ரிட்
- வலுவூட்டல் பொருற்கள் (கம்பி) எதுவும் பயன்படுத்தப்படாமல் உற்பத்தி செய்யப்படும் கொங்ரிட்டு சாதாரன கொங்ரிட் எனப்படும்.
- இது பொதுவாக தரையில் இடப்படும் கொங்ரிட்டுக்காக பயன்படுத்தப்படும்.
- சாதாரன கொங்ரிட் பயன்படுத்தும் பொது வலுவூட்டல் பொருட்கள் பயன்படுத்தப்படாததால் செலவு குறைவு.
- எனினும் சுமை அதிகம் தாங்கும் நிர்மானங்களுக்கு பயனப்டுத்த முடியாது.
வலுவூட்டப்பட்ட கொங்ரிட்
- வலுவூட்டப்பட்ட கொங்ரிட் ஆனது அதிக சுமை தாங்கும் நிர்மானங்களுக்காக பயன்படுத்தப்படும்.
- யன்னல் மேல் போடப்படும் லின்டல், தூன் போன்ற நிர்மானங்களுக்கு வலுவூட்டப்பட்ட கொங்ரிட் பயன்படுத்தப்படும்.
- சாதாரன கொங்ரிட்டுடன் ஒப்பிடும் போது செலவு அதிகம்.
- எனினும் அதிகம் சுமை தாங்கும் நிர்மானங்களுக்கு பொருத்தமானது.
கட்டடம் ஒன்றின் மீது தொழிற்படும் சுமைகள்
கட்டடம் ஒன்றிம் மீது தொழிற்படும் சுமை எனப்படுவது கட்டடத்தின் மீது தொழிற்படும் விசையாகும்.
இவ்வாறு கட்டடத்தில் தொழிற்படும் சுமைகள் 04 வகைப்படுத்தப்படும்.
- உயிர்ச் சுமை
- மாய் சுமை / மாயச் சுமை
- சூழற் சுமை
- வேறு சுமை
உயிர்ச் சுமை
கட்டடத்தில் உள்ள அசையும் பொருற்களால் ஏற்படுத்தப்படும் சுமை (விசை) உயிர்ச் சுமை எனப்படும்.
உதாரணம் -
- கட்டடத்தில் உள்ள கதிரை
- கட்டடத்தில் உள்ள மேசை
- கட்டத்தில் நடமாடும் மனிதன்/ விலங்குகள்
மாய் சுமை/ மாயச் சுமை
கட்டடத்தில் உள்ள அசையாத/ நிலையான பொருற்களால் ஏற்படுத்தப்படும் சுமை (விசை) உயிர்ச் சுமை எனப்படும்.
உதாரணம் -
- யன்னல்
- கதவு
- தூன்
சூழற் சுமை
சூழலில் இருந்து கட்டத்திற்கு கொடுக்கப்படும் சுமை/விசை சூழற் சுமை எனப்படும்.
உதாரணம் -
- பணி
- மழை
- காற்று
வேறு சுமை
மேல் குறிப்பிட்ட சுமை வகைப்பாட்டுக்குள் அடங்காத அனைத்து சுமைகளும் இவ் வகைக்குள் அடங்கும்.
உதாரணம் -
- வாகன சத்தம்
Comments
Post a Comment