கட்டட நிர்மானம்
கட்டட நிர்மானத்தில் பயன்படுத்தப்படும் பொருற்கள் மற்றும் அவற்றின் வகைப்பாடு
கட்டட நிர்மானத்தின் போது பல வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அமைய இப் பொருட்கள் வகைப்படுத்தப்படும்.
பொதுவான கட்டடப் பொருற்கள்
- அரிமரம்
- இரும்பு
- செங்கள்
- சிமேந்து
- திரள் பொருள்கள்
- பருங்கல்
- சுண்ணாம்பு
இவற்றில் சாந்து, கொங்ரீற்று, அரிகல் என்பன கூட்டுக்கட்டட பொருற்கள் எனப்படும். (பல பொருற்கள் கூட்டாக பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுபவை)
கட்டட நிர்மாணப் பொருட்களின் பாகுபாடு
பாகுபாடு 01
மூலகத்திற்கு அமைய/ உற்பத்திக்கு அமைய
- இயற்கையானவை (பருங்கல்)
- உற்பத்தி செய்யப்பட்டவை/ செயற்கை (PVC குளாய்)
பாகுபாடு 02
பயன்பாட்டுக்கு அமைய
- திண்மப் பொருட்கள் (செங்கல்)
- பிணைப்புப் பொருள்கள் (சீமேந்து)
- பாதுகாப்புப் பொருள்கள்
கட்டட நிர்மாணப் பொருட்களின் இயல்புகள்
கட்டட நிர்மாணப் பொருட்களை தெரிவு செய்வதற்கு முன்னர் அவற்றின் இயல்புகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். (அலகு 02 குறிப்பிடப்பட்டுள்ளது)
- பொளதிக இயல்புகள் - அடர்த்தி, பயன்படுதன்மை, போற்றம்
- பொறிமுறை இயல்புகள் - நெருக்கற்திறன், இழுவிசை, அடர்த்தி
- வெப்ப இயல்புகள் -எரிபற்று நிலை, கொதிநிலை, விரிவுக் குணகம்
- இரசாயன இயல்புகள் -அரிப்படையும் தன்மை, நீர்மயமாகும் தன்மை
கட்டட நிர்மாணப் பொருட்களை தெரிவு செய்யும் பொது மேலுள்ள இயல்புகள் கருத்திற் கொள்ளப்படுவதோடு அப் பொருற்களின் உற்பத்தியின் போதும் பயன்பாட்டின் போதும் ஏற்படும் சூழற் பிரச்சினைகளும் கருத்திற் கொள்ளப்படும். இவ்வாறான காரணிகள் (பொருளின் இயல்பு, சூழற் பிரச்சினை) ஆராயப்பட்ட பின்னர் அப்பொருற்கள் கட்டட நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்படுவதோடு அவை பொருத்தமற்றதாக காணப்படுமாயின் அப் பொருளுக்கான பிரதியீட்டுப் பொருற்கள் பயனப்டுத்தப்படும்.
சூழற் பிரச்சினைகள் சில
- சீமேந்து உற்பத்தியின் போது காற்று மாசு ஏற்படுதல்.
- பருங்கல் உடைத்து எடுக்கப்படும் பொது பாதிப்பை ஏற்படுத்தும் கனியங்கள் நீரில் கலத்தல்.
- நிரப்பூச்சு பயன்பாட்டினால் காற்று மாசு அடைதல்
செங்கல் கட்டு
செங்கல் கட்டுகளானது பொதுவாக மறைப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
செங்கல்

செங்கல் துண்டுகள்

செங்கல் உற்பத்தி படிமுறைகள்
- களிமன்னைப் பெறல்
- செங்கல்லை வடிவமைத்தல்
- செங்கல்லை உலர்த்தல்
- செங்கல்லை சுடுதல்.
செங்கல் ஒன்றின் இயல்புகள்
- 24 மனி நேரம் நீரில் வைத்த பின் செங்கல்லின் நிறை ஆனது அதன் பழைய நிறையை விட 20% இனால் அதிகரிக்காதிருத்தல்.
- நீளம், அகலம், உயரம் என்பன நியம அலவில் காணப்படுதல்.
- 1.5 மீற்றரில் இருந்து தலைப்பக்கம் கீழ் நோக்கி வருமாரு போடும் போது உடையாது இருத்தல்
- கல்லை தட்டும் போது முழுமையாக சுடப்பட்ட செங்கலில் ஏற்படும் சத்தம் எழுதல்.
- வெடிப்புகள் அற்றதாக காணப்படுதல்.
- செங்கல்லின் நிறம் மாறாது காணப்படுதல்.
செங்கல் கட்டு

செங்கல் கட்டு வகைகள்
தலைக்கல் கட்டு

- இக் கட்டு வகையானது வலைந்த/ வட்ட வடிவான நிர்மாணங்களுக்கு பயன்படுத்தப்படும்.
- இதன் கவிவு செங்கல் ஒன்றின் நீளத்தில் 1/4 ஆகும்.
- இது செங்கல் ஒன்றின் தலைப்பக்கம் வௌியில் தெரியுமாறு கட்டப்படும்.
நீடிசைக்கல் கட்டு
L Junction


- இக் கட்டு வகையானது குறைந்த பாரம் தாங்கும் நிர்மாணங்களுக்கு பயன்படுத்தப்படும்.
- இதன் கவிவு செங்கல் ஒன்றின் நீளத்தில் 1/2 மடங்கு ஆகும்.
- இது செங்கல் ஒன்றின் நீடிசைப்பக்கம் வௌியில் தெரியுமாறு கட்டப்படும்.
ஆங்கில கட்டு

L Junction

T Junction

- இக் கட்டு வகையானது அதிக பாரம் தாங்கும் நிர்மாணங்களுக்கு பயன்படுத்தப்படும்.
- இதன் கவிவு செங்கல் ஒன்றின் நீளத்தில் 1/4 மடங்கு ஆகும்.
- தலைக்கல் கட்டு, நீடிசைக் கல் கட்டு மாறி மாறி கட்டப்படும் கட்டாகும்.
- நீடிசைக் கல் வரியில் ஆரம்ப மற்றும் இருதி தலைக் கல்லுக்கு முன்னால் ஒரு இரானி முடிப்பு இடப்படும்.
பிளமிசுக் கட்டு

L Junction

T Junction

- இக் கட்டு வகையானது அதிக பாரம் தாங்கும் நிர்மாணங்களுக்கு பயன்படுத்தப்படும்.
- இதன் கவிவு செங்கல் ஒன்றின் நீளத்தில் 1/4 மடங்கு ஆகும்.
- ஒரே வரியில் தலை மற்றும் நீடிசைக் கல் வரி மாறி மாறி வரும்.
- ஆங்கிலக் கல் கட்டு போன்றே ஒரு வரியில் ஆரம்ப மற்றும் இருதி கற்களுக்கு முன்னால் இரானி முடிப்பு இடப்படும்.
சாந்து வகைகள்
- களிச் சாந்து
- சுன்னாம்பு மணல் சாந்து
- சீமேந்து மணல் சாந்து
- சீமேந்து சுண்ணாம்பு மணல் சாந்து

Comments
Post a Comment