1. இரவில் கண்விளித்து கற்றல் (Studying At Night) இரவில் கண்விளித்து கற்றல் ஆனது மனித மூளையின் வினைத்திறனை குறைக்கும் என்பது விஞ்ஞான ரீதியாக உருதிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாகும். இரவில் கணிவிழித்து கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதால் மூளையின் விணைத்திறனை குறைக்க வழிவகுப்பதோடு இதனால் மனிதன் உடல் சோர்வு மற்றும் மனிதனின் பௌதீக செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் இரவு நேரம் என்பது அமைதியான நேரம் என்பதால் இரவில் சாதாரனமாக (கண்விழிக்காமல்) படிப்பது வரவேற்கத்தக்கதாகும். எனவே நீங்கள் இரவு வேளையில் படிப்பவராக இருந்தால் உங்களுடைய உறங்கும் அளவை கருத்தில் கொள்வது முக்கியமாகும். இது கற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிப்பதுடன். மணணம் செய்யும் திறனையும் அதிகரிக்கின்றது. 2. பாடங்களை வகைபிரித்து கற்றல் (Categorize the subjects) அளவில் பெரிய பாடங்களை கற்கும் போது மனித முளையானது அதிகமாகவும் விரைவாகவும் சோர்வடையும். பொதுவாக மனிதன் தொடர்ந்து 20 இலிருந்து 30 நிமிடக் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டாலே சேர்வடைவான என்பது விஞ்ஞான ரீதியாக உருதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும். இதன் மூலம் கற்றல் ச...
வணிக வளங்கள் / உற்பத்தி காரணிகள் வணிக செயற்பாடுகளின் போது உள்ளீடாக பயன்படுத்தபடும் அனைத்தும் வணிக வளங்கள் ஆகும். க.பொ.த உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தில் வணிக வளங்கள் 07 வகையாக வகைப்படுத்தபடும். ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றை அடிப்படையாக கொண்டு இதனை பார்க்களாம் 1. நிலம் : உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் இயற்கை வளங்கள் நிலம் ஆகும். உதாரணம் : • கட்டடம் அமைந்துள்ள காணி • கட்டடத்திற்குக் கிடைக்கும் காற்றோட்டம் • சூரிய ஒளி (இயற்கையான வெளிச்சம்) 2. உழைப்பு : உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் ஊழியர்களின் உடல் இ உளரீதியான பங்களிப்பு உழைப்பு ஆகும். உதாரணம் : • ஆடை தைப்பவரின் உடல் , உளரீதியான உழைப்பு • மேற்பார்வையாளர்களின் உடல், உளரீதியான உழைப்பு • முகாமையாளர்களின் உளரீதியான உழைப்பு • காவலாளிகளின் உழைப்பு 3. மூலதனம் : மனிதனால் உருவாக்கப்பட்டு மீண்டும் உற்பத்தியில் உள்ளீடாக் பயன்படுத்ததடும் வளங்கள் மூலதனம் ஆகும். உதாரணம் : • கட்டடம் • தையல் இயந்திரம், உபகரணங்கள...